சிங்கார சென்னையின் மாவட்ட ஆட்சியாளரை சிக்கவைக்க தவறாக செய்தியை சித்தரித்தது யார்!?
ஏன்!? எதற்கு …?!!!
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார் .
ஆட்சி மாற்றத்தில், அலுவலர்கள் முதல் அதிகாரிகள் வரை பல்வேறு புகை கைகளில் இருந்த அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தும், புதிய உயர் பதவி பணியிடங்களை உருவாக்கி, பரிணாமங்களை காண செய்து பொதுமக்கள் அனைவரும் முதல்வரை வியப்புடன் பார்க்கும் அளவுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் செயல்பாடுகள் இருந்து வருவதையும் தமிழக ஆளுநரை ஆளுமைமிக்க முதல்வர் என்று பாராட்டி எதையும் யாராலும் மறுக்கவும் முடியாது! மறக்கவும் முடியாது!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியாளர்களை பணியிட மாற்றம் செய்த போது சிங்கார சென்னைக்கு மாவட்ட ஆட்சியராக விஜயராணி IAS அவர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்,
ஆட்சியர் பொறுப்பேற்ற பின் சென்னை மக்களின் நன்மதிப்பை பெற்று விடுவாரோ என்று மாவட்ட ஆட்சியரின் நிர்வாக அலுவலர்கள் சிலர் ஆட்சியருக்கு எதிராக ஒரு சில வேலைகளை செய்து வருவதாகவும் நமக்கு தகவல் வந்துள்ளது.
காரணம் ஆட்சியரின் துரிதமான பணி வேகமான செயல்பாடு என்றே சொல்லாம்,
இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் ஆட்சியருக்கு தெரியாமல் சில தவறுகளை செய்து கொண்டு ஆட்சியரின் பணியில் குறை இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது.
17/12/21 அன்று ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷணுபிரசாத் தன்னுடைய மாமியார் நிலத்தின் வழக்கு விசாரணை (உத்தண்டி மயான நிலத்தை விற்ற வழக்கு ) சாமந்தமாக சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ் அவர்களை சந்திக்க வந்தாகவும்
அப்போது ஆட்சியர் மீட்டிங்கில் இருந்ததாகவும் அப்போது ஒரு மணி நேரத்திற்கு மேலாக வரவேற்பு அறையில் எம்பி விஷ்ணு பிரசாத்தை காக்க வைத்ததாகவும் அதன்பின் சந்தித்த ஆட்சியர் உட்கார்ந்துகொண்டு MPயை நிற்க வைத்து பேசியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தது.
நடந்தது என்ன!? இது உண்மையா !?என்று அறிய சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் இதனை பற்றி உண்மை அறிய நிருபர் பார்வை விசாரிக்க நேரில் களத்தில் இறங்க தொடங்கியது. அதில் கிடைத்த தகவல் அங்கு வேலை செய்த உழியர்கள் சொன்ன தகவலை கீழே அப்படியே தெரிவித்துள்ளோம்.
முதலில் ஆட்சியர் அலுவலக பகுதி அலுவலர்களிடம் பேச்சு கொடுத்தோம், அப்ப அதில் பேசிய ஒருவர் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் ஆனால் என்னை பற்றி வெளியே சொல்லக்கூடாது என்றார் . சரி என்று விஷயத்தை கேட்டோம். அவர் சொன்ன பதில் சென்னை மாவட்ட ஆட்சியர் பதவி ஏற்ற விஜயராணி IAS அவர்கள் வந்த நாளில் இருந்து சுறுசுறுப்பாக பணிகளை செய்ய ஆரம்பித்தார் பொதுமக்கள் புகார்கள் சம்மந்தப்பட்ட பைல்களை உடனடியாக பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டார், அது ஒரு சில அதிகாரிகளுக்கு பிடிக்க வில்லை என்றே சொல்லலாம்.இந்த ஆட்சியர் அதிகாரிகளை மிரட்டுகிறார் மற்றும் அதிகமான வேலை வாங்குகிறார் என உண்மைக்குப் புறம்பான தகவல்களை பேச ஆரம்பித்தார்கள்.அதன் பின் கலெக்டர் அவர்களின் நேர்மையை கண்டு எதுவும் பேசாமல் அதிகாரிகள் அவரவர் வேலைகளை செய்ய தொடங்கினார்கள். ஆனால் தற்போது அதிகாரிகள் சிலர் இந்த ஆட்சியரின் செயல்பாடுகளை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள் என்று ஆட்சியர் அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியர் ஆதங்கத்துடன் கூறினார்.
