அரசியல் செய்ய வலு இல்லாத ராமதாஸ் ,அன்புமணி ராமதாஸ் என்தந்தையை சூழ்ச்சியால் கொன்றார்கள் .

இதற்கு பிறகு எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை பாமக தலைமையில் தான் தமிழக அரசு என்ற முழக்கத்தை தற்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் எடுத்துள்ளார்கள் .
இந்த நிலைப்பாட்டை இவர்கள் எடுக்க காரணம் 2018 வரை எனது தந்தை ஜெ குரு அவர்கள் வன்னியர் சங்க தலைவர் உயிராக இருக்கும் வரை பாமக தோல்வி முகத்தில் இருக்கும் போதெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வார் .
உதாரணம் பென்னாகரம் இடைத் தேர்தலின்போது பாமகவை இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்தார் .
எனது தந்தை இறந்த பிறகு இவர்களுக்கு அரசியல் செய்ய வலு இல்லை. 2016 சட்டமன்ற தேர்தலின் போது ராமதாஸ் அவர்கள் கூட்டணி செல்ல தயாராக இருந்தார்.
ஆனால் எனது தந்தை நீங்கள் கூட்டணிக்கு சென்றால் நான் வன்னியர் சங்கத்தை தனியாக பிரித்து 234 தொகுதிகள் தனியாக நிற்பேன் நீங்கள் நம் சமூகத்தை ஏமாற்றியது போதும் என்று கூறினார் .
அதன் பிறகுதான் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்தை வைத்து தனியாக நின்றார்.
அப்பொழுது ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற ஆளுமைகள் இருந்தபோதும் மாவீரன் எனது தந்தைஉழைப்பால் 5.5 சதவீத வாக்குகளை பெற முடிந்தது.
பிறகு எனது தந்தையயை ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சூழ்ச்சியால் கொன்றார்கள் .
அதன்பிறகு 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கலைஞர் மற்றும் ஜெயலலிதா என்ற பெரும் ஆளுமைகள் இல்லாதபோது இவர்கள் களுக்கு தனித்து நிற்க திராணி இல்லை காரணம் எனது தந்தை உயிராக இல்லை .
இவர்களுக்குபிரச்சாரம் செய்வதற்கும் வன்னிய வாக்குகளை பெறஆள் இல்லை. என் தந்தை இருந்திருந்தால் ஊர் ஊராக சென்று வாக்கு சேகரித்து பாமகவுக்கு வலு சேர்த்திருப்பார்.. எனது தந்தை இல்லாததால் பயந்து போய் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தனர் .
அந்த தேர்தலில் எனது தந்தை சூழ்ச்சியால் கொன்றதை மற்றும் எங்கள் வன்னியர் மக்களுக்கு செய்த துரோகத்தைஎங்கள் மக்களிடம் எடுத்துக் கூறினோம் .
நாங்கள் செய்த பிரச்சாரத்தால் பாமகவின் வாக்கு சதவீதம்5.5 இருந்து 4.5 சதவீதமாக குறைந்ததுமற்றும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தனர் .
பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் அதே அதிமுக கூட்டணியில் இருந்த போதும் 4.5 சதவீதமாக இருந்த ஓட்டு 3.8 சதவீதம் ஆக குறைந்தது .
அப்போதும் நாங்கள் எங்கள் தந்தைக்கு செய்த துரோகம் மற்றும் எங்கள் வன்னிய மக்கள் செய்த துரோகத்தை எடுத்துக் கூறினோம் .
இவ்வாறு பாமக எனது தந்தை இறந்த பிறகு தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறது .தற்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் என் தந்தைக்கு செய்த துரோகத்தை நினைத்து தவறு செய்து விட்டோம் என்று எண்ணி தற்போது தனது ஓட்டு பலத்தை காட்ட தனித்து நிற்கிறோம் என்ற ஆயுதத்தை எடுத்து உள்ளனர் .
