எட்டு மாதங்களாக கோரிக்கையை நிறைவேற்ற மனமில்லாமல் கல் நெஞ்சகாரர்கள் போல் உடுமலை வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் நடந்து கொண்டதால்
வட்டாட்சியர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளரின் அதிர்ச்சி வீடியோ!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் முக்கூடு ஜல்லிபட்டி கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த திலீப் என்பவர் மீது கடந்த 06-10-2024 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட காரணத்தால் 08-10-2024 ல் தற்காலிக பணி நீக்க உத்தரவு வழங்கபட்டது,
30-10-2024 அன்று மாலை 6:00 மணியளவில் நீதிமன்றத்தினால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டு அதன்பின் தீபாவளி பண்டிகைக்கு தொடர்ந்து அரசு விடுப்பு காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தினை அணுக இயலாமல் கடந்த 04-11-2024-ல் நேரில் சந்தித்து நடந்தவற்றையும் ஜாமின் மூலம் விடுதலை செய்யப்பட்ட விபரங்களை தெரிவித்திருந்தார், மேலும் 08-11-2024- அன்று தற்காலிக பணி நீக்க உத்தரவினை ரத்து செய்யுமாறு கோரிக்கை மனுவை வட்டாட்சிய ரிடம் வழங்கியுள்ளார்.
அதன் பிறகு எனக்கு 15-11-2024 தேதியிட்ட விளக்கம் கேட்கும் குற்றக்குறிப்பாணை 17-11-2024 அன்று வழங்கப்பட்டது, அதற்குரிய விளக்கத்தை 27-11-2024-ல் நேரிலும் பதிவு அஞ்சல் வழியாகவும் உரிய காலக்கெடுவிற்குள் பதில் விளக்கத்தை கொடுத்துள்ளதாக காட்சிகளுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் 17(b) குற்றக்குறிப்பாணை பதிலின் மீது கடந்த 24-12-2024 ல் ந.க. எண் 3839/2024/ஆ 1-ன் படி 08-01-2025-ல் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டு 7 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை பணி வழங்கப்படவில்லை என்றும்
17(b) குற்றக் குறிப்பானைக்கு உரிய பதிலினை உரிய காலக்கெடுவுக்குள் வழங்கிய பின்பும் பதில் ஏற்பு, இல்லை மறுப்பு குறித்த எவ்வித தகவல்களும் நிர்வாகத்தினால் தெரிவிக்கப்படவில்லை என்றும் பலமுறை நேரிலும் கடிதம் மூலமும் கோரிக்கை வைத்தும் பலனில்லை என கடந்த மே 1 முதல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது 5 வது நாளில் சக கிராம உதவியாளர்கள் முன்னிலையில் ஒப்புக்கொண்ட காரணத்தினால் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
அதன் பிறகு 03-06-2025 அன்று
மே மாத பிழைப்பூதியம் பெற கொடுக்கப்பட்ட கடிதத்தை பெற உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் மருத்துவிட்ட காரணத்தினால் பதிவு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
என்பதனையும் நாளது தேதி வரை வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்றும் எனவே 2025 மே மாத பிழைப்பூதியத்தினை வழங்கி உதவிட வேண்டுமெனவும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 9 மாதங்கள் ஆகிவிட்டப்படியால் அடிப்படை சட்ட விதிகளின்படி வழங்கப்படும் 75% ஊதியத்தினை வழங்கி உதவிட வேண்டுமெனவும்
உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திருக்காகவும் வேறு வழியின்றி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும்
எனவே பணியிடமும், விடுபட்ட பிழைப்பூதியமும் வழங்கிடும் வரையிலும் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கோ அலுவலக பணிகளுக்கோ எவ்வித இடையூறுமின்றி

11-06-2025 முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தினை
காலை 10 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
ஆனால் வட்டாட்சியர் கோட்டாட்சியர் ஆகிய இருவரும் பணி வழங்குவதை பற்றி எதுவும் கூறவில்லை என்றும்
எதிர்ப்பு அதிகமாக இருப்பதால் இப்போதைக்கு பணி உத்தரவு வழங்க முடியவில்லை என வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய வட்டாட்சியர் கௌரிசங்கர்
அரசியல் நிர்பந்தத்தால் பணி வழங்கிட இயலாது என உடுமலை வட்டாட்சியர் தகவல் தெரிவித்ததாகவும்
இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் திலீப்

உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்டாட்சியரின் அறைக்கு சென்று என்னுடைய கோரிக்கையை எட்டு மாதங்களாக நிறைவேற்றாததால் இனிமேல் சாவதை விட எனக்கு வேறு வழியில்லை என கூறிக்கொண்டு வட்டாட்சியர் முன்பு தற்கொலை செய்யப் போகிறேன்
என கையில் வைத்திருந்த விஷம் பாட்டிலை எடுத்து குடித்து உள்ளார்.
உடனடியாக உடுமலை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து உடுமலை காவல்துறையினர் வந்து விஷம் அருந்திய கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் திலிப்பை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தபோது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸில் ஏற மறுத்து உன்னை யாரும் காப்பாற்ற வேண்டாம் நான் இறந்தால்
அதற்கு காரணம் உடுமலை வட்டாட்சியர் கோட்டாட்சியர் அமைச்சர் சாமிநாதன் மற்றும் உடுமலை வட்டாட்சியர் கௌரிசங்கர் ஆகிய இருவரும் தான் என கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி உடுமலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் அங்கு முதல் விதி செய்தப்பட்டு மேல் சிகிச்சைக்கி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எது எப்படியோ கடந்த எட்டு மாதங்களாக தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக போராடிய கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் திலீப் கடைசியாக தற்கொலை செய்யும் அளவிற்கு உடுமலை வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகிய இருவரும் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டிருப்பது தான் இதிலிருந்து தெரிகிறது. அரசு ஊழியர்கள் யார் தவறு செய்யவில்லை அவர்கள் செய்த தவறை உணர்ந்து அதற்கான தண்டனை அனுபவித்து மீண்டும் அவர்கள் அந்த பணியில் அமர்த்தப்படுவது தான் காலங்காலமாக நடந்து வருவது தான் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கெல்லாம் விதிவிலக்காக உடுமலை வட்டாட்சியர் மற்றும் உடுமலை கோட்டாட்சியர் ஆகிய இருவரும் ஏதோ அரிச்சந்திரர்கள் போல் நடந்து கொண்டதுதான் தற்போது வேதனையாக உள்ளது. உயிரை துச்சமாக நினைத்து கல்நெஞ்சகாரர்கள் போல் நடந்து கொண்டதைப் பார்த்து திருப்பூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் அனைவரும் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அவர்களுக்குள் இருக்கும் அச்சத்தை போக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .