பிறப்புச் சான்றிதழை பதிவு செய்ய தேவகோட்டை சார் ஆட்சியர் உத்தரவிட்டு இரண்டு மாதம் ஆகியும் உத்தரவை காற்றில் பறக்க விட்டு லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடிகட்டி பறக்கும் பள்ளத்தூர் பேரூராட்சி நிர்வாகம்!
நடவடிக்கை எடுப்பார்களா சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக உள்ளாட்சி துறை செயலாளர்!?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட அ மு. குடியிருப்பில் வசித்து வருபவர் சோலையம்மாள் வயது 37 நாராயணன் கணவர் பெயர் நாராயணன்.

சோலையம்மாளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் பிறப்புச் சான்று பதிவேட்டில் பதிவு செய்து தருமாறு 28/11/2023 அன்று ஆன்லைனில் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்துள்ளார்.( சலான் எண் 2023 1128012538) ( இ சலான் 021080800AE 22708) பிறப்புச் சான்றிதழ் சம்பந்தமாக பள்ளத்தூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் செல்வி என்பவர் விசாரணை மேற்கொண்டு வந்ததாகவும் ஆனால் அவர் விசாரணையை முடித்து வட்டாட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்காமல் சோலையம்மாளை அலைக்கழிப்பது மட்டுமல்லாமல் அவரிடம் அவ்வப்போது 2000 ரூபாய் 3000 ரூபாய் என 7000 ரூபாய்க்கு மேல் வாங்கி ஒரு வருடமாக காலதாமதம் ஆக்கி வந்துள்ளார். அதன் பின்னர்


தேவகோட்டை சார் ஆட்சியரிடம் சோலையம்மாள் 2024 டிசம்பர் மாதம் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில்
எனக்கு
திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்றும் ஆகையால் சட்டப்படி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம்.
ஆனால் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் முதலில் பிறப்புச் சான்று பதிவேட்டில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினார்கள். அதன்படி பிறப்புச் சான்று பதிவேட்டில் பதிவு செய்து தருமாறு 28/11/2023 அன்று 500 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்ததாகவும் ஆனால் பள்ளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் 12 மாதங்களாக பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்ய மூன்று முறை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து எந்தவித விசாரணையும் செய்யாமல் ஆவணங்களை சமர்ப்பிக்காததால் நாங்கள் குழந்தையை தத்தெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆகையால் பிறப்புச் சான்று பதிவேட்டில் பிறப்புச் சான்றிதழை பதிவு செய்து தருமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தேவகோட்டை சார் ஆட்சியர் சோலையம்மாள் 31/12/2024 அன்று விசாரணைக்கு ஆஜராகும் படியும் அது மட்டுமில்லாமல் விசாரணையின் போது ஒரிஜினல் ஆவணங்களை எடுத்து வரவும் குறிப்பானையில் குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்தது.
31/ 12 /2024 அன்று தேவகோட்டை சாரா ஆட்சியர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன் பின்பு காரைக்குடி வட்டாட்சியர் மற்றும் பள்ளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு பிறப்புச் சான்றிதழ் சம்பந்தமாக விரைவில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்படி தற்போது உள்ள பள்ளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் விசாரணை மேற்கொண்டு காரைக்குடி வட்டாட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அதன்பின்பு அந்த அந்த அறிக்கையை தேவகோட்டை சார் ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்பு சோலையம்மாள் 10/01/1988 அன்று பிறந்தது உண்மைதான் என்றும் பிறப்புச் சான்றிதழ் பதிவேட்டில் பிறந்ததற்கான பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யுமாறு

பள்ளத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு


06/02/2025 அன்று தேவகோட்டை சார் ஆட்சியர் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் தேவகோட்டை சார் ஆட்சியர் பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டு 60 நாட்கள் மேலாகியும் இதுவரை பள்ளத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சோலையம்மாளின் பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாமல்

பள்ளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும்( head clerk)
தலைமை எழுத்தாளர் கவிதா சோலையம்மாளை தகாத வார்த்தையில் பேசுவதும் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதாகவும்
ஆகவே சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்ய மறுக்கும்
பள்ளத்தூர் பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் மற்றும் தலைமை எழுத்தாளர் கவிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோலையம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
எது எப்படியோ சான்றிதழ் கேட்டு ஒருவர் விண்ணப்பித்து சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு விசாரணை செய்து முடிந்து அதன் பின்பு சான்றிதழ் வழங்கலாம் என மாவட்டத்தின் சார் ஆட்சியர் ஒப்புதல் வழங்கியும் சான்றிதழ் வழங்க வேண்டிய பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் சான்றிதழை வழங்க மறுத்து ஏழை எளிய சாமானிய மக்களை அலைக்கழிப்பது வேதனை அளிக்கிறது.
ஆகவே
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை செயலாளர் அவர்கள் உடனடியாக இதுபோன்ற அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.




