காவல் செய்திகள்

தீயாகப்பரவி வரும் போதை ஊசி கலாசாரம் ! சமூக விரோதிகளாக மாறிவரும் கல்லூரி படிக்கும் மாணவர்கள்!காவல்துறைக்கு சவாலாக இருக்கும் போதை ஊசி விற்பனை செய்யும் மாபியா கும்பல்களை கட்டுக்குள் கொண்டு வருவாரா மேற்கு மண்டல ஐஜி!

சமீப காலமாக தமிழக முழுவதும் உள்ள முக்கிய மாநகரங்களில்
கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை ஊசி மாத்திரைகளை விற்று வரும் வடமாநில மாபியா கும்பல்கள் தமிழக முழுவதும் ஊடுருவி இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதற்குக் காரணம் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் போதை ஊசி பயன்படுத்தி வருவதை சாதகமாக பயன்படுத்தி இந்த போதை ஊசி விற்பனை செய்யும் மாபியா கும்பல் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தற்போது மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை ஈரோடு திருப்பூர் சேலம் மாநகரங்களில் அதுவும் குறிப்பாக சேலம் மாநகரில் நாளுக்கு நாள் போதை ஊசி கலாசாரம் தீயாகப்பரவி வருகிறது. சேலம் மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கல்லூரி இளைஞர்களை குறி வைத்து போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக கடந்த ஜூன் மாதம் சேலம் மாநகர காவல் துறையினர் ஐந்து பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
போதைக்காக தூக்க மாத்திரை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை. இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தது. அதே போல், ஒருசில மெடிக்கல்களில் வலி நிவாரணி மருந்துகள் அதிகளவு வாங்கப்பட்டு, உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்ததாக தகவல் வெளியானது! போதை ஊசி விற்பனை மற்றும் போதை ஊசி பயன்படுத்தும் பழக்கத்தை தடுத்து நிறுத்த தனிப்படை காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் பலர் தடம் மாறி போதை ஊசிக்கு அடிமையாகி உள்ளனர். போதை தரக்கூடிய மாத்திரைகளை வாங்கி அதனை பொடியாக்கி, தண்ணீரில் கலந்து ஊசி மூலம் நரம்பில் ஏற்றுகின்றனர். இது உடலில் நேரடியாக கலக்கும் போது அவர்களுக்கு போதை தலைக்கேறுகிறது.
மேலும் பல மணி நேரம் இந்த போதை உடலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போதை ஊசி ரூ.100 முதல் விற்கப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. டாஸ்மாக் கடையில் மதுப்பாட்டில் வாங்கி மது அருந்தும் பழக்கம் உடையவர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களை போல போதை ஊசிக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதை ஊசி விற்கும் கும்பலின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது சேலம் மாநகரப் பகுதிகளில் போதை ஊசி விற்பனை அதிகமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போதை ஊசி மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி மண்டலம் தொங்கும் பூங்கா வளாகத்தில் சமூதாயக் கூடம் அருகில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் 6 அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டி முடிக்கப்பட்டு எப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ள நிலையில் தற்போது போதை ஊசி பயன்படுத்தும் சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த வாகன நிற்கும் இடங்களானது மாறி வருகிறது. சேலம் மாநகரில் போதை ஊசிக்கு அடிமையாகி உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வாகன நிறுத்த கட்டிடத்திற்குள் போதை ஊசியை பயன்படுத்தி வருவதாகவும் அப்படி போதை ஊசிக்கு அடிமையாகி உள்ள இளைஞர்களை வாகன நிறுத்த கட்டிட வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்தால் கத்தி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களை கொண்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாக காவலாளி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல்
அடுக்குமாடி வாகன நிறுத்தத்தின் 5 தளங்களில் எங்கு பார்த்தாலும், பயன்படுத்தப்பட்ட போதை ஊசிகள், மாத்திரை, கஞ்சா, மதுபான பாட்டில்கள்/போதை ஊசிகளை 100 முதல் 150 இளைஞர்கள் வரை பயன்படுத்தி வருவதாகவும், விற்பனை செய்வது யார் என்பது குறித்து தெரிவிக்க மருத்து வருகின்றனர். சேலத்தில் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டுவரும் கும்பலைப் பிடிப்பதில், மாநகர போலீஸார் `அதி’ தீவிரம் காட்டி வருகின்றனர். உயிருக்கு ஆபத்து போதை ஊசி பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என போலீசார், மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நரம்பில் நேரடியாக ஊசி மூலம் போதை மருந்து செலுத்தப்படுவதால் பக்க விளைவுகள் ஏற்படும் என தெரிவித்துள்ளனர் ஆகவே உடனடியாக சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையர் மற்றும் தென்மண்டல ஐஜி மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கல்லூரி படிக்கும் மாணவர்கள் நலன் கருதி போதை ஊசிக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்து வரும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் நலன் கருதி சட்டவிரோதமாக போதை ஊசி மாத்திரை தொடர்ந்து விற்பனை செய்து காவல்துறைக்கு சவாலாக இருக்கும் போதை ஊசி விற்பனை செய்யும் ஒட்டுமொத்த மாபியா கும்பல்களை கண்டுபிடிக்க மேற்கு மண்டல ஐஜி தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஒட்டுமொத்த வட மாநில கும்பல்களை கைது செய்தால் மட்டுமே சேலம் மாநகரம் மட்டுமல்ல திருப்பூர் ஈரோடு கோவை அடங்கிய மேற்கு மண்டல முழுவதும் உள்ள படித்து வேலை தேடும் இளைஞர்கள் போதை ஊசி பயன்படுத்தி வரும் கும்பலிடம் சிக்காமல் காப்பாற்ற முடியும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Back to top button