நூதன முறையில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா போதைப் பொருள் விற்பனை அமோகம்!
பெரியகுளம் காவல் உட்கோட்டத்தில் மாதம் 10 லட்ச ரூபாய் வரை மாமூல் வசூல் செய்யும் 5 பேர் கொண்ட அங்கீகரிக்கப்படாத காவல் சிறப்பு தனிப்படை ! அதிர்ச்சித் தகவல்!
விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பாரா தென்மண்டல ஐஜி!

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கவும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அவர்கள் சொத்து மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்துகளையும் முடக்கி காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்படுவதோடு அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு
கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்த போதிலும் விற்பனையை தடுக்க முடியவில்லை என்கின்றனர் .
தேனி மாவட்டத்தில் போடி, உத்தம பாளையம்
தேனி நகரம், ஆண்டிபட்டி, பெரியகுளம் துணை ஆகிய 5 துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் உள்ளன.
தேனி மாவட்டம் முழுவதும் கஞ்சா போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் அரசு டாஸ்மார்க் மதுபானக்கூடங்களில் காலை முதல் சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென் மண்டல ஐஜி ஆகியோருக்கு முகநூல் மூலமாக தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர்.
இந்த புகாரின் அடிப்படையில் தேனி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு சரக்குகளை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகள் மூலம் கஞ்சா கடத்தி வந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வத்தலகுண்டு மற்றும் தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் வயது மொத்தமாக விற்பனை செய்து வருவதை வாங்கி வரும் கஞ்சாவை. 10 முதல் 15, 25, 50 கிராம் என நான்கு விதமாக காகிதங்களில் பொட்டலம் மடிக்கின்றனர். எடைக்கு தகுந்தாற்போல் 25 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பொட்டலங்கள் விற்கப்படுகிறது.
பெரியகுளம் காவல் உட்கோட்ட
பெரியகுளம் நகர் காவல் நிலையம் தென்கரை காவல் நிலையம் ஜெயமங்களம் காவல் நிலையம் தேவதானப்பட்டி காவல் நிலையம் ஆகிய நான்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பாக பெரியகுளம் பகுதியில் தினமும் 5 கிலோ கஞ்சா வரை வியாபாரம் செய்வதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
பெரியகுளம் நகர் பகுதிகளில் பஸ்ஸ்டாண்ட், தண்டுப்பாளையம், பாம்பாற்று பாலம், வராகநதி பாலம்
தாமரைக்குளம் அடியில் வடுகபட்டி கஞ்சா விற்பனை நடப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
கஞ்சா விற்பனை செய்பவர்களின் ரகசிய செல்போன் எண்களை கொடுத்து போன் செய்தால் அவர்கள் இருக்கும் இடங்களுக்கு வந்து கஞ்சாவை கொடுத்து பணத்தை பெற்றுக்கொண்டு
அமோகமாக தங்கு தடையின்றி விற்பனை நடைபெறுவதாகவும்
சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தொடர்பு கொண்டால் தங்களுக்கும், கஞ்சாவுக்கு தொடர்பு இல்லாதது போல நடித்து விடுகின்றனர். இதில் இளைஞர்கள் மட்டுமின்றி முதியவர்களும் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் சுலபமாக கிடைப்பதால் கூலித் தொழிலாளிகள் முதல் படித்த இளைஞர்கள் வரை சுலபமாக கிடைக்கும் கஞ்சா மற்றும் போதை பொருள்களை வாங்கி பயன்படுத்தி கஞ்சா போதைக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர் .
இரவு நேரங்களில் கஞ்சா வியாபாரிகளால் பல்வேறு சமூகவிரோத செயல்களும் நடந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சற்றுகின்றனர்.
அது மட்டுமில்லாமல் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் சட்டவிரோதமாக அரசு மதுபானக்கூடங்களில் கள்ளச்சந்தையில் மது பாட்டில் அதிக விலைக்கு விற்பனை நடப்பதாகவே இது சம்பந்தமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் கொடுத்து வருவதாகவும் ஆனால் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையா !?இல்லையா!? என
பெரியகுளம் காவல் உட்கோட்ட பகுதிகளில் நடக்கும் கஞ்சா மட்டும் லாட்டரி விற்பனை மற்றும் மதுபாட்டில் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது அவர்கள் அதிர்ச்சி தரும் தகவல்களை தற்போது தெரிவித்துள்ளனர்.
அது என்னவென்றால் தற்போது

பெரியகுளம் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக நல்லு இருக்கிறார். இவர் இதற்கு முன்பு உசிலம்பட்டியில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது உசிலம்பட்டி காவல் உட்கோட்ட பகுதிகளில் காவல்துறைக்கு சவாலாக இருந்த கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது பெரியகுளம் துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பின்பு அவரின் செயல்பாட்டின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதற்குக் காரணம் பெரியகுளம் காவல் உட்கோட்ட அங்கீகரிக்கப்படாத காவல் சிறப்பு தனிப்படை 5 பேர் கொண்ட குழு இருப்பதாகவும்
அங்கீகரிக்கப்படாத அடிப்படை பிரிவில் தண்டபாணி மற்றும் பாண்டி ஆகிய இரண்டு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜேந்திரன் பால்பாண்டி வேல்முருகன் மூன்று தலைமை காவலர்கள் இருப்பதாகவும் இவர்களுக்கு துணையாக மறைமுகமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜா இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .
