காவல் செய்திகள்

கைது நடவடிக்கை என்ற பெயரில் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் தேனி பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் மற்றும்  மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள்!?      தென் மண்டல ஐஜி நடவடிக்கை எடுப்பாரா!?

,தேனி கோபாலபுரத்தில் வசித்து வருகின்ற முன்னாள் ராணுவ வீரர்  வேல்ராஜ் மனைவி, தனலட்சுமியை தேனி  துணை காவல் கண்காணிப்பாளர் தூண்டுதலின் பெயரில்

தேனி துணை காவல் கண்காணிப்பாளர் பி பார்த்திபன்

பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் காலை 6.30  மணி அளவில்

பழனி செட்டிபட்டி காவல் நிலைய காவல் பெண் உதவி ஆய்வாளர்  அத்துமீறி கைது செய்து அழைத்துச் சென்றதால் வேல்ராஜ் வளர்த்து வந்த  தம்பி மகள் எட்டாம் வகுப்பு படிக்கும் மேனகா பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?

தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்  மாணவி மேனகா.

நிலம் மோசடி சம்பந்தமாக வரும் புகார்களுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையம் மீது குற்றச்சாட்டு !கடந்த நான்கு மாதங்களாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடிப் பார்வையில் இருக்கும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அழைத்து சிறப்பு ஆலோசனை கூட்டம் ஏன் நடத்த வில்லை!? இதற்கு யார் தடை போட்டது என்று நேர்மையான காவலர்களிடம் விசாரித்த போது எஸ்பி காவல் ஆய்வாளர் முருகானந்தம் தான் என்றும் இவர் மீது 100 க்கும் மேற்பட்ட புகார்கள் டிஜிபி மற்றும் தமிழக முதல்வருக்கும் அனுப்பி இருப்பதாக அதிர்ச்சி தகவல்.கடந்த அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி க்கு சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்துள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

தேனி கோபாலபுரத்தில் வசிக்கும்  காமு செட்டியார் அவர்களுக்கு இரண்டு மகன்கள்  .ஒருவர் முனியசாமி மற்றொருவர் முனுசாமி ஆவார்கள். இவர்கள் இரண்டு பேர் பேரில்  கொடுவிலார்பட்டி கிராமத்தில்  9.5 ஏக்கர் நிலம் உள்ளதாம்.
முனிசாமிக்கு பாத்தியப்பட்ட சொத்தின் விவரம் UDR க்கு முன்பு கொடுவிலார் பட்டி கிராமம், சர்வே எண் 706 /6 706/12
UDR க்கு பின்பு 706 /8A,8B . நிலங்கள் தனிப்பட்டாவாக உள்ளது.
கொடுவிலார்பட்டி கிராமம் சர்வே எண் 697/1A, 701/6 & 706/7 K.S.முனியசாமி அவர்களுக்கு பாத்தியப்பட்ட சொத்தாகும்.
காமு செட்டியார் மகன் முனிசாமி கடந்த 15/01/2000 ஆண்டு இறந்து விட்டார்.  05/04/2022 இல்  K.S.முனியசாமி இறந்து விட்டார்.

முனிசாமிக்கு சட்டப்படி வாரிசுத்தார்கள் முனுசாமியின் மனைவி முனியம்மாள் மகன்கள் திருப்பதி, துரைராஜ் 
மகள்கள் தனலட்சுமி , இந்திரா, ஆகிய ஐந்து நபர்கள் ஆவார்கள்.

தனலட்சுமியின் புகார் மீது வழக்குஇந்த நிலத்தை 14/12/2009 அன்று தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் எண்.10228 /2009 . கோபாலபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ரங்கநாயகி எம் பெருமாள் மகன் சிவக்குமார் ராஜமாணிக்கம் மகன் ஜெகதீஸ்வரி ஆகியோர் பெயரில்  சர்வே எண் 706/8B குன்னூர் கிராம சர்வே எண் 965/8 இந்த நிலங்கள் சட்டவிரோதமாக முறைகேடாக k.S. முனியசாமி மற்றும் அவரது மகன் பாலாஜி இருவரிடம் மட்டும் கிரையம் பெற்று பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும்  இதற்கு உடந்தையாக சீனி நாயக்கர் மகன் ராஜன் சாட்சி கையெழுத்து போட்டுள்ளதாகவும்
ஆறுமுகம் மனைவி தனலட்சுமி  தேனி நில அபகரிப்பு பிரிவு  சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி நில அபகரிப்பு பிரிவு காவல் துறை (cr.m.p.no. 750/2022)  156/3 அதன் பெயரில் மனு தாக்கல் செய்யப் பட்டு   மனு சம்மந்தமாக க. எண் 40/2023  உத்தரவின் பெயரில் 09/02/2023  DSP/ ALGSC  அவர்கள் உத்தரவின் பெயரிலும் தேனி மாவட்ட நில அபகரிப்பு குற்ற தடுப்பு சிறப்புப்பிரிவு  இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு IPC 81,82 பிரிவின் கீழ் கு. எண்.8/2023 U/S.419,420,465, 468,471, 166 r/w 34,120( B)  கோபாலபுரத்தை சேர்ந்த சிவக்குமார் மனைவி ரங்கநாயகி
பெருமாள் மகன் சிவக்குமார்
ராஜமாணிக்கம் மகன் ஜெகதீஸ்வரி  ஆகிய நான்கு பேர் மீது சிறப்பு  சார்பு ஆய்வாளர் S.ரவி ராஜா வழக்கு பதிவு செய்து 18/02/2023 அன்று நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக உள்ளது.

