சட்டத்துக்கு புறம்பாக அதிகார துஷ்பிரயோகம் செய்யும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை!? இதன் பின்னணியின் உண்மை என்ன அதிர்ச்சி தகவல்!!
வரும் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலரின் சட்ட விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது!!
கடந்த 2021 ஆண்டு அக்டோபர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவிற்குட்பட்ட அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில்கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு நடந்தது. அப்போது கலந்து கொள்ளாத கிராம நிர்வாக அலுவலர் கதிர்வேல் என்பவர் நான் மருத்துவ விடுப்பில் இருந்ததால் கலந்து கொள்ளவில்லை ஆகையால் இந்த பரிமாறுதல் கலந்தாய்வு செல்லாது என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு எண் (WP MD) nos.19266 மற்றும் 20575) இந்த வழக்கு விசாரணை 2022 ஜனவரி மாதம் வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அறந்தாங்கி கோட்டாட்சியர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் நடத்திய பணி மாறுதல் கலந்தாய்வு கூட்டம் ரத்து செய்தும் மறு கலந்தாய்வு நடத்தவும் 2022 ஜனவரி 5ஆம் தேதி உத்தரவிட்டது.
அதன் பின் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து முறையிட்டதால் அலுவலக 24/6/2022 அன்று PAG மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு நீதிமன்ற உத்தரவுப்படி பணி மாறுதல் மறு கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது அதன்படி மறு கலந்தாய்வு நடத்த புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஒப்புதல் அளித்தார். இந்தக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களிடம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக 26/06/2022 அன்று முறையிட்டு மனு அளித்தனர். மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களும் கலந்தாய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.(கடித எண்
5 (1)2694891/2022)
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 29 6 2022 அன்று காலை10 மணிக்கு அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பணி மாறுதல் கலந்தாய்வு நடக்க இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது என்று அறிவித்தனர்
இது சம்பந்தமாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டதற்கு அருண் நேரு புவனேஸ்வரி இரண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்து உள்ளார்கள் ஆகவே நீதிமன்ற வழக்கு முடியும் வரை பணி மாறுதல் சம்பந்தமாக மறு கலந்தாய்வு நடத்த முடியாது என்று கூறிவிட்டார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களிடம் மறைத்து விட்டனர் இதற்குக் காரணம் இதற்கு முன்னால் இருந்த மாநில வருவாய் நில ஆணையர் சித்தி மணிமாறதல் சென்றவுடன் புதிதாக பிரபாகர் ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளதாகவும் இது சம்பந்தமாக அவர் தெரிந்திருக்க முடியாது என்றும் அதேபோல் கலந்தாய்வில் கலந்துகொண்டு பணியில் இருக்கும் இரண்டு பேர் மாநில வருவாய் நிலா ஆணையர் அவர்கள் உத்தரவை ரத்து செய்யவும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவு மற்றும் மாநில வருவாய் நில நிர்வாக ஆணையர் உத்தரவு இருந்தும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தும் மாவட்டத்தை சீர் செய்யவும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு ஆட்சியாளர்களுக்கு இடம் வலியுறுத்தி 15/07/2022 கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக அறிவித்துள்ளனர்.
கண்டன அறிக்கையில் முக்கியமாக புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஒரு ஊழல் ராணி என்றும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் பணி மாறுதல் பெறுவதற்கு சட்டவிரோதமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து பல லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் மற்றும் வாஷிங் மெஷின் பீரோ போன்ற விலை உயர்ந்த பொருள்களையும் கையூட்டாக பெற்றிருப்பதாகவும் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.
இது சம்பந்தமாக நாம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் விசாரித்த போது கடந்த 2021 ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த பணி மாறுதல் கலந்தாய்வு கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மாறுதல் பெற்று சென்று தற்போது பத்து மாதமாக கிராம நிர்வாக அலுவலர் பணி செய்து வரும் நிலையில் திடீரென்று மறுக்கலந்தாய் வைத்து பணி மாறுதல் செய்தால் எப்படி என்றும் கடந்த வருடம் கலந்தாய்வில் பணி மாறுதல் பெற்று பணியில் இருக்கும் பல கிராம நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்கள். அது மட்டும் இல்லாமல் கலந்தாய்வில் முறையாக பணி மாறுதல் பெற்று பணியில் இருக்கும் நபர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலவில் இருக்கும் போது பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வலியுறுத்துவது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது எப்படியோ அரசு அலுவலர்கள் தங்களுக்கு நீதி கேட்டு நீதிமன்றம் சென்று விட்டாலே நீதிமன்ற உத்தரவு வரும் வரை காத்திருப்பது தான் நல்லது. அதை விட்டுவிட்டு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது மாவட்ட உயர் அதிகாரிகள் முறைகேடாக நடப்பதாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழிவகுக்கும் என்றும் இதனால் பல கிராம நிர்வாக அலுவலர்கள் வேலையை இழக்கக்கூட நேரிடும் என்று நன்கு அறிந்த சிவில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.