சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்பு!?காற்றில் பறக்க விடப்பட்ட பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதி மன்ற உத்தரவுகள்? கண்டுகொள்ளாத சென்னை மாவட்ட நிர்வாகம். !நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
பெருங்குடி துரைப்பாக்கம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வீடுகட்ட அனுமதி வழங்கக் கூடாது என்று பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவு போட்டு இருக்கிறது.
இந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டு தற்போது ரவுடிகளின் துணையுடன் சில் அரசியல் வாதிகள் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். இது சம்மந்தமாக தடுக்காத காவல்துறையும் வருவாய்த் துறையும்….. சட்டவிரோதமாக சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு பெருமளவில் லஞ்சம் பெற்றுக் கொண்டு நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களுடன் வழக்குத் தாக்கல் செய்யப்படும் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை…… பொதுநல வழக்காக தொடரப்படும்……என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.