வேல்ராஜ் மனைவி தனலட்சுமி  மற்றும் ஆறுமுகம் மனைவி தன லட்சுமி கொடுத்த புகார்


பி சி. பட்டி காவல்துறையினர் அத்துமீறல்.
வீட்டிற்குள் அத்துமீறி  நுழைந்து  8-ம் வகுப்பு படிக்கும் மாணவி மற்றும் அவரது  தாய் இரண்டு இரண்டு பேரையும் அடித்து  துன்புறுத்தியதுடன்  பாலியல் சீண்டல்  செய்து  மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக தேனி துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிசி பெட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் !
புகார் !
(சைல்ட் லைன் தேனி )க்கு  பாதிக்கப் பட்டமாணவன் அனுப்பிய புகார்.i


கடந்த ஒன்றரை வருடங்களாக கோபாலபுரத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் பயங்கர ஆயுதங்களை வைத்து கொலை மிரட்டல் செய்து பள்ளிக்கு செல்ல விடாமல் வழிமறித்து தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயற்சி செய்து வருவதாகவும் இந்த நபர்கள் மீது பல குற்ற வழக்குகள் இருந்தும் தேனி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன்,   பழனிசெட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், சார்பு ஆய்வாளர்கள் பாக்கியம்(WSI), முத்துக்கண்ணன், ஈஸ்வரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் 10 காவலர்கள் பல லட்சம்  லஞ்சமாக பெற்றுக் கொண்டு பள்ளியில் இருந்தபோது பல பொய்யான புகார்களை தானாக வாங்கி பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்,  மேலும்  வீடியோ ஆதாரத்துடன் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  புகார் கொடுத்த ஒரே காரணத்திற்காக   உன் வாழ்க்கையையும், உன் தங்கை வாழ்க்கையும் பாலாக்கிவிடுவோம் என்று மிரட்டியும்,  வீட்டிற்குள் இரவு நேரங்களில் அத்துமீறி நுழைந்து எட்டாம் வகுப்பு படிக்கும்   மேனகா மற்றும் அவரது  தாயார் இருவரையும் கண்ட இடங்களில் தொட்டு பாலியல் சீண்டல் செய்ததாக மனமுடைந்த மேனகா  காலை (24.03.2023) காலை சுமார் 4.30 மணிக்கு பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்று மேனகா சகோதரர் தேனி சைல்டு லைன் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளார்

