மாநகராட்சி

குண்டும் குழியுமாக, சகதியும் சேற்றுமாக காட்சியளிக்கும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குடியின் அவல நிலை!
மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?

குண்டும் குழியுமாக சேரும் சகதியும் ஆக இருக்கும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குடியின் அவல நிலை! நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும்
சீராக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்!நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் தான் விளாங்குடி பொதுமக்கள் புகார் கொடுத்தபோது!
மதுரை விளாங்குடி 20 வது வார்டு மா மன்ற பெண் உறுப்பினர் அதிமுக வைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தாமல் அப்பகுதி மக்களை புறக்கணிப்பது சரியா!?

மதுரை மாநகராட்சி 72 வார்டுகளை கொண்டிருந்தது. அதன்பின், மாநகராட்சி எல்லைகளை விரிவாக்கம் செய்து மாநகராட்சியுடன் ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 நகராட்சிகள், ஹார்விப்பட்டி, திருநகர், விளாங்குடி ஆகிய 3 பேரூராட்சிகள் மற்றும் 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு வார்டுகள் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டன.

பல வருடங்களுக்கு முன்பு ஊராட்சியாக இருந்த மதுரை அருகே உள்ள விளாங்குடி அதன் பின்பு பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. அதன் பின்பு மதுரை மாநகராட்சி விரிவாக்கத்தின் போது மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 23 வது வார்டு செயல்பட்டு வந்தது கடந்த மாநகராட்சி தேர்தலில் 20 வார்டு ஆக விளாங்குடி பகுதி அறிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி 20 வது வார்டு (விளாங்குடி)மாமன்ற உறுப்பினர் நாகஜோதி சித்தன்


மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் .அதில் 80 வார்டு மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள்.
15 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்
நான்கு வார்டு மாமன்ற உறுப்பினர்கள் (சுயேட்சை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள்)
ஒரு வார்டு மாமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்தவர் ஆவார்.
இதில் முக்கியமாக விளாங்குடி அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டதாகும். மதுரை மாநகராட்சி
(விளாங்குடி) 20 வது வார்டு மாமன்ற பெண் உறுப்பினர் அதிமுகவை சேர்ந்த
சி.நாகஜோதிசித்தன் ஆவார்.
அவரது கணவர்
KR.சித்தன் இவர்
20வது வார்டு வட்ட கழக செயலாளர் ஆவார்.

தற்போது கடந்த சில தினங்களாக மதுரை மற்றும் மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மதுரை மற்றும் மதுரை சுற்றியுள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் தேங்கி நின்று சாலைகள் முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது.

விளாங்குடி இருபதாவது வார்டு பகுதிகளில் சேரும் சகதியுமாக காணப்படும் தெருக்களில் உள்ள சாலைகள்


இதில் முக்கியமாக மதுரை மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குடி 20 வது வார்டு பகுதியில் உள்ள

காரல் மார்க்ஸ் நகர் ,விரிவாக்கம்
பாரதியார் நகர் ,சொக்கநாதபுரம் குறுக்கு தெரு, பழைய விளாங்குடி, 7 தெருக்கள், சர்ச் குறுக்கு தெரு ,வளவன் தான் குறுக்கு தெரு ,முனியாண்டி கோவில் தெரு காந்தி தெரு சமாதான நகர் பகுதிகளில்

தெருக்களில் சேரும் சகதியமாக காணப்படுகிறது என்றும் இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சிக்கு புகார் அளித்தும் எந்தவித ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும்

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விளாங்குடி பொதுமக்கள் புகார் மனு கொடுத்த போது


