கல்வி நிர்வாக சீர்கேட்டால் கழிவறை மற்றும் அடிப்படை வசதி இல்லாத இல்லாத அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடியரசு தின விழா! நடவடிக்கை எடுப்பாரா நாமக்கல் மாவட்ட ஆட்சியர்!?

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள
கழிவறையை மறைத்து குடியரசு தின விழா கொண்டாடிய பள்ளியின் அவல நிலை!





நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் வெப்படை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.(எலந்தகொட்டை )
இந்தப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்தப் பள்ளியில் மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை தண்ணீர் இல்லாமல் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் தற்போது மாணவ மாணவிகள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே மாணவ மாணவிகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ள கழிவறையை பயன்படுத்தி வருவதால் தொற்று நோயால் அவதிப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது சம்பந்தமாக பள்ளி நிர்வாகம் கழிவறையை சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது மட்டுமில்லாமல் கழிவறைக்கு கதவே இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள கழிவறையை பராமரிப்பு செய்து மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்ற இறக்கக்குணம் இல்லாமல் எலந்த கொட்டை பஞ்சாயத்து தலைவர் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது .ஆகையால் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசு தொடக்கப்பள்ளியில் கழிவறை பராமரிப்பு செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாமக்கல் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் பள்ளியில் உள்ள கழிவறையை பராமரிப்பு செய்யாமல் அலட்சியப் போக்கை கடைபிடித்து வரும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!
எது எப்படியோ அரசு பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் பணி செய்யும் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்திருந்தால் இது போன்று சுகாதமற்ற நிலையில் கழிவறையை பராமரிக்காமல் இருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.