அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கி வந்த கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் கணவன் மனைவி இரண்டு பேர் பலி! பணியில் இருந்த மற்றவர்களின் நிலை !?
மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் எச்சரித்தும் அலட்சியப் போக்கை கடைபிடித்து வந்த கோபி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பாரா ஈரோடு மாவட்ட ஆட்சியர்!?
அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கி வந்த கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் இரண்டு உயிர்கள் பலி!
கோபி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பாரா ஈரோடு மாவட்ட ஆட்சியர்!?
மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் எச்சரித்தும் அலட்சியப் போக்கை கடைபிடித்து வந்த கோபி வட்டாட்சியர்
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், தூக்க நாயக்கன் பாளையம் அருகில் உள்ள, பங்களா புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கடந்த பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக இயங்கி வரும்,
துறையம்பாளையம் கிராமம், லோகநாதன் கல்குவாரியில் 20-08-2024 செவ்வாய்க் கிழமை மாலை, சட்ட விரோத வெடி மருந்தை பயன்படுத்தி வெடித்து இரண்டு பேர் படுகொலை.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதியில் கல்குவாரி இயங்கி வந்தது. இதன் உரிமையாளர் ஈஸ்வரி. இவர் மற்றும் அரவது கணவர் மற்றும் சிலர் குவாரியல் பணி செய்து வருகின்றனர். வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். சம்பவத்தன்று கல் குவாரியில் வெடி விபத்து நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் குவாரி உரிமையாளர் ஈஸ்வரி,அவரது கணவர் லோகநாதன் உள்ளிட்டோர் பலியாயினர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஓராண்டில் நூற்றுக்கு மேற்பட்ட முறை வருவாய்த்துறை/ கனிமவளத்துறை/ காவல்துறை ஆகியோரிடம் புகார் கொடுத்தும், கோபி வட்டாட்சியர் கார்த்தி அவர்களிடம் கடந்த 5 மாதத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் உரிய வகையில் எடுக்கப்படவில்லை.
நேற்று ஈரோடு மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சசிகுமார் அவர்களிடம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கு ஒருங்கிணைப்பாளர் முகிலன் அவர்களும் சென்னிமலை பூப்பறிக்கும் மலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சதீஷ் அவர்களும் நேரில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப் படாததால், வெடி விபத்தில் சிக்கிய 2 பேர் துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 16-08-2024 வெள்ளி அன்று தூக்க நாயக்கன் பாளையம் கேவி மகாலில் நடந்த, கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் 5-க்கு மேற்பட்டோர் கடந்த வாரம் சீல் வைத்தும், துறையாம்பாளையம் லோகநாதன் கல்குவாரி சட்டவிரோதமாக இயங்குகிறது என வட்டாட்சியர் முன்னிலையில் தெரிவித்தும், கோபி வட்டாட்சியர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால், சட்டவிரோத வெடிவைத்து 2 பேர் மரணம்
மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுமம், 19.06.2024 அன்று, வனத்துறை, இயற்கை வளம் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளிடம் முகிலன் அவர்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும், அந்த உத்தரவைக் காட்டில் பறக்கவிட்டு அதிகாரிகள் அலட்சியப் போக்கை கடைபிடித்து தொடர் நடவடிக்கை இல்லாததால் , சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் இரண்டு உயிர்களை பறி கொடுத்துள்ளனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆகையால் அலட்சியப் போக்கை கடைபிடித்த ஈரோடு மாவட்ட ஆட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறை/ வருவாய்த்துறை/ கனிமவளத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் மற்றும்
, ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.