மாவட்டச் செய்திகள்
இலவச பயிற்சி கையேடுகளை தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்களுக்குவழங்கிய ஆட்சியர்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (03.09.2021) மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி அவர்கள் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து, இலவச பயிற்சி கையேடுகளை தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்களுக்கு வழங்கினார்.
உடன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை துணை இயக்குநர் ஆர்.அருணகிரி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர்.சீனிவாசராவ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் த.ரேவதி மற்றும் மாவட்ட திறன்பயிற்சி அலுவலக இயக்குநர் ஆர்.இரவீந்திரன் ஆகியோர் உள்ளனர்