கைது நடவடிக்கை எடுக்காமல் மாதம் 10 லட்சம் ரூபாய் வரை திருப்பூர் மாவட்ட (சிவில் சப்ளை சிஐடி)தனிப்படை பிரிவுக்கு கப்பம் கட்டும் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல்! அதிர்ச்சித் தகவல்!
சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் 18005995950 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலவசமாக வழங்கி வரும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு கேரள மாநிலத்தில் விற்பதற்கு ஒரு கும்பல் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகிறது அதுவும் குறிப்பாக தமிழ்நாடு கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள நகரங்களில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று வருவதாகவும் மாத ஒரு முறை சோதனை என்ற பெயரில் ரேஷன் அரிசி கடத்தும் நபர்களை உணவு தடுப்பு பிரிவு காவல் துறையினர் பிடித்து ஒரு சிலர் மீது வழக்குப் பதிவு செய்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்து அவர்களை கைது நடவடிக்கை எடுத்தது போல் கண்துடைப்பு நாடகம் நடத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை தாலுகாவில், 183 ரேஷன் கடைகளில், 1.10 லட்சம் ரேஷன் கார்டுகளும், மடத்துக்குளம் தாலுகாவில், 63 ரேஷன் கடைகளில், குறைந்தது 50 ஆயிரம் பேர் அரிசி அட்டைதாரர்களாக இருக்கிறார்கள். உடுமலை, மடத்துக்குளம் பகுதி ரேஷன் கடைகளில் உடுமலையில், 10 பேர் கொண்ட ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் செயல்படுகிறது. பிரதான ரேஷன் கடைகளில், தங்கள் ஆட்களை நியமித்துள்ளனர். ரேஷன் அரிசி வாங்கும் பொதுமக்களிடம் இரு சக்கர வாகனங்களில் வீடு வீடாக சென்று ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மொத்தமாக டன் கணக்கில் சேர்ந்தவுடன் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்யப்பட்டு கேரளாவிற்கு கடத்திச் சென்று அதிகப் விலைக்கு விற்கப்படுவதாகவும் உடுமலை காந்தி சவுக் என்ற இடத்தில் ராஜன் என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி கேரளா போன்ற ஊர்களுக்கு சப்ளை செய்கிறார் என்றும் இது சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு தகவல் கொடுத்தாலும் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற ரேஷன் அரிசி கடத்தலை ஓரளவு தடுத்து நிறுத்த முடியும் என்பது தான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். ஆகையால் திருப்பூர் மாவட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு துறை மற்றும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்!