அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு இன்றி விதிகளை மீறி சட்ட விரோதமாக நடக்கும் கண்காட்சிக்கு அனுமதி வழங்கிய பழனி நகராட்சி அதிகாரிகள்!? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
![](https://reportervisionnews.com/wp-content/uploads/2023/11/InShot_20231109_115447775-1-780x470.jpg)
அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு இன்றி விதிகளை மீறி சட்ட விரோதமாக நடக்கும் கண்காட்சிக்கு பழனி நகராட்சி அனுமதி வழங்கியது எப்படி!?
திண்டுக்கல் மாவட்டம் பழனியில்
பழனி இட்டேரி சாலையில் அக்டோபர் மாதம்11 ஆம் தேதி முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெற்று வரும் ஆழ்கடல் சுரங்க கண்காட்சிக்கு நாள்தோறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் மின் இணைப்பு
மின்சார வயர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பின்றி கட்டிவைக்கப்பட்டுள்ளது .
அது மட்டும் இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் அடிப்படை வசதியான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் முறையாக இல்லாததால் கண்காட்சிக்கு வரும் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் முக்கியமாக கண்காட்சி நடக்கும் இடத்தில் விபத்துகள் நடந்தால் தடுப்பதற்கு தீயணைப்பு முன்னேற்பாடுகள் எதுவுமே செய்யப்படாத நிலையில் இருப்பதாகவும் இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமில்லாமல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் கண்காட்சி நடப்பதை பழனி மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் இந்த கண்காட்சி வியாபார நோக்கில் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அது மட்டும் இல்லாமல் பழனி நகரம் முழுவதும் சாலைகளில் உள்ள மின்கம்பங்களில் சட்டவிரோதமாக விளம்பர பதாகைகள் கட்டி வைத்து உள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
கண்காட்சி நடக்கும் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு கடந்த ஒரு மாதமாக பல கோடி வாடகை மட்டும் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 20 முதல் 30 சதவீதம் கமிஷன் பழனி மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மூலம் கொடுக்கப்பட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்ய கண்காட்சி என்ற பெயரில் நூதன முறையில் வியாபாரம் செய்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம் . சமூக ஆர்வலர்கள் வைக்கும் குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கும் முன்பு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆகவே கண்காட்சி என்ற பெயரில் அனுமதி பெற்றுக்கொண்டு சட்ட விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . அப்படி எடுத்தால் மட்டுமே வியாபார நோக்கில் கண்காட்சி நடத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்ன சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது