சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் மீது ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் மீது ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
லூஸ் டாக் விடும் காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின்!!?
சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பற்றி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட அனைத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் கலந்து கொள்ளுமாறு அறிக்கை அனுப்பப்பட்டது.
அதன் பின்பு ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு நடக்கவிருந்த தினத்தன்று ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் (கிரைம்)அந்தக் கூட்டத்தை நடத்த மறு தேதி அறிவித்து தள்ளி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டதை பள்ளத்தூர் காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின்
சிவகங்கை மாவட்ட காவல்துறை வாட்ஸ்அப் குரூப்பில் கிண்டல் செய்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் காவல்துறைக்கு எதிரான தவறான கருத்தை பதிவு செய்து இருந்தார் என்றும்
இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை தெரிய வர உடனே விளக்கம் கேட்டு அனுப்பி ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பள்ளத்தூர் காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் மீது ஏற்கனவே பல புகார்கள் இருக்கும் நிலையில் சஸ்பெண்ட் செய்ய தென்மண்டல ஐஜி நடவடிக்கை எடுப்பாரா!?
பள்ளத்தூர் காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் இதற்கு முன்பு வேலை செய்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது பல்வேறு கஞ்சா லாட்டரி கள்ளச்சாராயம் விற்பவர்கள் மற்றும் லாட்ஜுகளில் விபச்சாரம் போன்ற சட்ட விரோதமாக செய்து வந்த சமூக விரோதிகளுக்குடந்தையாக செயல்பட்டதுடன் மாதம் 5 லட்சம் வரை லஞ்சம் வாங்குவதாக புகார்கள் இவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மற்றும் தென் மண்டல ஐஜி அவர்களுக்கு புகார்கள் வந்த நிலையில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலையத்துக்கு ஆனால் அதற்கு பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல ஐஜி இளம் புகார் அதன்பின் ராமநாடு மாவட்டத்திலுள்ள அபிராமம் என்ற காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அபிராமம் காவல் நிலையத்தில் பணியில் சேரும் முன்பு
இவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க தென் மண்டல ஐஜி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பின்பு மூன்று மாதம் கழித்து சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.