ஆபத்தான முறையில் அந்தரத்தில் தொங்கும் எலும்புக் கூடாக காட்சியளிக்கும் நாடக மேடையின் அவல நிலை! உயிர் காவு வாங்கும் முன் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இடித்து அகற்ற நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!
ஆபத்தான முறையில் அந்தரத்தில் தொங்கும் நாடக மேடையின் அவல நிலை! உயிர் காவு வாங்கும் முன் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்குமா!
புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன . இதில் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 45 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் 20 வருடங்களுக்கு முன்பு நாடக மேடை கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பல கிராமங்களில் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நாடக மேடை முழுவதும் சேதம் அடைந்து இடிந்து விழுந்ததால் தற்போது நாடக மேடை முற்றிலும் அகற்றப்பட்டு உள்ளது. ஒரு சில கிராமங்களில் நாடக மேடைகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.
அதேபோன்று விராலிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெண்மணி ஊராட்சி முள்ளி பட்டி கிராமத்தில் இருக்கும் நாடக மேடை முற்றிலும் பழுதடைந்து எலும்பு கூடாக அபாயகரமான நிலையில் காணப்பட்டதால் அதை இடித்து புது கட்டிடம் கட்டுவதற்கு பதிலாக பராமரிப்பதற்காக
கடந்த அதிமுக ஆட்சியில் 2018 இல்
நாடக மேடையை 46500 ரூபாய் செலவில் பராமரிப்பு வேலை செய்ததாக கண்காணிப்பு நாடகம் நடத்தியுள்ளனர்.
தற்போது ஆறு வருடங்கள் ஆன நிலையில் வெண்மணி ஊராட்சி முள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள நாடக மேடை முழுவதும் சேதமடைந்து கம்பிகள் மட்டும் தாங்கிப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டு அபாயகரமான நிலையில் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. அப்படி திடீரென இடிந்து விழுந்தால் அந்த வழியில் செல்லும் நபர்கள் மீது விழுந்து உயிர்ப்பலி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆகவே இனி வரும் காலம் மழைக்காலமாக இருப்பதால் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் விராலிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக வெண்மணி கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள நாடக மேடையை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பஞ்சாயத்து கிராம பஞ்சாயத்துகளில் இதே போல் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் பல நாடக மேடைகள் இருப்பதாகவும் உடனடியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள நாடக மேடைகளை அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!