கடந்த அதிமுக எடப்பாடி ஆட்சியில் படித்த பட்டியில் மற்றும் பழங்குடி மாணவர்களின் (TC) சான்றிதழ்களை வழங்க கட்டாய கட்டணம் கேட்டு மிரட்டும் திண்டுக்கல் SBM கல்லூரி நிர்வாகம்!
மாணவர்களின் வருங்கால நலன் கருதி சமத்துவ நீதி ,திராவிட நாயகன் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத உதவித்தொகைகள் இரண்டும் வழங்கப்படுகின்றன. இந்திய அரசின் பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.2,50,000/-ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது, மேலும் அனைத்து கட்டணங்களும் கல்வி நிறுவனங்களுக்கு அவர்களால் கட்டாயமாக செலுத்தப்பட வேண்டும் மற்றும் பல்கலைக்கழகம் / வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணங்கள். பராமரிப்பு கொடுப்பனவின் மாதாந்திர விகிதம் பகல்நேர உதவித்தொகைக்கு ரூ.230/-பிற்பகல் முதல் ரூ.550/-பிற்பகல் வரையிலும், விடுதியில் தங்கியிருப்பவருக்கு ரூ.380/-பிற்பகல் முதல் ரூ.1200/-பிற்பகல் வரையிலும் இருக்கும். GOMs.No.6, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, (ADW.3) தேதியிட்ட 09.01.2012 இன் படி , இந்திய அரசின் மெட்ரிக் போஸ்ட் ஸ்காலர்ஷிப் சுயநிதி நிறுவனங்களில் படிப்பைத் தொடரும் பழங்குடியின மாணவர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2011-2012 ஆம் ஆண்டு முதல் அரசு / அரசு நியமித்த கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்டபடி, கல்வி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டாயக் கட்டணங்களுக்கான அத்தியாவசியச் செலவினங்களைச் சமாளிக்க, அவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தைப் பொறுத்து அவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.
இது தவிர, அரசு / அரசு உதவி பெறும் நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் செலுத்த வேண்டிய அனைத்து கட்டாய மற்றும் திருப்பிச் செலுத்த முடியாத கட்டணங்களும் உதவித்தொகையாக அனுமதிக்கப்படுகின்றன.
சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் பழங்குடி மாணவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்கள். பழங்குடியினர் நலத் துறையால் நேரடியாக ஈடுசெய்யப்படும் பாடநெறி கட்டணம் மற்றும் நிறுவனக் கட்டணங்களைச் செலுத்துவதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் படிக்கும் வகுப்பைப் பொறுத்து பராமரிப்புப் படியும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பொருட்படுத்தாமல், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் மேலாண்மை கல்லூரிகளின் முந்தைய 3 ஆண்டுகளுக்கான வருடாந்திர செலவு விவரங்கள், பிஇ ,பிடெக், பிஆர்க் படிப்புகளில் கடந்த 4 கல்வி ஆண்டுகளில் படித்த மாணவர்களின் விபரம், M.E/M.Tech/M.B.A/M.CA/M.Arch முதுகலைப் படிப்பில் உள்ள மாணவர்களின் விபரத்தையும் இணைக்க வேண்டும்.
ஆன்லைன் விவரங்களை ஆய்வு செய்து இணைப்பு அங்கீகாரம் வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். கல்லூரிகள் ஆன்லைன் மூலம் சமர்பித்த விவரங்களை கல்லூரிகளால் சாப்ட் காப்பி மற்றும் பேப்பரிலும் எடுத்து பராமரிக்கப்பட வேண்டும். பல்கலைக் கழகம் கேட்கும் போது கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தில் கல்லூரியின் முதல்வர் மற்றும் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட வேண்டும்.ஆன்லைன் விவரங்களை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்காத தனியார் கல்லூரிகளுக்கு 2025-26 கல்வியாண்டிற்கான இணைப்பு வழங்குவதற்கு எந்த சூழ்நிலையிலும் பரிசீலிக்கப்படாது. முதுகலைப் பாடத்திட்டத்திற்கு Ph.D உடன் ஒரு பேராசிரியர் அல்லது இணைப் பேராசிரியர் அந்தத் துறையின் தகுதி கட்டாயம், தவறினால் அந்த இணைப்பு நீட்டிக்கப்படாது. தேவையான தகவல்களை அளிக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது திரும்பப் பெறப்படும்.பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விவரங்களும் தங்களுக்குத் தெரிந்தபடி உண்மையானவை என்பதையும், அதில் எந்தப் பகுதியும் தவறானது அல்ல என்பதையும் உறுதிசெய்யும் வகையில், அறக்கட்டளையின், நிறுவனத்தின் தலைவர், செயலாளரால் ஒரு பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றும் பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்து

