சென்னை நந்தம்பாக்கம் DLF நிறுவனத்திடம் நில நிர்வாக ஆணையர் பல கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக அதிர்ச்சி தகவல்!? நிலப் பரிவர்த்தனை, நிலமாற்றம், நில எடுப்பு பிரிவில் அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக பதவி உயர்வு பரிந்துரை செய்துள்ளதாக CLA மீது குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
கலைஞர் ஆட்சியில் நில நிர்வாக ஆணையர் வழங்கிய பட்டா மற்றும் நில மாற்றம் பரிவர்த்தனையில் முறைகேடு செய்துள்ளதாக ஸ்டாலின் ஆட்சியில்
அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஐ ஏ எஸ் மீது முதல்வரின் நடவடிக்கை என்ன !?
1.விருதுநகர் மாவட்டம் பல காலம் இராமநாதபுரம் மாவட்டத்துடன் இணைந்திருந்தது.
வருவாய் நிர்வாகம் :கோட்டங்கள்-2 (அரும்புக்கோட்டை, சிவகாசி); வட்டங்கள்-7 (திருவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், திருச்சுழி); வருவாய் கிராமங்கள்-608.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் நாராணபுரம் கிராமம் சர்வே எண்.452 ராமானுஜம், சீனிவாசகம் நாயுடு என்பவர்களுக்கு சொந்தமான சுமார் நான்கு ஏக்கர் நிலத்திற்கு மறைந்த டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சியில்( 1996 ஆம் ஆண்டில் ) (assistant settlement officer)உதவி நிலவரி திட்ட அலுவலர் வழங்கிய பட்டா!
.
பழைய இராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது சிவகாசி அருகே உள்ளே திருத்தங்களில்
கருநெல்லிநாதர் கோவில் உள்ளது.
இந்தக் கோயில் தற்போது அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக இந்த கோவிலின் தர்மகர்த்தா
நாராணபுரம் கிராமத்தில் உள்ளது
(சர்வே எண் 45/2 ) 3.95 ஏக்கர் நிலம் கரு நெல்லிநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்று வழக்கு தொடர்ந்தார். அதன் பின் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணையில் ராமானுஜம் சீனிவாசன் நாயுடு பெயரில்3.95 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிட்டது. அப்போது கலைஞர் முதலமைச்சராக திமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் 25 வருடத்திற்கு பின்பு (2021 திமுக ஆட்சி ஸ்டாலின் முதல்வர் ). கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த பிறகு 2021 இல் நில நிர்வாக ஆணையராக இருக்கும் நாகராஜன் ஐ ஏ எஸ் 3.95 ஏக்கர் நிலத்திற்கு 1996 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் உதவி நிலவரி திட்ட அலுவலர் பட்டா வழங்கியது தவறு என்று தற்போது வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உள்ளார் இது சம்பந்தமாக ராமானுஜம் சீனிவாசன் நாயுடு
பத்துக்கு மேற்பட்ட முறை விசாரணைக்கு நேரில் ஆஜராகியும் நிலத்திற்கான எல்லா ஆவணங்களையும் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஐ ஏ எஸ் இடம் ஒப்படைத்தும் தற்போது வரை பட்டா வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக விசாரித்த போது திருத்தாங்கல் கருநெல்லிநாதர் கோவில் தர்மகர்த்தாவிடம் பெரிய தொகை கையூட்டாக பெற்றுக்கொண்டு தர்மகத்தாவிற்கு சாதகமாக நாகராஜன் ஐ ஏ எஸ் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை வைத்துள்ளனர் பாதிக்கப்பட்ட சீனிவாசன் ராமானுஜம்.
அது மட்டுமில்லாமல் சீனிவாசன் நாயுடு ,ராமானுஜம் அவர்களது வழக்கறிஞர் மார்ட்டின் விசாரணைக்கு சென்றபோது
தொடர்ந்து வழக்கை நடத்தினால் உங்கள் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டியது வரும் என்று நாகராஜன் ஐ ஏ எஸ் கூறியதாக அதிர்ச்சி தகவல் .அது மட்டும் இல்லாமல் வருவாய்த்துறை அமைச்சரே சொன்னாலும் முதல்வரிடம் புகார் கொடுத்தாலும் நான் கவலைப்பட போவதில்லை என்றும் பட்டா வழங்க உத்தரவு போட மாட்டேன் என்றும் முறைகேடாக பட்டா பெற்றுள்ளனர் ஆகையால் உங்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்து விடுவேன் என்றும் மிரட்டி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.!