உத்தண்டி மயான நிலப் பிரச்னையில் ஆட்சியர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கை குறித்து… லேஅவுட் புரமோட்டர்களிடம் ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
நாம் களத்தில் இறங்கி விசாரித்தபோது எம்பி விஷ்ணு பிரசாத் அவர்கள் சென்னை ஆட்சியர் அலுவலகத்திற்கு 17/12/21 அன்று டெல்லியிலிருந்து வந்துள்ளார். அப்போது மதியம் 3 மணி ஆகும் . அப்போது ஆட்சியாளர் அலுவலகத்தில் நுழைந்த விஷ்ணுபிரசாத் ஆட்சியரின் உதவியாளரிடம் நிலம் சம்பந்தமாக இன்று ராஜேஸ்வரி அவர்களை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் அழைத்து உள்ளதாகவும் ஆனால் அவர் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் வர முடியாததால் நான் வந்துள்ளதாகவும் (தான் ஒரு எம்பி என்பதை மாவட்ட ஆட்சியரின் உதவியாளரிடம் விஷ்ணு பிரசாத் சொல்லாமல் மறைத்துள்ளார் )விஷ்ணு பிரசாத் கூறியுள்ளார்.அதற்கு ஆட்சியரின் உதவியாளர் இப்போதுதான் ஆட்சியர் சாப்பிட சென்றுள்ளார்கள் பத்து நிமிடத்தில் வந்து விடுவார் என்று கூறி அமர சொல்லி உள்ளார்.அது போல 15 நிமிடத்தில் ஆட்சியர் விஜயராணி அவர்கள் மீட்டிங் அறைக்கு சென்றுள்ளார் . அப்போதுதான் உதவியாளர் ஆட்சியரிடம் ராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு பதிலாக மருமகன் விஷ்ணு பிரசாத் அவர்கள் வந்துள்ளார்கள் என்று ஆட்சியரின் உதவியாளர் கூறியவுடன் உடனே விசாரணைக்கு உள்ளே அழைத்துள்ளார் அப்போது தான் எம்பி விஷ்ணு பிரசாத் என்று ஆட்சியாளருக்கு தெரியவந்துள்ளது உடனே ஆட்சியாளர் சார் நீங்கள் வருவதற்கு முன் எனக்கு தொலைபேசியில் சொல்லியிருக்கலாமே என்று வருத்தத்துடன் கூறிவிட்டு உடனே சம்பந்தப்பட்ட வழக்கை பற்றி எம்பி விஷ்ணுபிரசாத்திடம் ஆட்சியர் நீதிமன்றத்தில் கேட்ட அறிக்கையைப் பற்றி விளக்கி சொல்லி உள்ளார் . அதைக் கேட்டு விட்டு உடனே அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் விஷ்ணுபிரசாத் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சென்றுவிட்டார் என்றும்
ஆட்சியர் சாப்பிடுவதற்கு 15 நிமிடம் காலதாமதம் ஆகிவிட்ட காரணத்தினால் ஆட்சியர் MP யை சந்தித்து பேச தாமதமாகி விட்டதாகவும் இதுதான்அன்றுநடந்தஉண்மை என்றும். உண்மைக்கு மாறாக MP யை வெகுநேரம் காக்க வைத்ததாக வந்த செய்தியும் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்பி அவர்களை நிற்க வைத்து ஆட்சியர் உட்கார்ந்து பேசியதாக வந்த தகவலும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் விஷ்ணுபிரசாத் அவர்கள் தலைமைச் செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆட்சியர் எனக்கு மரியாதை கொடுக்காமல் அலுவலகத்தில் காக்க வைத்து அவமானப்படுத்தியதாக சொன்னதாகவும் உடனே தலைமை செயலாளர் இறையன்பு IAS அவர்கள் ஆட்சியர் விஜயராணி IAS அவர்களை தொலைபேசியில் அழைத்து பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத்திடம் மன்னிப்பு கேட்க சொல்லியோ இது போல் நடந்து கொண்டால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றோ ஆட்சியரிடம் பேசியதாக வந்த செய்தி முற்றிலும் தவறாக சிலர் சித்தரித்து வதந்தி பரப்புவதன் நோக்கில் செய்தியை வெளியிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
சரி இதை பற்றி மேலும் விசாரிக்க எம்பி விஷணுபிரசாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம் ஆனால் அவர் தொலைபேசி தொடர்பை ஏற்கவில்லை. ஆனால் அவர் சார்ந்த நபர்கள் நடந்த சம்பவம் பற்றி தெரியவில்லை என்றார்கள், சரி இது இப்படி இருக்க எம்பி விஷணுபிரசாத் பாராளுமன்ற கூட்டத்தில் இதை பற்றி உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம், என்று கூறியதாக சொன்ன தகவலை பற்றி விசாரித்ததில், அவர்கள் கூறிய பதில், எம்பி உரிமை மீறல் என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை, விஷ்ணு பிரசாத் பொது மக்கள் பிரச்சினைக்கு ஆட்சியர் அலுவலகம் செல்ல வில்லை என்றும் மாறாக தன்னுடைய மாமியாரின் குடும்ப சொத்துப் பிரச்னைக்காக விசாரணைக்கு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளதைப்பற்றியெல்லாம் சம்மந்தப்பட்ட இடத்தில் நடந்ததை விசாரித்து பின் முறையிட முடியும், வீண் வதந்திகளை வைத்து உரிமை மீறல் என்று நடவடிக்கை எடுக்க முடியாது என்றார்கள் முன்னாள் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள்.
பாண்டிய நாட்டில்முறைதவறிய மன்னனின் நீதியால் கண்ணகியின் கணவர் கோவலன் கொல்லப்பட்டான் என்பது வரலாறு.
ஆனால் சிங்கார சென்னைக்கு சரியான நீதி கிடைக்கும் என்று நம்புவோம்..