அங்கீகரிக்கப்படாத காவல் சிறப்பு தனிப்படை பிரிவில் உள்ள ஐந்து பேர் காவல் நிலையங்களுக்கு வராமல் காவல் உடை அணியாமல் பெரியகுளம் காவல் உட்கோட்ட காவல் நிலையங்கள் உள்ள பகுதிகளில் அதாவது பெரியகுளம் நகர் தென்கரை காவல் நிலையம் தேவதானப்பட்டி காவல் நிலையம் ஜெயமங்கலம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வலம் வருவதாகவும்
சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதைப்பொருள் மற்றும் லாட்டரி ,கள்ளச் சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்பவர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தாலும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் நபர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் இதற்கு முக்கிய காரணம் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் லாட்டரி மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்களிடம்
மாதம் சுமார் பத்து லட்சம் வரை அங்கீகரிக்கப்படாத காவல் தனிப்படை குழு மாமூல் வசூல் செய்து வருவதாகவும் இந்தப் பணம் காவல் அதிகாரிகளுக்கு பிரித்து கொடுக்கப் படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பெரியகுளம் காவல் உட்கோட்ட பகுதிகளில் நடக்கும் குற்றங்கள் சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் அதற்கு காரணம் என்னவென்றால் சமூக ஆர்வலர் கொடுக்கும் புகார் மனுக்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வைக்கு கொண்டு செல்வதில்லை என்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை காவலர்கள் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் மக்கள் கொடுக்கு. புகார் மீது ரசீது மட்டும் கொடுத்துவிட்டு அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பாமல் மறைத்து விடுவதாகவும் அதிர்ச்சி தகவலையும் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், மாவட்ட எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், மற்றும் காவல் ஆய்வாளர்களின் கீழ் செயல்பட்ட அங்கீகரிக்கப்படாத சிறப்பு தனிப்படை காவல் குழுக்களை கலைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி, இந்த தனிப்படைகளில் பணியாற்றிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் உடனடியாக மாற்றுப் பணிகளில் அமர்த்தப்பட வேண்டும் என கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரியாமல் தேனி மாவட்டம் பெரியகுளம் சப் டிவிஷனில் மட்டும் ஐந்து பேர் கொண்ட அங்கீகரிக்கப்படாத
காவல் சிறப்பு தனிப்படை குழு செயல்படுவதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் உட்கோட்ட பகுதிகளில் அடிக்கடி உற்ற சம்பவங்கள் நடப்பதாக வரும் புகார்களுக்கு காவல் நிலையங்களில் போதுமான காவலர்கள் இல்லாததால் பல இடங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை விரைந்து சென்று தடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும் நிலையில் அங்கீகரிக்கப்படாத தனிப்படை குழு எப்படி செயல்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் உண்மையிலேயே பெரியகுளம் காவல் உட்கோட்டத்தில் அங்கீகரிக்கப்படாத ஐந்து பேர் கொண்ட தனிப்படை காவல் குழு செயல்படுகிறதா என தென்மண்டல ஐஜி அவர்கள் நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் கள்ளச் சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்யும் சமூகவிரோதிகளுடன் பெரியகுளம் காவல் உட்கோட்டத்தில் அங்கீகரிக்கப்படாத தனிப்படை குழுவுக்கு தொடர்பு இருப்பதாகவும் மாதம் 10 லட்சம் வரை மாமுல் வசூல் செய்வதாகவும் வரும் குற்றச்சாட்டு உண்மையா எனவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அப்படி விசாரணை மேற்கொண்ட பட்சத்தில் அங்கீகரிக்கப்படாத தனிப்படை குழு செயல்பட்டது தெரிய வந்தால் அவர்கள் மீது துறை ரீதியாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐ ஜி மற்றும் டிஐஜி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமில்லாமல்
தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் உட்கோட்டம் தேவதானப்பட்டி பெரியகுளம் நகர் தென்கரை ஜெயமங்களம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா போதை பொருள் தடை செய்யப்பட்ட லாட்டரி கள்ளச் சந்தையில் மது பாட்டில் ஆகியவற்றை சட்ட விரோதமாக விற்பனை செய்யும் சமூக விரோதிகளின் மீது தென்மண்டல ஐஜி மற்றும் டிஐஜி மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் லாட்டரி ஆகிய விற்பனைகளை முற்றிலும் ஒழிக்க நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்கள் மற்றும் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் உட்பட ஆறு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மட்டுமில்லாமல்
லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓபன் மைக்கேல் கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள காவலர்களுக்கு எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.
பொறுத்திருந்து பார்ப்போம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செயல்பாட்டை..