இதனால் வழக்கை நடத்த முடியாது என்று ராமானுஜம் சீனிவாசகர் வழக்கறிஞர் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கேரளா முன்னணி நடிகர் மம்முட்டியிடம் பணம் கேட்கும் மிரட்டுவதாக அதிர்ச்சி தகவல்!?
2. காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்து பிரிக்கப்பட்டு தற்போது செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் கருங்குழி பள்ளம் உள்ளது.
பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூரில் இருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில், கருங்குழி பள்ளம் என்ற இடம் உள்ளது. இங்குதான்முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்குச் சொந்தமான பங்களா ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2007 இல் பழைய மகாபலிபுரம் சாலையில் புதிய விமான நிலையம் அமைக்க யோசனை தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே முக்கிய விஐபிகள் அப்பகுதியில் நிலங்களை வாங்க ஆரம்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
கருங்குழி பள்ளம் கிராம சர்வே no.40, 43 சுமார் 200 ஏக்கர் நிலம் நான்கு பேர் பெயரில் 2005 ஆம் ஆண்டில் ரமேஷ் ராம் மித்ரா ஐஏஎஸ் பட்டா வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால் தற்போது 2021 இல் நில நிர்வாக ஆணையர் நாகராஜ் ஐஏஎஸ் அந்த உத்தரவு செல்லாது என்று பட்டாவை ரத்து செய்துள்ளார் .
முன்னாள் நில நிர்வாக ஆணையர் உத்தரவினை தற்போதுள்ள நாகராஜ் ஐஏஎஸ் தன் சுயலாபத்திற்காக பட்டாவை ரத்து செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேற்படி நிலத்தின் உரிமையாளர் கேரளாவில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டி மற்றும் பலர் உயர் நீதி மன்றம் சென்று அந்த உத்தரவினை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பின் உயர் நீதிமன்றம் மம்முட்டி அவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது.
அந்த உத்தரவினை கிடப்பில் போட்டு விட்டு மேற்படி நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்காமல் நீதிமன்ற உத்தரவினை கிடப்பில் போட்டு நீதிமன்றத்தை அவமதிப்பு செய்யும் வகையில் நடந்து கொள்வதும் இல்லாமல் அவர்களை பழி வாங்கும் நோக்கில் சர்வாதிகாரியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் தனியார் நிறுவனமான DLF 2007 இல் நில நிர்வாக ஆணையராக இருந்த ரமேஷ் ராம் மித்ரா ஐஏஎஸ் நில மாற்றம் உத்தரவு வழங்கி உள்ளார்.
அந்த உத்தரவு தவறு என்று தற்போதுள்ள நில நிர்வாக ஆணையர் நாகராஜா ஐஏஎஸ் DLF நிறுவனத்தின் நிர்வாகத்திடம் 2007 இல் சுமார் 20 ஏக்கருக்கு மேல் அரசு நிலத்திற்காக நில மாற்றம் செய்யப்பட்டதில் அப்போதைய நிலத்தின் மதிப்பு குறைவாக மதிப்பீடு செய்து கொடுத்து முறைகேடு நடந்துள்ளதாகவும் ஆகையால் 200 கோடி மதிப்புள்ள அந்த இடத்திற்கு DLF நிறுவனம் இன்னும் பல கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டும் தோனியில் நில நிர்வாக ஆணையர் நாகராஜ் ஐஏஎஸ் செயல்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
நாகராஜ் ஐஏஎஸ் மீது பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் தன்னுடைய சர்வாதிகாரப் போக்கில் இருந்து கொஞ்சம் கூட குறையாமல் செயல்பட்டு வருவதாகவும் இதற்கெல்லாம் பக்க பலமாக இருப்பது தமிழக முதல்வருக்கு நம்பிக்கைக்கு உரியவரான முதன்மைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் ஆதரவுடன் தான் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டையும் எழுப்பி உள்ளனர்.
3 நில பரிவர்த்தனை )
நிலமாற்றம் நில பரிவர்த்தனைக்கு கடந்த 50 ஆண்டுகளாக (CLA )நில நிர்வாக ஆணையர் உத்தரவு போடுவார்.
