அரசுப் பள்ளி கட்டிடத்தின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கருங்கற்களை மர்ம கும்பல் கடத்தி எடுத்துச் சென்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது!
மௌனம் காக்கும் மதுரை மாவட்ட நிர்வாகம்!!
அரசுப் பள்ளி கட்டிடத்தின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கருங்கற்களை அந்த மர்ம கும்பல் கடத்தி எடுத்துச் சென்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது!
மௌனம் காக்கும் மதுரை மாவட்ட நிர்வாகம்!!
விக்கிரமங்கலம் அருகே அரசு பள்ளிக்கு சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள கற்கள் லாரியில். கடத்தல்.? மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுபாரா.?
மதுரை மாவட்டம் சோழவந்தான்
விக்கிரமங்கலம் அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதலைகுளம் கிராமத்தில் ஆசிரியர் குடியிருப்புடன் கூடிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் குடியிருந்த வீடுகளை பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்ததால் அந்தக் கட்டிடங்கள் தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. ஆகையால் அந்தக் கட்டிடங்களை இடித்து அந்த இடங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டிருப்பதாக அந்த ஒப்பந்தத்தை ஒரு சிலர் எடுத்திருபதாக கிராம பொதுமக்களிடம் கூறிக்கொண்டு ஜேசிபி
இயந்திரத்தை வைத்து இடித்து அந்தக் கட்டிடங்களில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கற்களை லாரி மூலம் கடத்தி சென்று உள்ளனர்.
இதேபோல் பள்ளி வளாகத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இரண்டு வகுப்பறைகள் செயல்பட்டு வந்த து. அந்த வகுப்பறை கட்டிடங்களை இடித்து அப்புறபடுத்தி பின்னர் புதிய வகுப்பறைகள் கட்ட பணிகள் நடந்து வருகின்ற நிலையில் இடித்த கட்டிடத்திலிருந்த உடகாற்களை ஜேசிபி இயந்திர உதவியோடு எடுத்து எடுத்து லாரிகளில் கடத்தி சென்றுள்ளதாக கிராம பொதுமக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான கற்களை கடத்தி சென்ற மர்ம நபர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா.? இல்லை எப்போதும் போல் மௌனமே பதிலாக இருக்கப் போகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழப்பி உள்ளனர்..