அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கனிம வளம் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை பறிமுதல் செய்து வாகன ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ள உடுமலை காவல் உட்கோட்ட குடிமங்கலம் காவல்துறை!
திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில்
சாதாரண கற்கள் மற்றும் கிராவல் வெட்டி எடுப்பதற்கு திருப்பூர் மாவட்டம் கனிமவளத்துறை குத்தகை உரிமம் வழங்கியுள்ளது.
இந்த கல் குவாரிகளில் அரசு சட்ட திட்ட விதிகளை காற்றில் பறக்க விட்டு, அனுமதியை மீறி செயல்படும் குவாரிகள் மற்றும் அரசு நிலங்களில் இருந்து அதிக ஆழத்தில் கற்கள் வெட்டப்பட்டு கனிம வளங்கள் தொடர்ந்து நாள்தோறும், 500க்கும் மேற்பட்ட லாரிகளில், தேசிய நெடுஞ்சாலையில், பொள்ளாச்சி வழியாக, அரசு அனுமதி சீட் இல்லாமல் கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கும், மறையூர் வழியாக மூணாறுக்கும் கடத்தப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்து வந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் 26/09/2024 அன்று குடிமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெதப்பம்பட்டி அருகே குடிமங்கலம் காவல் ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியே வந்த TN.99AE 15 75 என்ற என்னுடைய கனரக டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ஐந்து டன் கற்கள் இருந்தது. டிப்பர் லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் சக்தியிடம் விசாரணை மேற்கொண்ட போது அரசு அனுமதி சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக கொண்டு சென்றது உறுதி செய்யப்பட்டது. உடனே குடிமங்கலம் காவல்துறை ஆய்வாளர் கீதா கனரக வாகனத்தை பறிமுதல் செய்து வாகனத்தை ஓட்டி வந்த சக்தி மற்றும் வாகன உரிமையாளர் சதீஷ்குமார் ஆகிய இருவர் மீதும் குற்ற வழக்கு எண் 304/2024 303 /2 ,21/2 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எது எப்படியோ தமிழக எல்லைகளில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் பணியில் இருக்கும் காவலர்கள், கேரளாவுக்கு, கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து உரிய அனுமதியுடன் எடுத்துச் செல்லப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்தால் மட்டுமே உரிய அனுமதியில்லாமல் கனிம வளங்களை கடத்திச் செல்வதை முற்றிலும் நிறுத்த முடியும் . ஆகவே திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரசு அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக கனிம வளம் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.