மாவட்டச் செய்திகள்வருவாய்த்துறை

தலையாரியின் ஆடம்பர பங்களாவில் (VAO)கிராம நிர்வாக அலுவலகம்!
வருவாய்த் துறையின் அவல நிலை!
நடவடிக்கை எடுப்பாரா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!

தமிழ்நாட்டில் தற்போது நூற்றுக்கணக்கான கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலக கட்டி 25 வருடங்கள் ஆனதால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலகங்கள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

அதனால் தமிழ்நாட்டில் உள்ள பல கிராம நிர்வாக அலுவலகங்கள் தற்போது  கிராமங்களில் உள்ள அரசு நூலகம்,  இ சேவை மைய கட்டிடம், அரசு அலுவலகங்களில் செயல்பட்டு வருகிறது என்பதுதான் நிதர்சனம்.
அதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில் திருநாள் கொண்டச்சேரி கிராம நிர்வாக அலுவலகம்.

தலையாரி வீட்டில் கிராம நிர்வாகஅலுவலகம் திருநாள் கொண்டன்ச்செரி. குத்தாலம் வட்டம் மயிலாடுதுறை மாவட்டம்

கிராம நிர்வாக உதவியாளர்  நல்ல முகமது (தலையாரி )வீட்டிலேயே கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருவது தான் வேடிக்கையாக உள்ளது.
ஏனென்றால் அந்தக் காலத்தில் ஒரு பழமொழி உள்ளது தலையாரி வீட்டில் திருடன் நுழைந்தால் எப்படி இருக்கும் என்பது போல
தற்போது தலையாரி வீட்டில் VAO அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே VAO மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் நல்ல முகமது  இருவருக்கும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே எந்த வேலையும் செய்து கொடுப்பவர்கள் என்று பல குற்றச்சாட்டு பல புகார்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் குத்தாலம் வட்டாட்சியர் இந்துமதி அவர்களுக்கு  வலது இடது கரம் அனைத்தும் மருத்தூர் கிராமத்தில் (தலையாரி )கிராம நிர்வாக உதவியாளராக இருக்கும் நல்ல முகமது . இவரது மனைவி திருநாள் கொண்டச்சேரி  கிராம நிர்வாக அலுவலக உதவியாளர். இவர்கள் வீட்டில் தான் திருநாள் கொண்டச்சேரியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி கிராம பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஏனென்றால்  தலையாரி வீட்டில் கிராம நிர்வாக அலுவலகம் இருப்பதால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பொதுமக்கள் சாதாரணமாக கிராம நிர்வாக அலுவலரை  சந்திக்க முடியவில்லை என்றும் அப்படியே கிராம நிர்வாக அலுவலகம் செயல்படும் அந்த வீட்டிற்கு வரும் பொதுமக்களிடம் நல்ல முகமது மற்றும்  நல்ல முகமது மனைவி இரண்டு பேரும்  கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க முடியாது என்றும் அவர் வெளியில்  சென்றுள்ளார் என்றும் உங்களுக்கு என்ன தேவை அதை நாங்கள் முடித்துக் கொடுக்குறோம் என்று அதற்கான குறிப்பிட்ட தொகையை கையூட்டாக பெற்றுக்கொண்டு கச்சிதமாக பேசி அனுப்பி விடுவதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே கிராம நிர்வாக உதவியாளர் வீட்டில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனே லஞ்ச ஊழல் முறைகேடு நடக்கும் தலையாரி வீட்டில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகத்தை  வேறு இடத்திற்கு மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button