காவல் செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து பணம் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த பழனி கீரனூர் காவல்துறை!

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் பழனி சுற்றுவட்டார பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக பழனி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின்படி பழனி காவல் உட்கோட்ட கீரனூர் காவல் நிலைய காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்ட போது 9 நபர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

உடனே அந்த நபர்களிடமிருந்து பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய 5 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து பழனி கீரனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் ! அதன் பின்பு சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்த கீரனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அந்த நபர்களிடம் மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்

Related Articles

Back to top button