காவல் செய்திகள்

காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம் பெண் பொறியாளரை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நபரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல  உதவிய கோயம்பேடு மகளிர் காவல் நிலைய  காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இருவரும் காத்திருப்போர் பட்டியல் மாற்றம்!


சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் இளம் பெண் பொறியாளரை  கனடா நாட்டில் வேலை செய்து வரும் நபர் காதலித்து திருமணம் செய்வதாக கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்ட பெண்

கோயம்பேடு மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தாஹிரா  அவர்களிடம் புகார் கொடுத்து பல நாட்கள் ஆகியும்   எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை எனவும், மாறாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய நபரை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் அவரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கு ஏதுவாக முன்ஜாமீன் பெறுவதற்கு உடந்தையாக  செயல்பட்ட காரணத்தினால் அந்த நபர்  கனடா நாட்டிற்கு தப்பி சென்று விட்டார் என பாதிக்கப்பட்ட பெண் சென்னை பெருநகர காவல் ஆணையர்  அருண் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் காவல் ஆணையர் உத்தரவின் பெயரில்
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மேற்கு மண்டல இணை ஆணையர்  விசாரணை நடத்தியதில் பாதிக்கப்பட்ட பெண் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். என்னவென்றால்
கனடா நாட்டில் வேலை செய்து வரும் பொறியாளர்  காதலித்து  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை உடலுறவு  வைத்துக் கொண்டதில் தற்போது கர்ப்பமாகி இருப்பதாகவும் ஆனால் அந்த நபர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோயம்பேடு மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளிடம் புகார் கொடுத்தேன் என்றும் அந்தப் புகாரின் மீது  பவிசாரணை மேற்கொள்வதாக கூறி  மருத்துவ செலவுக்காக வைத்திருந்த  1500 ரூபாய்  பெற்றுக்கொண்டு புகார் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை
என  நடந்ததை பாதிக்கப்பட்ட இளம் பெண் பொறியாளர் மேற்கு மண்டல இணை ஆணையர் திஷா மிட்டலிடம் கூறியுள்ளார்
உடனே  இணை ஆணையர் உண்மையை கண்டறிய, புகார் கொடுக்க வந்த பாதிக்கப்பட்ட பெண்ணை  கோயம்பேடு மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு செல்போனில் பேச வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மகளிர் காவல்  ஆய்வாளர் தாஹிரா விடம் பேசும்போது தனது குடும்பச் செலவுக்கு வைத்திருந்த பணத்தை நீங்கள் வாங்கிக் கொண்டீர்கள் அதை கொடுத்து விடுங்கள் மேடம்” என்று கேட்டதற்கு, “நீ என்ன கொடுத்த பணத்தை கேட்கிறாய்” என ஆய்வாளர் அதற்கு பதில் அளித்ததாகவும், மறுமுனையில் இருவரும் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்த இணை ஆணையர் திஷா மிட்டல், உண்மையை தெரிந்து கொண்டு உடனடியாக கோயம்பேடு மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர்  தாஹிராவை
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
அதுமட்டுமில்லாமல்  இளம் பெண் பொறியாளரை ஏமாற்றிய வெளிநாட்டு இந்திய வாழ் நபரிடம் பணம் பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்ல
ஜாமீன்  கிடைக்க
உடந்தையாக

W 33 மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெனாசீர் இருந்ததால் அவரையும் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட  இரண்டு பேரிடம் தொடர்ந்து  துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Articles

Back to top button