கஞ்சா வழக்கில் ஜாமீனில் வந்தவனை திருந்தி வாழ அறிவுரை சொன்ன போலீசை கல்லால் தாக்கி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கஞ்சா வியாபார கும்பல்!
குற்றவாளிகளை கைது செய்ய உசிலம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்

முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர் தற்போது

உசிலம்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளரின் வாகன ஒட்டுநராக பணியாற்றி வருகிறார்.,
26/03/ இரவு பணி செய்து விட்டு 27/03/2025 அன்று மதியம் முத்துக்குமார் வீட்டிற்கு சென்ற வழியில் உள்ள

முத்தையன் பட்டி டாஸ்மார்க் கடையில்
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமானில் வெளிவந்த பொன்வண்டு என்ற கஞ்சா வியாபாரி தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தபோது கஞ்சா வியாபாரம் செய்யும் பொன்வண்டுவை பார்த்து இனிமேல் சட்ட விரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவலர் முத்துக்குமார் அறிவுரை வழங்கியதாகவும், அதற்கு பொண்வண்டுவின் உடன் மது அருந்தி கொண்டிருந்த நான்கு பேர் காவலர் முத்துக்குமாரிடம் வாக்குவாதம் செய்த போது திடீரென காவலர் முத்துக்குமார் மீது கல்லால் தாக்கியதில்

முத்துக்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில்

முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.,
காவலர் முத்துக்குமாருடன் வந்த அவரது உறவினரான ராஜாராம் என்பவரையும் கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்,
அடிக்கடி கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்த பொன்வண்டு மற்றும் அவனது கூட்டாளிகள் மது போதையில்



காவலர் முத்துக்குமாரை கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் முத்துக்குமார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தப்பி ஓடிய கஞ்சா வழக்கில் வெளி வந்த பொன்வண்டு மற்றும் அவருடன் வந்த நண்பர்களை தேடி வருகின்றனர்.,
உசிலம்பட்டி அருகே காவலர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.,




