மாவட்டச் செய்திகள்

கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் நூதன முறையில் மோசடி  செய்த வடமதுரை  ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!


திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி கொடுத்த கொத்தனாருக்கு  கொடுக்க வேண்டிய 5 லட்சம் ரூபாயை கொடுக்காமல்  ஏமாற்றியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு

குளத்தூர்  ஊராட்சி செயலாளர்  மற்றும் வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி  அலுவலர் மற்றும் பயனாளி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சருக்கு புகார் மனு!

தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக, முன்னாள் முதல்வர் கருணாநிதி குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி,

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டது. பின்னர், 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும். கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தர உத்தரவிட்டார்.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட வடமதுரை ஊராட்சி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட விராலிப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட பணி செய்து வரும்

நாட்ராயன் இவரது மனைவி நாகலட்சுமி கொளத்தூர் ஊராட்சியின் கொளத்தூர் ஊராட்சி 1 வது வார்டு உறுப்பினராக இருந்து வந்துள்ளார் . இந்நிலையில் கடந்த 2023 ஆண்டு விராலிப்பட்டி காலனி பகுதிக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் ஐந்து வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது
இந்த ஐந்து வீடுகளையும் வார்டு உறுப்பினர் நாகலட்சுமி மற்றும் அவரது கணவர் நாட்ராயன் செய்து தர வேண்டும் என வடமதுரை ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஓவர்சீஸ் மற்றும் குளத்தூர் ஊராட்சி செயலர் மோகன் ஆகியோர் கூறியுள்ளனர்
அதேபோல் பயனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் ஒவ்வொரு தவணையையும் நீங்கள் வீடு கட்டி முடித்தவுடன் அந்தந்த காலகட்டத்தில் தருவதாக ஊராட்சி செயலர் மோகன் மற்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர் .
ஒவ்வொரு வீட்டுக்கும் அரசின் சார்பாக மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது அதில் 60 ஆயிரம் ரூபாய் சோலார் போக மீதி பணம் உங்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். அதை தொடர்ந்து ஐந்து வீடுகளையும் கடந்த வருடத்தின் 80 சதவீதம் முடித்த நிலையில் முதல் இரண்டு தவணைகளை மட்டும் ஊராட்சி செயலாளர் மோகன் வாங்கி கொடுத்துள்ளார். அதன் பிறகு பணம் தொடர்ந்து தருவதாகவும் தமிழக அரசு பணம் தரவில்லை எனக் கூறியுள்ளனர்.
மேலும் கட்டிடப் பணியும் 80 சதவீதம் முடிந்துவிட்டன நிலையில்

வடமதுரை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பணம் தற்போது வரை 5 லட்சத்துக்கு மேல் நிலுவையில் உள்ளது .
வீட்டு உரிமையாளர்கள் ஊராட்சி செயலாளரிடம் கொடுத்து விட்டதாக கூறுவது
உண்மையா என்று கேட்டுள்ளார் .அதற்கு பணம் ஏறிவிட்டது எங்களுக்கு எதுவும் தெரியாது என ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியுள்ள நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வடமதுரை காவல் நிலையம் தாடிக்கொம்பு காவல் நிலையம் அதேபோல் வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என அனைத்து அதிகாரிகளிலும் தங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை பயனாளி இடமும் அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.
பல வருடங்களாக குளத்தூர் ஊராட்சியிலேயே எந்த மாறுதலும் இல்லாமல் பணி செய்து வரும் மோகனிடமும் கேட்கும் பொழுது பயனாளிகளை வைத்து மோகன் தொடர்ந்து மிரட்டியும் உங்களுக்கு பணம் தர முடியாது எந்த ஆதாரமும் உங்களிடம் இல்லை எங்கு வேண்டுமானாலும் என ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஓவர்சீர் உள்ளிட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல் சம்பந்தப்பட்ட பயனாளிகளும் உங்களுக்கு கொடுக்க முடியாது எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் எனக் கூறியதால் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட நாகலட்சுமி மற்றும் அவரது கணவன் நாட்ராயன் இருவரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு தாடிக்கொம்பு காவல் துறையினர் மற்றும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என அனைவரிடமும் புகார் மனு வழங்கியுள்ளனர்.
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மாவட்டத்திலேயே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தங்களது சுயலாபத்திற்காக அப்பாவிகளின் வாழ்வாதாரத்துடன் விளையாடி வருகின்றனர் மேலும் நாகலட்சுமி கூறும் பொழுது தினந்தோறும் கடன்காரர்கள் வீட்டிற்கு வருவதால் என்ன செய்வதென்று எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஐந்து லட்சம் ரூபாய் கடனை எங்களால் எப்படி கட்ட முடியும் ஊராட்சி செயலாளர் மற்றும் ஓவர்சீஸ் கூறியதால் வீட்டை கட்டினோம் தற்போது கடன்காரர்களாக நிற்கிறோம் எங்களது நிலத்தையும் அடகு வைத்து பணத்தை போட்டுள்ளோம் அதற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
எது எப்படியோ அரசு நல திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்ல வேண்டும் என்பதற்காக பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அரசு பணத்தை செலுத்தி வரும் பணத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் நூதன முறையில் மோசடி செய்து வருவது தொடர் கதையாக உள்ளது.
திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் ஒரு சில கருப்பு ஆடுகள் இது போன்ற மோசடி வேலைகளை அரங்கேற்றி வருகின்றனர். ஆகவே

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அரசு நலத்திட்டங்களில் மோசடி வேலையில் ஈடுபட்டு வரும் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Back to top button