ஆனால் மத்தியில் பாஜகவுடன் கூட்டணி மாநிலத்தில் தனித்து கூட்டணி என்று இரட்டை நாக்கோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள் .
ஆனால் பிஜேபி மத்திய தலைமையோ மாநில தலைமையே இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ராமதாஸ் அவர்களே நாங்கள் பிஜேபி கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .
அதுமட்டுமில்லாமல் பிஜேபி மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது என்று அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் .
ஆனால் மத்தியில் பாஜகவுடன்கூட்டணி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் இதுபோன்ற இவர்கள் இரட்டை நிலைப்பாடு என்ன அரசின் நிலைப்பாடு என்று மக்களுக்கு தெரியவில்லை.
2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புதுவை மாநிலத்தில் பாமகவில் வேட்பாளர்களை கூட நிறுத்த முடியவில்லை.
ஆனால் புதுவை மாநிலம் முழுவதும் வன்னியர்கள் அடர்த்தியாக உள்ளனர் .
தற்போது முதல்வராக உள்ள வரும் இரண்டாவது இடத்தில் உள்ள வரும் வன்னியர்களே .
ஆனால் பாமக வெற்றி பெற இயலவில்லை
காரணம் இந்த சமூகத்திற்கு செய்த துரோகங்கள் தற்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்களை எங்கள் வன்னியர் சமய மக்கள் புறக்கணித்து விட்டார்கள் இவர்கள் தற்போது தனித்து நின்றாலும் சரி கூட்டணிக்கு சென்றாலும் எங்கள் மக்கள் இதை நம்ப மாட்டார்கள்.
2 நாடாளமன்ற தொகுதியியை கூட எந்த கட்சியும் தற்போது பாமகவிற்கு தர மாட்டார்கள் .
ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தைலாபுரத்தில். கூட தலைவராக ஆக முடியாது .
ஆனால் தமிழகத்தின் முதலமைச்சராக ஆகிவிடுவோம் என்று எங்கள் மக்களை ஏமாற்றி அவர்களின் பொருளாதார வாய்ப்புகளை சீரழிகின்றனர் .
நான் தான் இந்த சமுதாயத்திற்கு செய்தேன் என்று ராமதாஸ் அவர்கள் கூறுகின்றார். அப்படி என்றால் சமுதாயத்திற்கு அவர் என்ன செய்தார் ஐயா கலைஞர் அவர்கள் 20 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்தார் தற்போது 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அரசாணை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கொண்டுவந்துள்ளார்.
அதுமட்டுமல்லாது 1987சமூகநீதி போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் மற்றும் அவர் குடும்பத்திற்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார் .
மேலும் எங்களுடைய போராட்டத்தை சமூகநீதி போராட்டம் என்றும் அங்கீகரித்து உள்ளார் இவ்வாறு அனைத்து செயல்களையும் கழக அரசு செய்துள்ளது.
இப்படி இருக்கும்பட்சத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ்என்ன செய்தார்கள். இவர்கள் செய்த அனைத்து துரோகங்களையும் வன்னியர்மக்கள் உணர்ந்து விட்டார்கள்..
வன்னியர்கள் மீது எந்த சமுதாயத்திற்கும் தமிழகத்தில் எதிர்ப்பு உணர்வு கிடையாது .
ஆனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மீது எதிர்ப்பு உணர்வு உள்ளது காரணம் இவர்கள் மற்ற சமுதாயத்தினர் செய்த காழ்ப்புணர்ச்சி அரசியல் ஆகும்.
தற்போது வன்னியர் மக்களும் மற்றும் மற்ற சமுதாயத்தினர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்து விட்டனர்..
இப்படி இருக்கும் பட்சத்தில் எதிர்ப்பு உள்ள ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசை எந்த கட்சியும் கூட்டணி சேர்த்துக் கொள்ளாது.
குரு விருதாம்பிகை காடுவெட்டி குருவின் மகள்