நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் RAP019 படத்தை வெற்றிப்பட இயக்குனர் N.லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா வருகை தந்தார். படம் உருவாகும் விதத்தை பார்த்து இயக்குனர் N.லிங்குசாமியையும் படக்குழுவினரையும் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் இன்று இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் பிறந்த நாள் என்பதால் #RAP019 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்.
ஒளிப்பதிவு – சுஜித் வாசுதேவ், இசை – DSP, சண்டைப்பயிற்சி – அன்பறிவ், படத்தொகுப்பு – நவீன் நூலி, வசனம் – Sai Mathav Burra, Brinda Sarathy. இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.