மாவட்டச் செய்திகள்

25கோடி ரூபாய் தடுப்பணை தண்ணிரில் அடித்துச் செல்லும் அபாயம்! காப்பாற்ற முயற்சி செய்யுமா பொதுப் பணித்துறை!!?

பொதுப்பணித்துறையின் அலட்சியப் போக்கால் 25கோடி ரூபாய் மதுரை கொடிமங்கலம் வைகை ஆற்றின் தடுப்பணை
தண்ணீரில் அடித்துச் செல்லும் அபாயம்!??

மதுரை அருகே கொடிமங்கலம் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கடந்த  2020 ஆண்டு நவம்பர் மாதம் ரூபாய் 17.5 கோடி மதிப்பில் புதியதாக தடுப்பனை கட்டும் பணியை கடந்த   அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ தொடங்கி வைத்தார்,

பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒப்பந்த காரரின், காலதாமத்தாலும் வைகை ஆற்றின் பராமரிப்பின் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்காலும்,   தடுப்பனை கட்டும் பணி தொய்வால் கூடுதலாக ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்து தடுப்பனை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது,

தற்பொழுது  நடைபெற்று வரும் தடுப்பனையால் துவரிமான் கண்மாய், மாடக்குளம் கண்மாய்களுக்கு வைகையாற்றில் இருந்து தண்ணீர் கால்வாய் மூலம்  நேரடியாக கொண்டு செல்ல முடியும், இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும், இப்பகுதி பூமியின் நீர்மட்டம் உயர்ந்து விடும் என்று   பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர், 

இந்நிலையில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால், பெரு வெள்ளம் போல் வைகையாற்றில் மழை தண்ணீர், வைகை அணையில் இருந்து  திறந்து விடும் தண்ணீர் என வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது, 

அதனால்,  மதுரை அருகே கொடிமங்கலம் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டி வரும் தடுப்பனை 80 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், ஆற்றின் வெள்ளநீரால் தடுப்பனை உறுதி தன்மை கேள்வி குறியாக உள்ளது,

 தடுப்பனையின் ஒரு பகுதியில் மதகுகளில் ஷட்டர்கள் மாட்டும் பணி முடிவுற்ற நிலையில், மறு பக்கத்தில் உள்ள மதகுகளின் ஷட்டர்கள் மாட்டாமல்,மதகுகள் உடைந்து வெள்ளச்சேதம் ஏற்படும் நிலைவுள்ளது, இதனால்  தடுப்பனை அருகே உள்ள கிராம மக்களும், விவசாயிகளும், வெள்ள பாதிப்பு ஏற்படுமோ என பெரும்  அச்சத்தில் உள்ளனர்.

  எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதும் மேற்க்கொள்ளாமல் தடுப்பனை கட்டும் பணிகள் நடைபெறுவதால், எங்கே விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் தடுப்பனை, மதகுகள் உடைந்து பெரு வெள்ள சேதாரம் ஏற்பட்டது போன்று, இந்த தடுப்பனையில் உடைப்பு   ஏற்படும் சூழல் உள்ளதாக விவசாயிகள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். 

         வைகை ஆற்றின் பராமரிப்பு அதிகாரிகள் அலட்சியத்தாலும், ஒப்பந்த காரரின் மெத்தனமான போக்கால், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டிய அற்புதமான தடுப்பனை பாழாகி விடுமோ என்று வருத்தம்  தெரிவிக்கின்றனர்,
சமூக ஆர்வலர்கள்.

  மொத்தத்தில் எது எப்படியோ மக்கள் வரிப்பணத்தில் கொல்லையடித்து விட்டு தற்போது ஒன்றும் தெரியாதைப் போல ஏதோ காரணத்தை மட்டுமே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சொல்வதுதான் வாடிக்கையாகிவிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் இதுபோன்று தமிழகம் முழுவதும் பொதுப்பணித் துறையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக வந்துள்ள தகவலை தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்தான் ஊழல்வாதிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button