கடந்த ஒரு வருடமாக நில நிர்வாக ஆணையர் நாகராஜ் ஐஏஎஸ் தன் சுயலாபத்திற்காக நில பரிவர்த்தனை குழு ஒன்றை அமைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
4. நில நிர்வாகம்
நாட்டில் தொன்மை வாய்ந்த துறை முதுகெலும்பு போல் உள்ள துறை நில நிர்வாகத் துறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் முக்கிய நில எடுப்பு பிரிவினை தன் கைவசம் வைத்து கொண்டு DRO பார்த்திபன் மற்றும் DRO ரவிக்குமார் இவர்கள் இருவரையம் தன் வசம் வைத்துக் கொண்டு பேரம் பேசுவதற்காகவே 50 ஆண்டுகளுக்கு மேல் எழிலகாகதில் இயங்கி வந்த நில எடுப்பு பிரிவு அலுவலகத்தை தேனாம்பேட்டையில் உள்ள DMS வளாகத்திற்கு கொண்டு சென்றதும் இல்லாமல் எழிலகத்தில் பணியில் இருந்த 50 பணியாளர்களை பழிவாங்கும் எண்ணத்தில் ஒட்டுமொத்தமாக நாகராஜன் ஐஏஎஸ் சர்வாதியாக நடந்து கொள்வதாகவும்
இதனால் நிலை எடுப்பு பிரிவு அலுவலகத்தில் பணியில் இருக்கும் பணியாளர்கள் அனைவரும் மன உளைச்சலில் இருந்து வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது.
கலைஞர் ஆட்சியில் இருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு வரை 55 ஆண்டுகாளலாக எழிலகத்தில் இயங்கி வந்த நில நிர்வாக அலுவலகத்தில் இருந்த நில எடுப்பு பிரிவு அலுவலகத்தை
தற்போது உள்ள நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஐ ஏ எஸ் DMS வளாகத்திற்கு மாற்றியதற்கு உள்நோக்கம் என்ன !?
5. நில நிர்வாக துறையில் பதவி உயர்வு என்ற போர்வையில் ,துறையில் சிறப்பு அந்தஸ்தில் உள்ள (VIP) கலைச் செல்வி (கண்காணிப்பாளர் )
தமிழ்ச் செல்வி (உதவி ஆணையர்)
விஜி மற்றும்
அறிவொளி வேனி (நேர்முக எழுத்தர்) இவர்கள் நான்கு பேரும் சொல்வதுதான் தான் சட்டமாம்.
இதில் பதவி உயர்வுக்கு எல்லா தகுதியும் இருக்கும் தாசில்தார் பயிற்சி முடித்துள்ள மரியா டொமினிக் ஶ்ரீதர் என்பவரை பின்னுக்குத் தள்ளி விட்டு அவருக்குப் பின்னால் உள்ள தாசில்தார் பயிற்சி முடிக்காத நபரை உதவி ஆணையாரக் பணியமர்த்த சதித் திட்டம் தீட்டியுள்ளதாக நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஐ ஏ எஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது சம்மந்தமாக விசாரித்த போது உதவி ஆணையராக இருக்கும் தமிழ் செல்வி உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் நடத்தி யார் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களை பரிசீலிப்பு செய்வார்கள் ஆனால் முற்றிலும் முரணாக எந்த வித ஆலோசனை குழு அமைத்து பரிசீலிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து பயிற்சி முடிக்காதவருக்கு பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்துள்ளார் கூடுதல் பொறுப்பில் உள்ள நாகராஜன் ஐஏஎஸ் என்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த நாகராஜன் ஐ ஏ எஸ் அவர்களை வருவாய்த்துறை உயர் அதிகாரியாக உள்ள செயலாளர் ஏன் கண்டுக் கொள்ளவில்லை
இதற்கு காரணம் என்ன என்பது ஆயிரம் மில்லியன் கேள்வியாக உள்ளது.
5. மாவட்டங்களில் இருக்கும் RDO மற்றும் DRO க்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டுள்ள நாகராஜன் ஐ ஏ எஸ்.
