உரிய திட்டமிடல் இல்லாமல் சோழவந்தானில் குறுகிய உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் 10 ஆண்டுகளுக்குப் பின்பு வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்தாலும் வாகனங்கள் நெரிசலில் சிக்கும் அபாயம்! மக்கள் வரிப்பணத்தை வீணடித்த அரசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை!?

கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் கட்ட ஆரம்பித்து பத்து ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் தற்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது என்கின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
அதிமுக ஆட்சியில் ஆரம்பித்த சோழவந்தான் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் ஊழல் முறை கேட்டால் ஆமை வேகத்தில் நடந்த ரயில்வே மேம்பாலம் பல கோடி ரூபாய் அரசு பணம் வீணடிக்கப்பட்டதுதான் மிச்சம். அதிமுக ஆட்சியில் சோழவந்தான் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாணிக்கம் தான் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகள் செய்ததாக சமூக ஆர்வலர்கள் மற்றும் சாட்டுகின்றனர். பலமுறை பல போராட்டங்கள் சமூக ஆர்வலர்கள் நடத்தியும் செவி சாய்க்காத கடந்த அதிமுக ஆட்சியில் ரயில்வே மேம்பால பணி வேகத்தில் நடந்தது என்பது தான் நிதர்சனம். இதனால் 10 வருடங்களாக பொதுமக்கள் வியாபாரிகள் பல துயரத்தை அனுபவித்து வந்து கொண்டு உள்ளனர் .அதுவும் மலை காலங்களில் சேரும் சகதியும் குண்டும் குழியுமாக இருக்கும் அந்த சாலைகளில் தான் கடந்து சென்று வந்ததையும் மறக்க முடியாது. பெயருக்கு அமைச்சர்கள் ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு வாய்மொழியில் உத்தரவிட்டு செல்வது வழக்கமாக இருந்தது.

2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி வந்தவுடன் ரயில்வே மேம்பாலத்தின் பணிகளை நேரில் ஆய்வு செய்து துரிதமாக மேற்கொள்ள அமைச்சர் மூர்த்தி அவர்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் வேறு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
அதற்கான கூடுதல் தொகையாக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.தற்போது மேம்பாலப் பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. இருந்தாலும் தற்போது மழை காலம் மற்றும் பண்டிகை காலங்கள் தீபாவளி பொங்கல் வருவதால் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வார்கள் என்பதால் மேம்பாலத்தின் கீழ் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதை சரி செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் பலமுறை கேட்டுக் கொண்டும் எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில்
சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் முடிந்தாலும் வாகன ஓட்டிகளுக்கு தீர்வு கிடைக்காத நிலைதான் உள்ளது.
ஒரு ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி 10 ஆண்டுகளாக நடக்கிறது என்றால் அது தமிழகத்திலே மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் தான் என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது. ஏனென்றால் அதி புத்திசாலி பொறியாளர்கள் மேம்பாலம் கட்டுவதற்கு முன்பு உரிய திட்டமிடல் இல்லாததால் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற பொறியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரயில்வே கேட் அடைக்கும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டப்படுகிறது.
சோழவந்தான் ரயில்வே பீடர் சாலையில் துவங்கி வாடிப்பட்டி செல்லும் சாலையில் இறங்குகிறது.
மேம்பாலத்தின் அகலம் குறுகலாக உள்ளதால் எதிரெதிரே வரும் வாகனங்கள் பார்த்து நிதானமாக தான் சொல்ல வேண்டும். மேம்பாலத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் முன்பு செல்லும் கனரக முந்திச் சென்றாள் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏனென்றால் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலையில் அமைக்க போதிய இடவசதியுடன் இல்லை.
சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் பயணிகளை ஏற்றுக் கொண்டு பாலத்தில் ஏறவோ, இறங்கவோ முடியாது.
பீடர் சாலை சர்வீஸ் சாலையில் வந்து பேருந்து நிலையத்திற்குள் திரும்புவதற்கும் போதிய இடவசதி இல்லை.
மேலும் நகரி வழி மதுரைக்கு செல்லும் பேருந்துகள் வாகனங்கள் வாடிப்பட்டி சாலையில் இறங்கி திரும்பி மேம்பாலம் மேல் வர வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல், ஏற்படும்.
மனித உரிமைகள் கழக மாவட்ட தலைவர் தவமணி கூறுகையில், ”ஜூன் மாதத்தில் பணிகள் முடியும் என அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ., வெங்கடேசன் தெரிவித்தனர். ஆனால் இன்றுவரை இழுபறியாக உள்ளது என்றும் ஒரே நாளில் முடியும் வேலையை ஒரு வாரமாக ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதாகவும் இதனால் பொதுமக்கள் சாலையைக் கடக்க மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்காவிட்டால்
போராட்டம் நடத்த உள்ளோம்” என்று தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தார்.
ஆட்டோ ஓட்டுனர்கள் கூறுகையில், ”உரிய மாற்றுப்பாதை வசதி செய்து தராமல் பாலப் பணிகளை செய்கின்றனர். உரிய திட்டமிடல் இல்லாத பாலத்தை கட்டி முடித்து வாகனங்கள் செல்ல மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தாலும் சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்” என்ற ஆதங்கத்தையும்.
இது எப்படியோ பொது மக்களுக்காக ஒரு திட்டத்தை செயல்படுத்த நினைக்கும் அரசு அந்தப் பணிகளை நேர்மையான ஒப்படைக்காமல் தவறுவதால் அந்த அதிகாரிகளின் அந்தப் பணிகள் உரிய திட்டமிடாமல் ஆரம்பிக்கும்போது தேவையில்லாமல் பல வருடங்கள் பணிகள் முடியாமல் பொது மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதுதான் நிதர்சனம்.
மேம்பாலம் திறந்தவுடன் போக்குவரத்து நெரிசல்களை பொறுத்திருந்து பார்ப்போம்.