லஞ்ச ஒழிப்புத் துறை

பழனி கோவில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கிய பழனி கோவில் கட்டிட பொறியாளரை அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ!



பழனி கோவில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு காசோலை கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பொறியாளர் பிரேம்குமார் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி
பக்தர்களின் வசதிக்காக, பழனி முருகன் கோவிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பழனி முருகன் கோவில் மட்டுமல்லாது அதன் கட்டுப்பாட்டில் பல உப கோயில்களும் இருக்கிறது. அந்த கோவில்களிலும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரிய நாயகி அம்மன் கோவில்
பல கோவில்களுக்கு ஏற்பாடுகளும் வசதிகளும் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பிலேயே செய்யப்படுகிறது.

அதில் குழந்தை வேலப்பர் கோயில் அருகே பழனி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியினை ஒப்பந்ததாரர் செந்தில்குமார் மேற்கொண்டு வருகிறார்
இறுதித் தவணை பணம் 21 லட்சம் ரூபாய் காண காசோலையை கேட்டு

பழனி கோயில் கட்டட பிரிவு செயற்பொறியாளர் பிரேம்குமார்

பழனி கோயில் கட்டட பிரிவு செயற்பொறியாளர் பிரேம்குமாரை அணுகியுள்ளார்.
அதற்கு  ரூ.18 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே 21 லட்சம் காசோலையை கொடுப்பேன் என பொறியாளர் பிரேம்குமார் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய 18 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி உள்ளனர். அதை  பொறியாளர் பிரேம்குமார் இடம் கொடுத்தபோது
ரகசியமாக காத்திருந்தா லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம்

கையும் களவுமாக  சிக்கிக்கொண்டார்.

லஞ்சம் வாங்கிய பொறியாளர் பிரேம்குமாரை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி. நாகராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button