ஊழியரை அடித்து கொலை மிரட்டல் !திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பேரூராட்சி திமுக பெண் தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி அவர்களின் கணவர் பண்ணை கார்த்திக் மீது போலீசில் புகார்!
ஒழுங்கீனமும், முறைகேடும் கண்டறியப்பட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற தலைப்பிலான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை உரையாற்றியதாவது:வெற்றிக்குப் பின்னால் உங்கள் உழைப்பு இருக்கிறது என்பதை நான் அறிவேன். இதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் இத்தகைய பொறுப்புக்கு வரும்போது எத்தனை சிரமங்களை அடைந்திருப்பார்கள் என்பதும் தெரியும். அதே பொறுப்புடன் தங்களுடைய பதவியை கவனிக்க வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களாட்சியின் உயிர்நாடியாகும்மாநகராட்சி மேயர் முதல் ஊராட்சி பிரதிநிதிகள் வரையிலான பெண்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை கணவரிடம் வழங்காதீர்கள். விதிகளை மீறும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது சட்டப்படியும், நியாயப்படியும் கடுமையான நடவடிககை எடுக்கப்படும்.
தங்களுடைய பொறுப்புகளில் ஒழுங்கினமாகவோ, நிர்வாகத்தில் முறைகேடு செய்தாலோ, எனது கவனத்திற்கு தெரிய வந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன். தமிழகத்தின் எதிர்காலம் என்பது திமுக கையில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு நாம் தலைகுனியக் கூடாது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உங்களுக்கு முதலில் தேவை ஒற்றுமை. அந்த ஒற்றுமை இல்லையெனில் அனைத்துப் பணிகளும் முடங்கிவிடும். விருப்பு, வெறுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலப்பணிகளை உறுதியுடன்செய்ய வேண்டும். ஒற்றுமையாகஇருங்கள் ஊருக்காக உழையுங்கள் என்ற அடிப்படை கருத்தினை கொண்டது தான் திமுக அரசின் நோக்கமாகும். இலக்கை நோக்கி உழையுங்கள்.உள்ளாட்சிப் பதவிகளில் ஒழுங்கீனம் மற்றும் முறைகேடு செயல்களில் ஈடுபட்டால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது!
ஆனால் முதல்வர் ஸ்டாலின் சொன்னதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு பெண்கள் தலைவர்களாக உள்ள ஊராட்சி பேரூராட்சி நகராட்சிகளில் அவர்களின் கணவர் அல்லது உறவினர்களின் சாம்ராஜ்யம்தான் நடக்கிறது….
பதவியில் உள்ள பெண்களின் கணவர்களே, பெரும்பாலும் நிழல் தலைவர்களாக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
பேரூராட்சிகளில் பெண் தலைவர்கள் செயல்படுகிறார்களா, அல்லது கணவர்களின் தலையீடு உள்ளதா என்பதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிக்க மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு போட்டும்
பேரூராட்சிகளில் பெண் தலைவர்களுடைய கணவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் நிர்வாகத்தில் தலையிடக்கூடிய நிலைதான் இருக்கிறது. செயல் அலுவலர்களே பெண் தலைவருடைய கணவரிடம் பேசுங்கள் என்று சொல்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
அதே போல திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பேரூராட்சியில் கண்ணன் என்பவர் மேல்நிலைத் தொட்டி தண்ணீர் ஏற்றும் பணி செய்து வரும் ஊழியர் ஆவார். ஆனால் அந்த பணிக்கு வேறு ஒருவரை நியமித்திருப்பதாக எரியோடு பேரூராட்சி பெண் தலைவராக இருக்கும் முத்துலட்சுமி அவர்களின் கணவர் பண்ணைக் கார்த்திக் எரியோடு பேரூராட்சியின் செயல் அலுவலரிடம் சில நாட்களுக்கு முன்பு கூறியதாகவும் ஆனால் செயல் அலுவலர் ஏற்கனவே பணியில் இருக்கும் கண்ணன் அவர்களை தொடர்ந்து பணி செய்யுமாறு கூறியிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த பேரூராட்சியின் தலைவர் முத்துலட்சுமி கணவர் பண்ணை கார்த்திக் 03/05/23 அன்று எரியோடு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து செயல் அலுவலரை அழைத்து ஏன் இன்னும் இந்த கண்ணனை வேலையில் வைத்துள்ளீர்கள் நான் சொன்ன நபருக்கு இந்த பணியை வழங்குமாறு சொன்னால் கேட்க மாட்டீர்களா என்று அதிகார தோரணையில் மிரட்டியுள்ளார் அதன் பின்பு ஊழியர் கண்ணனை அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவரது கைகளைப் பிடித்து முறுக்கி நெஞ்சில் அடித்ததாகவும் அதன் பின்பு பண்ணை கார்த்திக்குடன் வந்த மற்ற நபர்களும் ஊழியர் கண்ணனை முதுகில் குத்தி கொலை மிரட்டல் விட்டதாகவும் அதன் பின்பு கண்ணன் செய்வதறியாது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளார் என்றும் அதன் பின்பு காவல்துறையில் எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கணவர் பண்ணைக் கார்த்திக் கொலை மிரட்டல் விடுவதாகவும் இதனால் நான் மிகவும் மன உளைச்சலில் உள்ளதாகவும் எனக்கும் என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இது எப்படியோ பேரூராட்சிகளில் என் தலைவராக இருப்பவர்களின் கணவர்கள் தலையீடு இருப்பதால் பேரூராட்சி நிர்வாகத்தில் பணியில் இருக்கும் ஊழியர்கள் தங்கள் பணியை சுதந்திரமாக செய்ய முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். இதனால் மக்கள் நலத் திட்டங்கள் சரியான நேரத்திற்கு சரியாக போய் சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் ஊராட்சி பேரூராட்சி நகராட்சிகளில் உள்ள பெண் தலைவர்களின் கணவர்கள் தலையீடு இருப்பதாக புகார் வந்தால் உடனே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.