நில நிர்வாகம் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மூலம் தெரிவிக்காமல் நேரடியாக தன்னிடம் தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டும் என்று தொலைபேசி மூலம் கட்டளை போட்டுள்ளார் நாகராஜன் ஐ ஏ எஸ் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு சொந்தமான பொதுச் சொத்தான மெய்கால் பொறம்போக்கு இடத்தை மற்ற துறைக்கு வழங்க ஆலோசனைக் கூட்டம் நடத்தியபோது அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் செயலாளரை அழைக்காமல் நிராகரித்து விட்டு அத்துறையில் உள்ள இயக்குனரை வைத்து நிலம் வழங்க முடிவு செய்ய தனது போக்கில் அரசு நிலத்தை தவறாக பயன்படுத்த சர்வாதிகாரியாக நாகராஜன் ஐஏஎஸ் இருந்து வருவதால்
அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டு உள்ளாதாக் குற்றச் சாட்டை எழுப்பி உள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
6 . வருவாய்த் துறையின் முக்கிய பங்கான நில நிர்வாகம் , நில வரி திட்டம்,நகர்புற நில வரி, நகர் புற நில உச்சவரம்பு இத் துறையில் உள்ள உயர் அதிகாரிகளை தன் வசம் வைத்துக் கொண்டு CLA நில நிர்வாக ஆணையராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் நாகராஜன் ஐ ஏ எஸ் அவர்கள் தன்னிச்சையாக உத்தரவு போடுவதால் மேலே குறிப்பிட்டுள்ள துறைகள் அனைத்தையும் தற்போது ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் திமுக ஆட்சியில் மூடு விழா விற்கே கொண்டு சென்று விடுவாரோ என்று நேர்மையான அதிகாரிகளின் ஆதங்கமாக இருக்கிறது.
சென்னை நந்தம்பாக்கம் தனியார் நிறுவனமான DLF 2007 இல் நில நிர்வாக ஆணையராக இருந்த ரமேஷ் ராம் மித்ரா ஐஏஎஸ் நில மாற்றம் உத்தரவு வழங்கி உள்ளார். அந்த உத்தரவு தவறு என்று தற்போதுள்ள நில நிர்வாக ஆணையர் நாகராஜா ஐஏஎஸ் DLF நிறுவனத்தின் நிர்வாகத்திடம் 2007 இல் சுமார் 20 ஏக்கருக்கு மேல் அரசு நிலத்திற்காக நில மாற்றம் செய்யப்பட்டதில் அப்போதைய நிலத்தின் மதிப்பு குறைவாக மதிப்பீடு செய்து கொடுத்து முறைகேடு நடந்துள்ளதாகவும் ஆகையால் 200 கோடி மதிப்புள்ள அந்த இடத்திற்கு DLF நிறுவனம் இன்னும் பல கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டும் தோனியில் நில நிர்வாக ஆணையர் நாகராஜ் ஐஏஎஸ் செயல்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
நாகராஜ் ஐஏஎஸ் மீது பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் தன்னுடைய சர்வாதிகாரப் போக்கில் இருந்து கொஞ்சம் கூட குறையாமல் செயல்பட்டு வருவதாகவும் இதற்கெல்லாம் பக்க பலமாக இருப்பது தமிழக முதல்வருக்கு நம்பிக்கைக்கு உரியவரான முதன்மைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் ஆதரவுடன் தான் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டையும் எழுப்பி உள்ளனர்.
ஆனால் முதலமைச்சர் ஆக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் காலையிலிருந்து இரவு வரை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால் எப்படி இது சாத்தியம் என்று நாம் களத்தில் விசாரித்த போது
தற்போதுள்ள நேர்மையான தலமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் குடியிருக்கும் குடியிருப்பு வளாகத்தில் தான் நாகராஜ் ஐஏஎஸ் குடியிருக்கிறார் என்றும். இறையன்பு ஐஏஎஸ் காலை 6 மணிக்கு வாக்கிங் செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளாராம். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அதே குடியிருப்பில் வசிக்கும் நாகராஜன் ஐ ஏ எஸ் அவர்கள் இறையன்பு ஐஏஎஸ் அவர்களுடன் நடை பயிற்சி செல்வது போல் அந்த ஒரு மணி நேரத்தில் தன்னுடைய காரியங்களை சாதிப்பதற்காக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்களை தன் வசம் வைத்துக் கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலை என்று மாறும் என்ற எதிர்பார்ப்புடன் நேர்மையான அதிகாரிகளின் ஆதங்கம் ஆகும்.
எது எப்படியோ தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர் மற்றும் செயலாளர்கள் ஆணையர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசும் போதெல்லாம் மக்கள் என்னையும் அதிகாரிகளையும் நம்பி ஆட்சியை ஒப்படைத்துள்ளார்கள் ஆகவே
தன்னுடைய ஆட்சியில் தவறு செய்யும் யாராக இருந்தாலும் சர்வாதியாக செயல்படுவேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் கடந்த ஒரு வருடங்களாக காற்றில் பறக்க விட்டு தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று சர்வாதிகாரியான போக்கை நாகராஜன் ஐ ஏ எஸ் கடைபிடித்து வருகிறாரோ என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளன சமூக ஆர்வலர்கள்.
இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக முதல்வர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.