தற்போது விளாங்குடி 20 மற்றும் 21 வது வார்டுகளில் உள்ள தெருக்கல் முழுவதும் சேதமடைந்து மழைநீர் நிற்பதும் இல்லாமல் ஒரு சில தெருக்களில் சேரும் சகதியும் ஆக கடந்த சில தினங்களாக இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் அப்பகுதி முழுவதும் கழிவு நீர்கள் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் அதுமட்டுமில்லாமல் சாலை ஓரங்களில் தேங்கிக் கிடக்கும் கழிவு குப்பைகள் தேங்கி நிற்கும் மழை நீருடன் கலந்து துர்நாற்றம் வீசும் அவலம் ஏற்பட்டுள்ளது என்றும்.தெருக்களில் சேறு சகதியுடன் இருப்பதால் சாலையில் நடக்க முடியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு சிரமப்பட்டு வருவதாகவும் ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிகை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது சம்பந்தமாக மதுரை மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குடி 20 வார்டு பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த போது அங்குள்ள தெருக்கள் முழுவதுமே சேரும் சக அதிகமாக காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த நம் பத்திரிக்கை குழு விளாங்குடி 29 வது வார்டு கவுன்சிலர் நாகஜோதியின் கணவர் இருபதாவது வார்டு அதிமுக செயலாளர் KR சித்தனிடம் விசாரித்தபோது விளாங்குடி இருபதாவது வார்டு மாமன்ற உறுப்பினர் அதிமுகவை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் எந்த வேலைகளையும் எங்களை செய்ய விடுவதில்லை . அது மட்டுமில்லாமல் எந்த வித மக்கள் நலத் திட்டங்களுக்கும் இதுவரை நிதி ஒதுக்கவில்லை என்றும் எங்கள் சொந்த செலவில் பொதுமக்களுக்கு தேவையான ஒரு சில வேலைகளை தானே செய்து வருவதாகவும் மழைக்காலம் என்பதால் எங்களால் முயன்றளவு இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து கொண்டு வருகிறோம் என்றும் பொதுமக்கள் திருப்தி அடையும் வகையில் எங்களால் செய்ய முடியவில்லை என்றும் வேதனையுடன் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

அதிமுக வார்டு மாமன்ற உறுப்பினர் என்ற ஒரே காரணத்தால் மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மற்றும் திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் அனைவரும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தாமல் அப்பகுதி மக்களை புறக்கணித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல்
அனைத்து வசதிகளும் கொண்ட பழைய மாநகராட்சி வார்டுகளை போல், புதிய விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளிலும் மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் பாதாள சாக்கடை வரிகளை கறாராக வசூல் செய்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம்.

அப்படி இருக்கும் போது பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதியான சாலை வசதியை உடனடியாக சரி செய்து கொடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கிறது மாநகராட்சி நிர்வாகம் . இந்த மக்கள் விரோத செயல்களால் மதுரை மாநகராட்சிக்கு புறநகர் நகர் விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு ஆளும் கட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் திமுக கட்சி நிர்வாகிகள் ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் இருக்கும் விளாங்குடி போன்ற ஒரு சில வார்டுகளில் மக்கள் திட்ட பணிகளை நடக்க விடாமல் செயல்படுத்த விடாமல் நிதி ஒதுக்க விடாமல் முடக்குவதால்
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவின் மீது உள்ள அதிருப்தியை விளாங்குடி பகுதி பொதுமக்கள் வெளிக்காட்டுவார்கள் என்கின்றனர் அங்குள்ள மூத்த திமுக உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.
எது எப்படியோ தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு முறையும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மட்டுமில்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றும் போது மக்கள் திமுக கட்சிக்கு மட்டும் இல்லாமல் நம் அனைவரையும் நம்பி வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் பாகுபாடின்றி மக்கள் நலத் நலத்திட்டங்கள் போய் சேர வேண்டும் என்று பேசி வருவது குறிப்பிடத்தக்கது . விளாங்குடி இருபதாவது வார்டு இருக்கும் சமூக நலக்கூடம் குடிநீர் ஆழ்குழாய் கிணறு தண்ணீர் தொட்டி, மற்றும் ஆண்கள் பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் இலவச கழிப்பறை இவைகள் அனைத்தும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சில வருடங்களுக்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணி செய்ததாக தகவல் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது அனைத்து கட்டிடங்களும் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது இதில் முக்கியமாக பெண்கள் கழிப்பறை கட்டிடங்கள் தற்போது இயங்காமல் பழுதடைந்து இருப்பது தான் வேதனையாக உள்ளது. சமூக நலக்கூடங்களின் உட்புறம் சுவர்கள் முழுவதும் சேதம் அடைந்து காணப்படுகிறது. புதுப்பித்தல் பராமரிப்பு செய்தல் பணிக்கு பல லட்ச ரூபாய் ஒதுக்கியதில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. பெயருக்கு பராமரிப்பு என்ற பெயரில் வேலை செய்துவிட்டு பல லட்ச ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள். ஆகையால் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து ஒப்பந்ததாரர்கள் மீது மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர்

.ஆகையால் மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குடி பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதியான கழிப்பறை வசதி,சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால் கால்வாய், மின்சாரம் தெரு விளக்குகள் ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி அவர்களின் பார்வை விளாங்குடி பகுதி மக்கள் மேல் விழுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button