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இத்தனை சட்ட விதிகள் இருந்த போதும் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு

திண்டுக்கல் எஸ் பி எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகம்


எஸ் பி எம் கல்லூரியில் படித்து முடித்த பட்டியல் மற்றும் பழங்குடி மாணவ மாணவியர்களிடம் நான்கு ஆண்டுகள் முடிந்தும் அவர்களது சான்றிதழ்கள் வழங்காமல் கட்டாய கட்டணம் கேட்டு மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்து.

திண்டுக்கல் PN.பாறைபட்டி
பிரிவில் செயல்பட்டு
எஸ்.பி.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை படித்த பட்டியில் மற்றும் பழங்குடி மாணவர்களின் T C மற்றும் சாதி சான்றிதழ்களை வழங்கவில்லை என்றும் மாணவர்களின் வருங்கால நலன் கருதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க 19/05/2025 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.



அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் திண்டுக்கல் பாறைப்பட்டி
பிரிவில் செயல்பட்டு வரும் எஸ்.பி.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த பட்டியில் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு எந்தவித கல்விக் கட்டணம் இல்லை என்றும் மேலும் ஆதி திராவிடர் உதவித்தொகையை மட்டும் வாங்கி கல்வி நிர்வாகத்திற்கு கொடுத்தால் போதும். வேறு எந்த கட்டணமும் கட்ட தேவையில்லை என்று கூறி


பட்டியில் மற்றும் பழங்குடி மாணவர்களை எஸ் பி எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகம் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த அதிமுக எடப்பாடி ஆட்சியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நான்கு ஆண்டுகள் படித்து முடித்த பட்டியில் மற்றும் பழங்குடி மாணவர்களின் (TC) சான்றிதழ்களை வழங்க வேண்டுமென்றால் முழுக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே வழங்குவோம் என
SPM கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை படித்த பட்டியில் மற்றும் பழங்குடி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி வருவதாகவும்.
அது மட்டுமில்லாமல் கொரோனா காலத்தில் 2020 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் படித்துக் கொண்டிருந்தபோது இடைநிறுத்தம் செய்யப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்களையும் வழங்காமல்
பணம் கேட்டு SPM கல்லூரி நிர்வாகம் கந்துவட்டி கும்பல் கட்டபஞ்சாயத்து செய்வதுபோல் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் இதனால் படித்த சான்றிதழ் இல்லாமல் மாணவர்கள் மேல்படிப்பு படிக்கமுடியாமலும் எந்த வேலைக்கும் செல்லமுடியாமல் தின கூலி வேலைக்கு செல்லும் அவள் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்ட நிலையில் பெற்றோர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதால் பட்டியல் பழங்குடி மாணவ மாணவியர்களின் எதிர்காலம் நலன் கருதி
அவர்களின் பள்ளிச் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ்களை பெற்றுக் கொடுத்து மாணவர்களின் மேல் படிப்பை தொடரவும் மாணவர்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாத்திடுமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ பட்டியல் மற்றும் பழங்குடி ஆதிதிராவிட மாணவ மாணவியர்கள் கல்லூரியின் கனவுகளை நினைவாக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் திராவிட நாயகன் சமத்துவ நீதி நாயகன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

