தீயணைப்புத்துறை பணியாளர்களுக்கு (risk allowance 200 ரூபாய் ) உயர்வு வழங்காதது ஏன்!? தீயணைப்பு துறையினரின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா!?
சீருடை பணியாளர்களில் காவல்துறையில் உள்ளவர்களுக்கு மட்டும் risk allowance உயர்த்தப்பட்டுள்ளது .
சீருடைப் பணியாளர்களுக்கு போக்குவரத்து பயணப்படி வீட்டு வாடகைப்படி risk allowance உள்ளிட்ட பல்வேறு படிகள் சம்பளத்துடன் வழங்கப்படுகிறது . காவல் துறை, தீயணைப்பு துறை, சிறைத்துறை, risk allowance இதுவரை ரூபாய் 800 வழங்கப்பட்டு வந்தது. தற்போது காவல்துறைக்கு மட்டும் ரிஸ்க் அலவன்ஸ் 800 ரூபாயிலிருந்து 200 ரூபாய் உயர்த்தி ஆயிரம் ரூபாயாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறையினர் பேரிடர் காலங்களில் காவலர்களுக்கு இணையாக வெள்ள அபாயம் தீ விபத்து என சம்பவ இடத்திற்கு சென்று உயிரை பணயம் வைத்து பணி செய்து வருகிறார்கள் .ஆகவே சீருடை பணியாளர்களுக்கு சமமாக risk allowance தீயணைப்புத்துறை வீரர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் பாரபட்சமின்றி அனைவரும் சமம் என்ற எண்ணத்துடன் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு risk allowance 200 ரூபாய் உயர்த்தி 1000 ரூபாயாக வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்!