நகராட்சி

அடாவடி  கட்டணம் வசூல்!பராமரிப்பின்றி  சுகாதாரமற்ற நிலையில் சீர்கெட்டு  துர்நாற்றம் வீசி நோய்கள் பரவும் அபாயத்தில் பழனி  பேருந்து நிலைய நவீன கட்டண கழிப்பிடம்! அதிர்ச்சி வீடியோ! செயலிழந்து கோமாவில் இருக்கும் பழனி நகராட்சி நிர்வாகம்!?

திண்டுக்கல் மாவட்டம் பழனி  பேருந்து நிலையத்திற்கு நாளொன்றுக்கு சுமார் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக கார்த்திகை மார்கழி தை மூன்று மாதங்கள் கோவில் விசேஷ நாட்களில்  கேரளா ஆந்திரா போன்ற பிற மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வருவது வழக்கம்.
அப்படி வந்து செல்பவர்கள் பயன்படுத்துவதற்காக

பழனி பேருந்து நிலையத்தில்  உள்ள

நவீன கட்டண கழிப்பிடம் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் திறந்தவெளியில் சிறுநீரகம் கழித்து வருவதை கண்டு பெண்கள் முகம் சுளித்து செல்கின்றனர் .
பழனிக்கு  வரும் பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்துகளுக்கு காத்திருக்கும் பொதுமக்கள் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் கட்டணக் கழிப்பிடத்திற்கு செல்லாமல்  திறந்த வெளியில் சிறுநீர் கழித்து வருவதால் அங்கு வந்து செல்லும் பள்ளி மாணவர்கள் குழந்தைகளுக்கும் மற்றும் பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இது சம்பந்தமாக  நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் பழனி நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் கண்ணிருந்தும் குருடர்களாகவும் காது இருந்தும் செவிடர்களாகவும்  பழனி நகராட்சி நிர்வாகம் செயலற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பழனி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் நவீன கட்டண கழிப்பிடத்தில் அடாவடியாக அதிக கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இது சம்பந்தமாகஅப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியபோது பழனி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும்  நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பறை அவல நிலையை புட்டு புட்டு வைத்தார் .
அது என்னவென்றால் பேருந்து நிலையில் செயல்பட்டு வரும் கட்டண கழிப்பிட கட்டிடத்தில்
சிறுநீர் கழிக்க மூன்று ரூபாயும் ,கழிவறைக்கு ஐந்து ரூபாயும் பதாகைகள் வைக்கப்பட்டு புகார் தொடர்புக்கு என்ற இடத்தில் தொலைபேசி எண் மறைத்து வைக்கப்பட்டு நகராட்சி ஊழியர் ஒருவர் ஒரு நபருக்கு சிறுநீர் மற்றும் கழிவறைக்கு பொத்தாம் பொதுவாக 10 ரூபாய் வசூல் செய்து வந்தார்.  எதற்காக பத்து ரூபாய் வசூலிக்கறீர்கள் என்று கேட்டதற்கு சுத்தம் செய்வதற்கு வேலைக்கு வைத்துள்ள நபர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்றார்.
குறிப்பாக இந்த கட்டணம் வசூல் செய்வதற்கு மேலதிகாரிகள் சொல்லி தான் நாங்கள் அதிக கட்டணம் வசூல் செய்கிறோம் என்ற நகராட்சி ஊழியர்  மிரட்டும் தோணியில் பேசி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல்
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பராமரிப்பு காரணத்தைக் காட்டி அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை முறையாகப் பயன்படுத்தப்படாமல், பல மாதங்களாக பராமரிக்கப்படாமல்  சீர்கெட்டு கிடக்கும் கழிப்பறைகளை முறையாகச் சீர் செய்வது இல்லை என்றும்
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுவதாக வரும் புகார்களை
பழனி நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தற்போது
பழனி நகராட்சி பேருந்து நிலைய  கட்டண கழிப்பிடம் பராமரிப்பு இன்றி
கழிவறைகள் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. கழிவுநீர் தொட்டிகள் நிரம்பி, கழிவுகள் வெளியேறி தேங்கி நிற்பதால்
துர்நாற்றம் வீசுவதுடன் வாந்தி எடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
.
கழிப்பறை கட்டிடத்தில் உடைந்த கதவுகள், வாளிகள்,
உடைந்த உபகரணங்கள், பாசி படிந்த தரைப்பகுதி குறிப்பாக மின் வயர்கள்   சரி செய்யாமல் தொங்கிக்கொண்டு இருப்பது போன்ற பல குறைபாடுகள் உள்ளன. இதனால் பயணிகள், குறிப்பாக பெண்கள், உள்ளே  அஞ்சுகின்றனர் இதனால் அவர்களது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் நீண்ட நேரம் பேருந்திற்காக காத்திருக்கும் பெண் பயணிகள்  உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் பேருந்திற்காக காத்திருக்கும் ஆண்
பயணிகள் திறந்த வெளிகளில் சிறுநீர் கழிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


அதுமட்டுமில்லாமல்
காட்சிப் பொருளாக பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை கட்டிடம்  மற்றும்  புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  திறப்பு விழா நடத்த யாருக்காக பூட்டப்பட்டு காத்திருக்கிறது என்று தெரியவில்லை.
இதை சாதகமாக பயன்படுத்தி
பழனி பேருந்து நிலைய கட்டண கழிப்பிடத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக   அடாவடியாக வசூலிப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எது எப்படியோ
நகராட்சி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைய  நல்ல முறையில் நேர்மையான அதிகாரிகளை வைத்து நேர்மையான ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் பொது மக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் கழிப்பிடம் மருத்துவம் இந்த மூன்றையும் முதலில் நகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்தால் மட்டுமே  திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் நற்பெயர் கிடைக்கும். முதல்வர் ஸ்டாலின் கூறுவதுபோல் இந்தியாவிலேயே  தமிழகம் முதல் மாநிலமாக  இருக்க வேண்டும் என உறுதி அளித்ததை மாவட்டம் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள்  நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே  அது சாத்தியம் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது



.


  

Related Articles

Back to top button