கலால் துறை

வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வந்த கார் இரண்டு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில்   தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோக சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ!



மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குரங்கு தோப்பு பகுதியை – சேர்ந்தவர் கண்ணன் (52) இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் பணி செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது மகள் சுவாதி (25) அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மதுரை நான்கு வழி சாலையில் வாடிப்பட்டி சானாம்பட்டி பிரிவில்  தேனியிலிருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்த

கார் இரண்டு சக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த  இருவரும்  தூக்கி வீசப்பட்டு

பலத்த காயங்களுடன்  ரத்த வெள்ளத்தில்   இருந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள்

கண்ணன்,மகள் சுவாதி இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறினர்.


விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர். தந்தை மகள் ஒரே நேரத்தில் விபத்தில் சிக்கிய பிறந்த சோகத்தில் மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் கதறி அழுதனர்.
இரண்டு சக்கர வாகன மீது கார் மோதிய விபத்தில்  தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button