அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் வாடிப்பட்டி வாரச்சந்தை!அடிப்படை வசதிகள் செய்யாத வாரச்சந்தை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு நீதிமன்றம் உத்தரவு! நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் சட்ட உரிமை இயக்கம்!
அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் வாடிப்பட்டி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தராத உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு நீதிமன்றம் உத்தரவு!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் அருகே உள்ள வார சந்தை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த சந்தை மதுரை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்கது. இந்த சந்தைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் வாரம் செவ்வாய்க்கிழமை நடக்கும் சந்தைக்கு வருவது வழக்கம் இந்த சந்தையில் கோழி ஆடு மாடு காய்கறி மற்றும் பல வகைகள் தானிய வகைகள் அனைத்தும் சந்தையில் விற்பனை செய்வார்கள்.
ஒரு நாள் வசூல் சுமார் 10 லட்சம் என்றால் (12 மாதம்) 36 வாரத்திற்கு சுமார் 3 கோடி வரை வசூிக்கப்படுகிறது என்ற தகவல் வந்துள்ளது. ஆனால் பேரூராட்சிக்கு 40 லச்சசதிர்க்கு மட்டுமே கணக்கு காண்பித்து 6 லட்சம் மட்டுமே வரி கட்டுவதாக குற்றச் சா்டு எழுந்துள்ளது.
வாடிப்பட்டி வாரச்சந்தையில் பொதுமக்களுக்கான குடிநீர் மற்றும் கழிவறை அடிப்படை வசதி இல்லை என்றும் மழைக்காலங்களில் சேரும் சகதியும் ஆக தான் காணப்படும். குப்பைகள் ஆங்காங்கே தேங்கி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அது மட்டும் இல்லாமல் ஆயிரக்கணக்கான ஆடுகள் மாடுகள் கோழிகள் சந்தைக்கு வியாபாரிகள் கொண்டு வருவதால் அந்த வாயில்லா ஜீவன்கள் தண்ணீர்குடிக்க வசதி அமைத்துத் தரவில்லை என்றும் இது சம்பந்தமாக பலமுறை மக்கள் சட்ட உரிமை இயக்கம் சார்பாக வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால்பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையில் வார சந்தையில் மனுதாரர் குறிப்பிட்ட அனைத்து வசதிகளையும் உடனே செய்து தருமாறு உத்தரவு பிறப்பித்தது.வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் சந்தைக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து வாடிப்பட்டி பேரூராட்சி செயலர் அவர்களிடம் சட்ட மக்கள் உரிமை இயக்கம் சமூக ஆர்வலர்கள் முறையிட்டதன் பெயரில் வாடிப்பட்டி பேரூராட்சி செயலாளர்கள் வாரச்சந்தையில் ஆய்வு செய்தபோது சுகாதார நிலையில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி இருப்பதையும் உறுதி செய்ததோடு பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி மற்றும் கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கான வசதியை 15 தினங்களுக்குள் செய்து கொடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
தவறும் பட்சத்தில் பேரூராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று சொந்த உரிமையாளர்களிடம் வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கூறி உள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.
வரும் 15 நாட்களுக்குள் தேவையான அடிப்படை வசதிகள் செய்யாத பட்சத்தில் மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் சார்பில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி போஸ்டர் அல்லது போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். அப்படியும் நிறைவேறவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் சட்ட உரிமை இயக்கம்