தேனி , கோபாலபுரத்தில் வசித்து வருகின்ற முன்னாள் ராணுவ வீரர்  வேல்ராஜ், தனலட்சுமி தம்பதியினருக்கும், அவர்களது சகோதரரின் (சிவக்குமார், ராஜேஸ்வரி தம்பதியினர் பாலகிருஷ்ணாபுரம்) மைனர் மகன், மைனர் மகள் மாணவ,மாணவிக்கும் (நாகலாபுரம் தனியார் பள்ளியில் 12, 8 ஆம் வகுப்பு) படித்து வருகிறார்கள். இவர்களை தொடர் அச்சுறுத்தல், மிரட்டல் செய்து வருவதாகவும், உண்மைக்கு புறம்பான வகையில் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும், அதே ஊரைச் சேர்ந்த எம்பெருமாள் மகன் சிவகுமார் கொடுத்த புகாரின் பெயரில்  பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தேனி துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரும்  சேர்ந்து  கைது நடவடிக்கை  மேற்கொண்டதாகவும் மைனர் மாணவனின் பெயரையும்  வேண்டுமென்றே சேர்த்து வழக்குபதிவு செய்து, இன்னலும் இடைஞ்சலும் செய்து வருவதாகவும், வீண் தொந்தரவு செய்து வருவதாகவும், இதனால் மிகவும் மன உளைச்சலில் ஆளாக்கப்பட்டுள்ளேன் என்றும் 
கடந்த ஒன்றரை வருடங்களாக கோபாலபுரத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் பயங்கர ஆயுதங்களை வைத்து கொலை மிரட்டல் செய்து பள்ளிக்கு செல்ல விடாமல் வழிமறித்து தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயற்சி செய்து வருவதாகவும் இந்த நபர்கள் மீது பல குற்ற வழக்குகள் இருந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த மாணவன் மீது பல பொய்யான புகார்களை தானாக வாங்கி பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வீடியோ ஆதாரத்துடன் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யாத தேனி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன்,   பழனிசெட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், சார்பு ஆய்வாளர்கள் பாக்கியம்(WSI), முத்துக்கண்ணன், ஈஸ்வரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் 10 காவலர்கள் பல லட்சம்  லஞ்சமாக பெற்றுக் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  புகார் கொடுத்தவர்களை பார்த்து  உன் வாழ்க்கையையும், உன் தங்கை வாழ்க்கையும் பாலாக்கிவிடுவோம் என்று மிரட்டியும்,  வீட்டிற்குள் இரவு நேரங்களில் அத்துமீறி நுழைந்து எட்டாம் வகுப்பு படிக்கும்   மேனகா மற்றும் அவரது  தாயார் இருவரையும் கண்ட இடங்களில் தொட்டு பாலியல் சீண்டல் செய்ததாக மனமுடைந்த மேனகா  காலை (24.03.2023) காலை சுமார் 4.30 மணிக்கு பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதகாவும் இது சம்மந்தமாக.
எட்டாம் வகுப்பு படிக்கும் மேனகா என்ற மாணவி தேனி மாவட்ட சைல்ட் லைன் அலுவலகத்திற்கு புகார் ஒன்றையும் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறிய தகவல் அதிர்ச்சி அளிக்க தக்கதாக இருந்தது. அது என்னவென்றால் தேனி மாவட்ட எஸ்பி இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தான் இதற்கு எல்லாம் காரணம் என்ற குற்றச்சாட்டை வைத்தனர்.
விரிவாக விசாரித்த போது தற்போது பிசி வட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருந்த ராஜேஷ் அவர்கள் இதற்கு முன்பு இதே பிசி பட்டி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது தேனி மாவட்ட எஸ்பி இன்ஸ்பெக்டராக இருக்கும் முருகானந்தம் இன்னும் சில மாதங்களில் காவல்துறையில் உள்ள வேறு பிரிவுக்கு செல்ல இருப்பதாகவும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணி செய்யும் காவல் ஆய்வாளர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் மீது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் வரும். இந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு எஸ் பி ஆய்வாளர் முருகானந்தம் கட்டப்பஞ்சாயத்து செய்து முடித்து வைப்பார் என்ற குற்றச்சாட்டையும் வைக்கின்றனர். இந்த கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு பி சி பட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷை வைத்து கச்சிதமாக முடிப்பார் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் மாதம் பல லட்ச ரூபாய் எஸ்பி ஆய்வாளர் முருகானந்தத்திற்கும் பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷுக்கும் கிடைப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலையும் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் எஸ் பி ஆய்வாளராக இருக்கும் முருகானந்தம் ஒரு சில மாதத்தில் வேறு பிரிவுக்கு செல்ல இருப்பதாகவும் அந்த  இடத்திற்கு பிசி பட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ் அவர்களை நியமிக்கவும் முயற்சி நடப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

தேனி மாவட்ட காவல் நிலையங்களில் பணி செய்யும் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது  மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வரும் புகார்களை விசாரணை என்ற பெயரில் கண்துடைப்பு நாடக மட்டுமே நடத்துகின்றனர் என்றும் எந்த அதிகாரிகள் மீதும் எந்த காவலர்கள் மீதும் இதுவரை துறை ரீதியான கடுமையான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் கடந்த இரண்டு வருடங்களாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களும் எஸ்பி ஆய்வாளர் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்.


இதற்கு முன்பு  தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளராக இருந்த பெண் ஆய்வாளர் மதனகலா மீது பல குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல அந்த காவல் நிலையத்தில் பல காவலர்கள் மீது புகார் வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தற்போது  தேனி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன்,   பழனிசெட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், சார்பு ஆய்வாளர்கள் பாக்கியம் (WSI), முத்துக்கண்ணன், ஈஸ்வரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் 10 காவலர்கள் மீது தென்மண்டல ஐஜி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோபாலபுரத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காசிலிங்கம் என்ற மாணவன் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும்bஅவரது தங்கை மேனகா இரண்டு பேரும் கண்ணீருடன்  கோரிக்கை வைத்துள்ளார்.

டிஜிபி,தென்மண்டல ஐஜி ,தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்


எது எப்படியோ தேனி மாவட்டத்தில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேனி மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அத்துமீறி நடப்பதாக வரும் தொடர் புகார்கள் மீது தென் மண்டல ஐஜி அசரா கார்க் அவர்கள் நேர்மையான அதிகாரிகளை நியமித்து இது போன்ற புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு உண்மை தன்மையை அறிந்து காவல் நிலையத்தில் பணி செய்யும் அதிகாரிகள் தாங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அத்துமீறலில் ஈடுபட்டது உண்மை என்று தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
அது மட்டும் இல்லாமல்  காவல்துறையில் பணி செய்யும் ஒரு சில அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை வைத்து பொதுமக்களிடம் இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்யும் காவல்துறை அதிகாரிகளினால் தமிழக முதல்வருக்கும் ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள் என்றும் இவர்கள் யாரோ ஒருவரின் திருப்திக்காக சுயநலமாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button