சுகாதாரமற்ற குடி நீரால் கம்பம் நகராட்சியில் பொதுமக்கள் அவதி ! நடவடிக்கை எடுப்பார்களா நகர் மன்றத்தலைவர் மற்றும் கம்பம் நகராட்சி ஆணையர்!

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில்

33 வார்டுகள் உள்ளது வனிதா நெப்போலியன் கம்பம் நகராட்சி மன்ற தலைவராவும் ஆணையராக தற்போது செல்வி பார்கவி இருக்கிறார்.
கம்பம் நகராட்சி குடிநீருக்காக லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றில் உள்ள உறை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மக்கள்தொகை பெருக்கத்தால் அதிகரித்து வரும் குடிநீர் தேவை, கோடைகாலத்தில்
வாரத்துக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை நள்ளிரவு நேரங்களில் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. இதனால் தண்ணீர் பிடிக்க முடியவில்லை.


பல இடங்களில் தெருக் குழாய்கள் உடைந்துள் ளதால், தண்ணீர் வீணாகிறது.
சில இடங்களில்

குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு

கழிவுநீர் கலந்து வருகிறது. இதை குடிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
பகல் நேரத்தில் தண்ணீர் விநியோகிக்க வேண்டும். தண்ணீர் திறந்துவிடும் நேரத்தை முறையாக அறிவித்து, அதன்படி செயல்பட வேண்டும். குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு நகராட்சி நிர் வாகம் கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக கம்பம் நகராட்சியின் 3,வது வார்டு உலகத்தேவர் தெருவில் வாரம் ஒரு முறை மட்டும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது என்றும்
மேலும் அப்பகுதியில் தண்ணீர் சில நாட்களாக துர்நாற்றத்துடன் வருவதால் டைபாய்டு,காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.பொதுமக்கள் கூறுகையில் துர்நாற்றத்துடன் வரும் தண்ணீரை குடிக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது என்று கூறுகின்றனர்.
சிலர் அப்பகுதிகளில் தண்ணீர் கேன்களை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.எனவே பொதுமக்கள் நலன் கருதி

கம்பம் நகராட்சி ஆணையர் கவனத்தில் எடுத்துக் கொண்டு சுத்தமான முறையில் தண்ணீர் வழங்கிட வேண்டும் எனவும்.
வாரம் இரு முறை தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் என
பொதுமக்கள் சார்பாக கோரிக்கை முன் வைத்துள்ளனர்.




