காவல் செய்திகள்

மனித உரிமை மீறலில் செயல்பட்டதாக அருண் ஐ.பி.எஸ் உள்ளிட்ட 13 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுப்பதாக தமிழக அரசு செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

மனித உரிமை மீறலில் செயல்பட்டதாக அருண் ஐ.பி.எஸ் உள்ளிட்ட 13 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுப்பதாக தமிழக அரசு செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!


திரு. மு.க. ஸ்டாலின்

மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்

தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்

தலைமை செயலகம், சென்னை -9



பொருள்: தமிழ்நாடு சிபிசிஐடி ஓ.சி.யூவைச் சேர்ந்த A. அருண் ஐ.பி.எஸ் உள்ளிட்ட 13 காவல்துறை அதிகாரிகள் உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் என்ற அமைப்பின் தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான நான் பொதுநலன் கருதி 12.11.2008 அன்று நடைபெற்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல், 19.02.2009 அன்று நடைபெற்ற உயர்நீதிமன்ற வன்முறை நிகழ்வுகள் குறித்து

காவல்துறையினருக்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஒரே காரணத்திற்காக என் மீது பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து பெரிய மேம்பாலம் கட்ட பயன்படுத்திய கனமான இரும்புக்கம்பி, தடிமனான உருட்டுக்கட்டை, கைத்துப்பாக்கி போன்ற ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி நீதிமன்ற காவலில் இருந்தபொழுது நீதிமன்ற அனுமதியோடு நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து கை கால்களை உடைத்தும், தோலை உரித்து நிகழ்த்திய மனித உரிமை மீறல் சம்பவங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த மாண்புமிகு நீதியரசர். கே. ஜி. பாலகிருஷ்ணன் அவர்களும், ஏனைய பிற உறுப்பினர்கள் குழுவும் இணைந்து நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு எனக்கு ஏற்பட்ட அநீதி மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான

சிபிசிஐடி ஓசியூ வைச் சேர்ந்த A. அருண் ஐ.பி.எஸ்

உள்ளிட்ட 13 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு கடந்த 17.02.2014 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தனர் அத்தோடு நஷ்ட ஈடாக ரூபாய்.15,000/- தர வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டு இருந்தார். அது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அலுவலகம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தேன் அதை கடந்த 9 ஆண்டுகளாக முழுமையான விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 09.11.2022 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்தி வருகிற 15.11.2022 அன்று முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து இன்று (1.12.2022) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக 735561 என்ற எண் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் டி.டி ரூ.15,000 தரப்பட்டுள்ளது. இதை தங்களின் மேலான முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்து ஏழை எளிய பாமர மக்களின் நலனுக்கு பயன்படுத்திட கோரிக்கை வைப்பது சம்பந்தமாக.



மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,



வணக்கம், மேலே குறிப்பிட்ட பொருளில் கூறப்பட்ட சங்கதிகள் குறித்து தங்களின் மேலான கவனத்தை ஈர்த்து நான் பட்ட கொடுமையான சித்திரவதைகள் இனிமேல் எந்த ஒரு நிரபராதியும் அனுபவிக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மிக நீண்ட நெடிய எனது சட்டப்போராட்டங்களுக்கு பிறகு தமிழ்நாடு அரசு எனக்கு வழங்கிய முதற்கட்ட ரூ.15000 க்கான டி.டியை தங்களின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களை நேரில் சந்தித்து வழங்கிட நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு


டாக்டர். எஸ் கே சாமி

வழக்கறிஞர்

தலைவர்

உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம்

7550015555

Dr. S K SAAMY
Chairman cum Editor-in -Chief
World Human Rights Commission And Rescue Center,
38, Krishnakunj, Bagdola, Dwarka,
New Delhi-110077
09968441440.


சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட 21 பேரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சென்னை பாரிமுனையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், 2008 ம் ஆண்டு இரு பிரிவு மாணவர்களுக்கு இடையில் கடும் மோதல் வெடித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, 21 மாணவர்களுக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் விசாரித்தார். அப்போது,போலீசார் தரப்பில் பல்வேறு குறைகளைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, 21 மாணவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button