சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் பழனி பேருந்து நிலையம்! பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத அபாய சூழ்நிலை!
திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி,
சேலம், மதுரை
, திருச்சி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலிக்கு சென்னை ஆகிய தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பழநி மலைக் கோயிலுக்கு தமிழக மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பழனி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணங்களுக்கு கடந்த சில மாதங்களாக எந்த பாதுகாப்பும் இல்லாத அபாயத்தில் உள்ளனர்.
பழனி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் இருக்கை, ஓய்வறை உள்ளிட்டவற்றை ஆதரவற்ற நபர்கள் என்ற பெயரில் சமூகவிரோதிகள் ஆக்கிரமித்து உட்கார்ந்தும் தூங்கிக் கொண்டும் இருக்கின்றனர்.
சுகாதாரமற்ற நிலையில் அதே இடத்தில் அசுத்தமும் செய்கின்றனர். இந்த நிலையில், சிலர் பேருந்து நிலையம் மற்றும் இலவச கழிப்பறையை மது அருந்தும் கூடமாகவும் கஞ்சா போதை பயன்படுத்தும் இடமாகவும் பயன்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அது மட்டும் இல்லாமல்
மது போதையில் பயணிகளிடம் பணம் கேட்டு மிரட்டுவதும், பணம் தர மறுக்கும் பயணிகளை தகாத வார்த்தைகளில் பேசும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
சில சமயங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளை ஏமாற்றி
பணம் பறிப்பது
போன்ற குற்றச் செயல்களும் நடக்கின்றன. இதேபோல், பழநிக்கு வரும் பக்தர்களை, பயணிகளை திருநங்கைகள் பணம் கேட்டு விரட்டிச் செல்வதாக கூறப்படுகிறது. இதனை பழனி நகர காவல் துறையினர் மற்றும் பழனி நகராட்சி நிர்வாகமோ கண்டு கொள்வதில்லை.
மது போதையில் உள்ள ஒரு சில பெண்கள் கூட பேருந்து நிலையத்தில் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளில் பேசி வருவதும் அது மட்டும் இல்லாமல்
கஞ்சா மது போதையில் இருக்கும் சமூக விரோதிகள் மோதலில் ஈடுபடும் செயலால் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பேருந்து நிலையத்தில் திடீர் அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் அவசர உதவி காவல் உதவி மையத்தை அணுகினால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே வர முடியாத நிலை உருவாகியுள்ளது. அதற்கு காரணம் பழனி நகர் காவல் நிலையத்தில் போதுமான காவலர்கள் இல்லாத நிலை உள்ளது. பல லட்சம் பேர் வந்து செல்லும் பழனி ஆன்மீக தளத்திற்கு மற்ற காவல் நிலையங்களில் இருப்பது போலையே காவல்துறையினர் இருப்பதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் பழனியில் உள்ள கோவில் சுற்று வட்டார பகுதி மற்றும் பேருந்து நிலையம் போன்ற இடங்களில் 24 மணி நேரமும் அதிகமான காவலர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் பழனி பேருந்து நிலையங்களில் பெண்கள் இளைஞர்களை விபச்சாரத்திற்கு அழைப்பதும் வாடிக்கையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக பழனி பேருந்து நிலையம் விபச்சாரம் மற்றும் மதுபானக்கூடம் சமூக விரோதியின் கூட ஆக மாறி உள்ளதாக தற்போது சமூக ஆர்வலர்கள் குற்றம் இதனால் பழநி பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பல ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பழனி நகர காவல் துறையும் பழனி நகராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகளை பாதுகாக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.