தலைமைக் கழகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு ! மன்னிப்பு கேட்க இரண்டு மணி நேரம் காரில் காத்திருந்த மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர் ! கை விட்டுப் போகும் நிவேதா முருகனின் மாவட்டப் பொறுப்பாளர் பதவி!!?
கடந்த 10/09/2022 அன்று பிறந்தநாள் கொண்டாடிய மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகனுக்கு
தலைமைக் கழகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு வாழ்த்து சொல்வதற்கு என்று சந்தோசமாக இருந்த நிவேதா முருகன் காது கிழிய வாங்கி கட்டிக் கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
மாவட்ட பொறுப்பாளர் பதவியே பறிபோகும் அளவிற்கு தலைமைக் கழகத்திலிருந்து அப்படி பேச என்ன நடந்தது என்று நமது ரிப்போர்ட்டர் விஷன் நிருபர் களத்தில் இறங்கி விசாரித்தபோது திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.
10/09/22 அன்று மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகனின் பிறந்தநாள். அன்று காலை ஆறு மணிக்கு திருக்கடையூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
நிவேதா முருகனுக்கு வலது கரமாக இருக்கும் திமுக உறுப்பினர் அட்டை இல்லாத அமிர்த விஜயகுமார் நிவேதா முகணின் பிறந்தநாளுக்கு பிரம்மாண்டமான விளம்பர பதாகைகள் வைத்து வரவேற்று இருக்கிறார்.
அதன் பின்பு வீட்டுக்குச் சென்ற நிவேதா முருகனுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் மட்டுமே நேரில் வாழ்த்து சொன்னதாகவும் தகவல் வந்துள்ளது. இப்படி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த நிவேதா முருகனுக்கு அன்று மாலையே திமுக தலைமை கழகத்திலிருந்து வந்த தொலைபேசியை ஆர்வமாக எடுத்துப் பேசிய நிவேதா முருகனுக்கு உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்து போனதாம். அப்படி என்ன தலைமைக் கழகத்திலிருந்து சொன்னார்கள் என்று விசாரித்தால் நிவேதா முருகன் பிறந்த நாளை கொண்டாட திருக்கடையூர் தருமாதினம் கோவில் வாசலில் வைத்திருந்த விளம்பர பதவியை எடுக்கச் சொல்லி தருமாதீனம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விடுதி நடத்திக் கொண்டிருக்கும் அமிர்த விஜயகுமாரிடம் பிறந்தநாள் பதாகையை எடுக்குமாறு கோவில் நிர்வாக ஊழியர்கள் கூறியதாகவும் அதற்கு அமிர்த விஜயகுமார் கோவில் நிர்வாக ஊழியர்களை தகாத வார்த்தையில் பேசியதுடன் பதாகையை எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இந்தத் தகவலை தருமாதீனம் காதிற்கு கொண்டு போக உடனே தருமாதீனம் சுவாமி திமுக தலைமைக் கழகத்திற்கு தகவல் கொடுக்க உடனே தலைமைக் கழகத்திலிருந்து மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே தருமாதீன சுவாமியை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளனர். அதைக் கேட்ட நிவேதா முருகன் மயிலாடுதுறை தருமாதீனம் மடத்தின் வாசலில் நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை இரண்டு மணி நேரம் காரில் காத்துக் கொண்டிருந்திருக்கிறார். இந்தத் தகவலை திமுக நிர்வாகிகள் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக காத்திருந்து 6:00 மணிக்கு மேல் த தருமாதீனத்தை சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும் அதன் பின்பு தலைமைக் கழகத்திற்கு தொலை பேசியில் மன்னிப்பு கேட்ட தகவலை கூறியதாகவும் தகவல் வந்துள்ளது.
திமுக தலைமைக் கழகத்தில் 15 மாவட்ட பொறுப்பாளர்களை மாற்றுவதற்கு ஆலோசனை நடந்து கொண்டுள்ள இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயளாலர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க திமுக தலைமை கழகம் முடிவு எடுத்துள்ளதாக சமூக ஊடங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில் பிறந்த நாள் அன்று இப்படி ஒரு இக்கட்டான நிலையில் நிவேதா முருகன் சிக்கிக்கொண்டது தான் மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிபோவதற்கு வலு சேர்க்கும் அளவிற்கு இந்த நிகழ்வு நடந்துள்ளதாகவும் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகனின் அதிர்ப்த்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுக் கட்சியில் இருந்த அமிர்த விஜயகுமாரை தன் சுய லாபத்திற்காக தன்னுடன் வைத்துக்கொண்டு அவருக்கு ஒன்றிய செயலாளர் பதவி வாங்கி கொடுப்பதற்கு இரவு பகலாக தலைமைக் கழக வளாகத்தில் காத்துக்கொண்டு இருந்தார் நிவேதா முருகன். ஆனால் தலைமைக் கழகத்தில் உறுப்பினர் அட்டையே இல்லாத ஒருவருக்கு எப்படி ஒன்றிய செயலாளர் பதவி கொடுக்க முடியும் என்றும் அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுக் கட்சியில் இருந்தவருக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்க முடியாது என்று நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை அந்த பகுதிக்கு ஒன்றிய செயலாளர் பதவியை தலைமை கழகத்திலிருந்து நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கும் நிவேதா முருகனை நீக்கிவிட்டு ஒருங்கிணைந்த நாகபட்டினம் மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் ஏ கே எஸ் அல்லது தேவேந்திரன் ஆகிய இரண்டு பேர்களில் ஒருவரை மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக தலைமை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.