சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தல் !லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டு கொள்ளாத உடுமலை வருவாய்த் துறை அதிகாரிகள்!
கனிம வளம் கடத்தல் பற்றி தகவல் கொடுத்தும் லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாத உடுமலை வருவாய்த்துறை அதிகாரிகள்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் தம்பிரான் கோயில் பகுதியில் தோட்டத்திலிருந்து கனிம வளங்களை போலி அனுமதி நுழைவுச்சீட்டு வைத்துக்கொண்டு சட்டவிரோதமாக கனிம வளம் கடத்தி வருவதாக உடுமலை கோட்டாட்சியர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டும் கோட்டாச்சியர் , வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் கண்டு கொள்ளாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது.மேலும்
அரசு அதிகாரிகளின் துணையுடன் சட்டவிரோதமாக கனிம வளம் கடத்தல் நடந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இயற்கை வளங்களை அழித்து வருவதால் வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு சரியான நேரங்களில் மழை பெய்யாமல் பொய்த்து போய் விவசாயம் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இப்படியே இந்த நிலை உணர்ந்தால் வருங்கால சந்ததியினர் உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்படும் என்பது தான் நிதர்சனம் இதை உணர்ந்து வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அனைவரின் கோரிக்கையாகும்.