இந்தியா
கர்நாடகத்தில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒருவரை சிறுநீர் குடிக்க வைத்த காவல் உதவி ஆய்வாளர் சிறையில் அடைப்பு..

கர்நாடகத்தில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒருவரை சிறுநீர் குடிக்க வைத்த காவல் உதவி ஆய்வாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடகத்தின் சிக்கமகளூரு அருகே கிருகுண்டாவை சேர்ந்த புனித என்பவரை காவல் உதவி ஆய்வாளர் சிறுநீரை குடிக்க வைத்துள்ளார்.
கோனிபீடு எஸ்.ஐ. அர்ஜுன் ஹெசாகேரி மீது புனித் கூறிய புகாரை சிஐடி போலீசார் விசாரித்தனர்.
விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்ட அர்ஜுன், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.