காவல் செய்திகள்

கொங்கு மண்டலம் எடப்பாடி டூ சேலம் கலப்பட டீசல் அமோக விற்பனை!

கோயமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் சேலம் சங்ககிரி நாமக்கல் திருச்செங்கோடு பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு பாஸ்கரன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாஸ்கர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து மேற்படி பகுதிகளில் கலப்பட டீசல் வாகன சோதனையை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 27 ஆயிரத்து 400 லிட்டர் கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த டீசல் ஏற்றிவந்த 5 லாரிகள் மற்றும் டாட்டா ஏசி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தல் செயலில் ஈடுபட்ட பத்து நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் அதில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் 13/ 8/ 21ஆம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர் பிரிவு சாலையில் வாகன தணிக்கையின் போது அதிகாலை சுமார் 3 மணியளவில் கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த தன்49AM9978 என்ற என்னுடைய டேங்கர் லாரியில் சுமார் 4000 லிட்டர் அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓட்டுநர் மதியழகன் வயது 47 தகப்பனார் பெயர் ராஜு மற்றும் கிளீனர் செல்வம் வயது 26/தகப்பனார் பெயர் சமுத்திரம் மற்றும் உரிமையாளர் இன்பராஜ் திருப்பூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பொள்ளாச்சி கே ஜி சாவடி எட்டிமடை கேபிஎஸ் குடோன் அருகில் வாகன தணிக்கையில் 4000 லிட்டர் கலப்பட டீசல்ஏற்றி வந்த
12/08/21ஆம் தேதி லாரி TN 88 F 8767 மற்றும் TN 38U 5594 டாட்டா ஏசி வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் சபாபதி மற்றும் செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .

மேலும் சேலம் கேது நாயக்கன்பட்டியில் கடந்த 5/08/21 இருபத்தி ஒன்றாம் தேதி வாகன தணிக்கையின் போது 1350 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த TN 39 CD 2373 மற்றும் ஸ்டீல் பேரல் பறிமுதல் செய்யப்பட்டு வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் சேலம் சங்ககிரி முதல் எடப்பாடி ரோடு வாரி பேக்கரி முன்பு 6/08/21 ஆம் தேதி வாகன தணிக்கையில் 17050 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரி tn34 L0378 ,KA 01AE 7577 மற்றும் TN23 BD1393 என்ற டாட்டா ஏசி ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் ஆரோக்கியராஜ் கௌதம் சங்கர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .

மேலும் நாமக்கல் தொட்டி பேட்டியில் 25 /6/21 தேதி ஏழாயிரம் லிட்டர் தளபதி சிலை ஏற்றி வந்த லாரி TN 18S3520 வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் ஆனந்தராஜ் தமிழ் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


அதேபோல் நாமக்கல் முட்டாள் பெட்டி பைபாஸ் ரோட்டில் 01/08/21 வாகன தணிக்கையில் ஆயிரம் லிட்டர் டீசல் ஏற்றி வந்த லாரி TN.01AT4223 வாகன ஓட்டுநர் ஈஸ்வரன் கைது செய்யப்பட்ட மேலும் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பச்சப்பாலி ரோட்டில் 01/08/21 வாகன தணிக்கையின் போது 350 லிட்டர் டீசல் டேங்க்கரில் வைத்து அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக அங்கு செல்லும் வாகனங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வந்த டேங்கர் உரிமையாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Articles

5 Comments

  1. I am really impressed with your writing abilities as neatly as with the format in your blog. Is this a paid subject matter or did you modify it yourself? Anyway stay up the excellent high quality writing, it is uncommon to see a great weblog like this one these days!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button