Uncategorizedலஞ்ச ஒழிப்புத் துறை

சட்ட விரோதமாக நிலத்தை பத்திரப்பதிவு செய்ய பல லட்சம் லஞ்சம் ! ரத்து செய்து எழுமலை சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா பத்திரப் பதிவு துறை ஐஜி!?

சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தின் கூட்டு பட்டாவில் இருக்கும் வாரிசுதாரர்களை மறைத்து சட்ட விரோதமாக நிலத்தை ஏழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் ஆகவே அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யுமாறு மாவட்ட பதிவாளர் மற்றும் வட்டாட்சியருக்கு வாரிசுதாரர் கோரிக்கை மனு.


போலி பத்திரப்பதிவை பத்திரப்பதிவுத் தலைவரே ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை காற்றில் பறக்க விட்டு கோமாவில் இருக்கும் மாவட்ட பதிவாளர் அலுவலகம்!!

தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரப்பதிவு நடவடிக்கைகள் நடக்கின்றன. இதில் பல இடங்களில், ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் வாயிலாக மோசடி பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால் சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றங்களிடம் கோரலாம். போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு மட்டுமே இருந்தது.

இந்த நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில், போலி பத்திரப்பதிவை பத்திரப்பதிவுத் தலைவரே ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எழுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் …தினமும் 25 முதல் 30பத்திரங்கள் பதிவாகும். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் நிலத்திற்கு பதிவு செய்ய லஞ்சம் பெற்றுக் கொண்டு பதிவு செய்து கொடுக்கப் படுகிறது என்று தொடர்ந்து புகார்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.

உசிலம்பட்டி, பேரையூர், எழுமலை ஆகிய பகுதிகள் பெரியகுளம் சார்பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்டதாகவும் அமைந்துள்ளது.தற்போது துணை பதிவுத்துறை தலைவராக வாசுகி உள்ளார்.


மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் தன்னுடன் பிறந்த சகோதரி மற்றும் அவர்களது வாரிசுகளை மறைத்து நிலத்தை அவர் பெயரில் பட்டா மாற்றி சட்டவிரோதமாக மோசடி செய்து  பதிவு செய்துள்ளதாகவும் அதை ரத்து செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட பதிவாளர் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சூலப்புரம் கிராமத்தில் சர்வே எண் 162 /2 என்ற நிலத்தை கோபால நாயக்கர் வகையறாக்களிடம் கருப்பண்ணசாமி என்ற மூக்கன் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை ஏழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு என் 1854/1980 செய்யப்பட்டு அந்த நிலத்தை விவசாயம் செய்து வந்துள்ளார் மூக்கன் ஆசாரி. அவருக்கு  ஒரு ஆண் வாரிசு ஒரு பெண் வாரிசு இரண்டு வாரிசுகள். ஆண் வாரிசு பெயர் பால்ராஜ் பெண் வாரிசு பெயர் கருப்பாயி. மூக்கன் ஆசாரி இறப்பதற்கு முன்பு தான் வாங்கி விவசாயம் செய்து வந்த  ஒரு ஏக்கர் 90 சென்ட் நிலத்தை  (சர்வே எண் 162/2A 162/2B )தன் வாரிசு பெயர்களில் (கருப்பாயி பால்ராஜ் இவர்கள் இரண்டு பேர் பேரில்)பட்டாவை மாற்றி வைத்துள்ளார்.1994 ஆம் ஆண்டு மூக்கன் ஆசாரி மகள் கருப்பாயி இறந்து விடுகிறார்.1996 ஆம் ஆண்டு மூக்கு நாசாரியும் இறந்து விடுகிறார். தற்போது பால்ராஜ் மட்டும் உயிருடன் இருக்கிறார். இறந்த மூக்கன் ஆசாரி மகள் கருப்பாய்க்கு இரண்டு வாரிசுகள் (ஒரு ஆண் வாரிசு ,ஒரு பெண் வாரிசு )பெண் வாரிசு பெயர் பாப்பாத்தி ஆண் வாரிசு பெயர் மதியழகன்) அவர்கள். பால்ராஜ்க்கு ஆண் வாரிசு மற்றும் அவர் பெயர் செந்தில்குமார். மூக்கன் ஆசாரி இறந்தவுடன் கருப்பாயி ஆண் வாரிசு மதியழகன் பால்ராஜ் வாரிசுகளும் நிலத்தை விவசாயம் செய்து வந்துள்ளனர்.

பால்ராஜ் 2022 ஆம் ஆண்டு தன் உடன் பிறந்த சகோதரி கருப்பாயி மற்றும் அவரது மகன் மகள் இரண்டு வாரிசுகளை மறைத்து சட்ட விரோதமாக தன் பெயருக்கு பட்டாவை மாற்றம் செய்து மோசடி செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஏழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் பால்ராஜ் தன் மகன் செந்தில்குமார் பெயரில் ஏழுமலை சார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தான செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். பதிவு (எண் 1063/2022). தற்போது மூக்கன் ஆசாரி மகள் கருப்பாயி வாரிசுதாரராகிய பாப்பாத்தி மதுரை மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கும் இந்த பத்திரப்பதிவு ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு வழங்கியுள்ளார். மோசடியாக சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ய உறுதுணையாக இருந்த ஏழுமலை சார் பதிவாளர். சோழபுரம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் பேரையூர் வட்டாட்சியர் இவர்கள் அனைவரும் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து துரை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் லஞ்சம் இல்லாமல் சார் பதிவாளர் அலுவலகங்களில் எதுவும் நடக்காது என்று நீதிமன்றமே குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது
எது எப்படியோ வாரிசுதாரர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களை மறைத்து லஞ்சம் வாங்கிக் கொண்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் மற்றும் பத்திரப்பதிவு அலுவலர்கள் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருவதுதான் நிதர்சனம். இது போன்ற தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பல பத்திரப்பதிவு அலுவலகங்களில் இது போன்று சட்டவிரோதமாக நிலங்களை பத்திரப்பதிவு செய்து மோசடி தொடர்ந்து நடந்து வருகிறது. இது சம்பந்தமாக பல புகார்கள் பல வழக்குகள் நீதிமன்றங்களில் இருந்தாலும் இனிமேல் இது போன்ற பத்திரப்பதிவு கள் நடக்காமல் தடுக்க பத்திரப்பதிவுத்துறை ஐஜி மற்றும் தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button