தேவைப்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்தலாம் டிஜிபியின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமில்லை! முன்னாள் பெண் காவலர் திருச்சி செல்வ ராணி
தமிழகத்தில் சிறுவர்கள் உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதனை கொன்று இருக்கிறார்கள் என்ற செய்தி கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள, நிலையில் அதில் இரண்டு சிறுவர்கள் 10 வயதுக்குள்ளே என்ற அதிர்ச்சியை நாடு முழுவதும் உண்டாக்கியது,
இந்த நிலையில்தான் இறந்த பூமிநாதன் வீட்டிற்கு டிஜிபி நேரில் வந்து அஞ்சலி மரியாதை செலுத்திவிட்டு காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடும் போது தேவைப்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று டிஜிபி வாய் மொழி உத்தரவு போட்டுள்ளார். இதற்கு முன்னாள் பெண் காவலர் செல்வி ராணி எதிர் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் காவலர் என்ற முறையில் . கருத்து …. ரோந்து பணியின் போது காவலர்கள் ஆறு தோட்டாக்களுடன் ஒரு துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், ஆபத்து வரும்போது துப்பாக்கியைப் பயன்படுத்த தயங்கக் கூடாது என்றும் கூறிய DGP அவர்களின் இந்தக் கருத்தை என்னால் ஏற்க முடியாது.
காரணம் திருடனைக் கண்கானிப்பதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கடினம் துப்பாக்கியை பாதுகாப்பது. ரோந்துப் பணிக்கு செல்லும் காவலர்கள் எல்லோரும் வாலிப காவலர்களைக் காட்டிலும் வயதானவர்கள் தான் அதிகம்.
அவர்கள் நடந்து போவதே கடினம் இதில் துப்பாக்கி எங்கருந்து தூக்கிக்கிட்டு நடக்கறது? அதிகாரிகள் கட்டளை இடுவது சுலபம் ஆனால் அதை நடைமுறையில அனுபவிக்கறது அவ்வளவு சுலபமானது இல்லவே இல்ல.
இப்ப நிறைய காவலர்கள் சுகர் பிரசர் மாத்திரை இல்லாம உயிர்வாழவே முடியாத நிலையில இருக்காங்க. மாத்திரைய போட்டா அதுவே மயக்கம் வரும் ,இதுல எங்க துப்பாக்கிய தூக்கிக்கிட்டு போறது?
துப்பாக்கிங்கறது விளையாட்டுப் பொருள் இல்ல . ஒரு பெண் குழந்தைக்கு குடுக்கவேண்டிய பாதுகாப்பைவிட அதிகமா பாதுகாக்கனும். கொஞ்சம் அசந்தா கூலிப்படையில உள்ளவனுங்க துப்பாக்கிய புடுங்கி சுட்டுப்போட்டுட்டு துப்பாக்கியவும் தூக்கிட்டு போய்டுவானுங்க.
திருச்சில சிறப்பு உதவி ஆய்வாளர் சாவுக்கு காரணமே அவர் தனியா போய் மாட்டுனதுதான். ரெண்டு பேரா போயிருந்தா நிச்சயமா செத்துருக்க மாட்டார்
இந்த கொலையில மாணவர்கள் தான் குற்றவாளி. ஏன்னா எல்லாம் போதை கஞ்சா. பள்ளிக்கூடத்துல மாணவர்கள் கஞ்சா அடிக்கிறாங்க. பெட்டிக்கடையில விற்பனையாகுது. விபச்சாரிகள் தான் முன்னாடியெல்லாம் ரோட்டுல நின்னு கூப்பிடுவாங்க ஆனா இப்ப கஞ்சா விக்கிறவன் ரோட்டுல அலையிறான்
மாணவர்கள் மத்தியில தான் கஞ்சா அதிகமா விற்பனையாகுது. அதைத் தடுக்கா விட்டால் இளைய சமுதாயமே இல்லாம போய்டும்.
இதுக்கு என்ன பண்ணலாம்ன்னா காவலர்களை அதிகமா பணிக்கு அமர்த்தனும். காவல் நிலையத்துல போதுமான காவர்கள் இல்ல. இருக்குற காவலர்களும் அதிகாரிகள் வீட்டுல போயி அடைக்கலமாகிடுறாங்க.
அந்ததந்த காவல் நிலையத்துல போதுமான ஸ்டென்த் இருக்கான்னு பார்த்து அதை நிவர்த்தி செஞ்சாலே பாதி பிரச்சனை சரியாகிடும். காவலர்கள் பற்றாக்குறையாலதான் ஓய்வே இல்லாம எல்லாரும் மன அழுத்தத்துல இருக்காங்க
தன் உயிருக்கு ஆபத்துன்னா சுடுலான்னு சட்டமே சொல்லுது.
சுட்டதுக்கப்புறம் அந்த காவலன் என்கொயரிக்கி அலைஞ்சே செத்துப் போய்டுவான்.
ரோந்து பணியில துப்பாக்கி தூக்கிக்கிட்டு அலையறதெல்லாம் மக்களுக்கும் நமக்குமான உறவு சீரழிஞ்சிடும்.
துப்பாக்கிய பாதுகாக்கறதே பெரிய மன உளைச்சலாகிடும்.
ஆகவே போதுமான காவலர்களை பணிக்கு அமர்த்தி, எங்க போனாலும் இரண்டு பேர் சேர்ந்து போக சொல்வதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.
கஞ்சா போதைக்கு அடிமையாகி இருக்கும் இன்றைய இளைஞர்கள் தவறான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடாமல் காப்பாற்றினால் பல குற்றங்கள் தடுத்து நிறுத்தலாம் என்பது தான் அனைவரின் கருத்தாக உள்ளது. காப்பாற்றுங்கள்.நன்றி.
கவி செல்வ ராணி
முன்னாள் காவலர்
திருச்சி.