நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் DRO மற்றும் முன்னாள் DRO செந்தில்குமாரி இரண்டு பேர் மீதும் ஊழல் முறைகேடு செய்ததாக தமிழக முதல்வருக்கு புகார்!

நீதிமன்ற உத்தரவாவது!
மாவட்ட ஆட்சியர் உத்தரவாவது! அரசாணையாவது! எங்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை!
லஞ்சம் கொடுப்பவர் இஷ்டபடிதான் நடவடிக்கை எடுப்போம்! என
சவால்விடும் சட்டமோசடிஅதிகாரிகள் மீது
மதுரை ஆட்சியரகத்தில் ஒழுங்குநடவடிக்கை இல்லை!
இனி மக்களுக்கு நீதி
எப்படி கிடைக்கும்!
திமுக அரசே!
ஊழல்&சட்டமோசடியை
வேடிக்கை பார்க்காதே!CBIவிசாரணைக்கு உத்தரவிடு!

மதுரை அனுப்பானடியில் குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார் .அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள சுப்பிரமணி என்பவரது வீட்டிற்கும் இடைப்பட்ட நிலத்தில்( நத்தம் புறம்போக்கு)பிரச்சனை இருந்ததாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீதிபதிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஆனால் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் அறிக்கை தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாகவும் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்து வருவதாகவும் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஊழல் தடுப்புச் சட்டப்படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முதல்வர் தனிப்பிரிவுக்கு நூறாவது முறை புகார் அனுப்பியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுப்படி அறிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க மறுத்து நீதிமன்ற உத்தரவு மற்றும் தகவல் ஆணையத்தையும் அவமதிப்பு செய்வதுடன் லஞ்சத்திற்காக சட்ட மோசடியை ஆதரிப்பதாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் பல லட்ச ரூபாய் லஞ்சம் பணம் எதிர்பார்த்து காலதாமதம் செய்து நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்வது மட்டுமில்லாமல் மாவட்ட ஆட்சியர் உத்தரவையும் காற்றில் பறக்க விட்டு அதிகாரிகளை வைத்து வீட்டின் கட்டிடத்தை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இந்த ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட தாசில்தார் அனீஷ் சத்தார், ஆய்வாளர் செல்வராஜ் நில அளவையர் ராஜாமணி கிராம நிர்வாக அலுவலர் சுருளி ஆண்டவர், மதுரை தெற்கு வட்ட துணை ஆய்வாளர் கார்த்திக் ராஜா இவர்கள் அனைவரும் மீதும் துணை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த பால குமார் என்பவர் தமிழக முதல்வர் அவர்களுக்கு நூறாவது புகார் மனு அளித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுத்தால் நீதி!மறுத்தால் அநீதி ! இதுதான் மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் எழுதப்படாத அரசு ஆணை …எனவும் இந்த லஞ்ச ஊழல் பெருச்சாளிகளின் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நூதன முறையில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் மற்றும் முன்னாள் DRO செந்தில்குமாரி அவர்கள் இரண்டு பேரை கண்டித்து போஸ்டர் அடித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி அவர்களின் அதிர்ச்சி தரும் பின்னணி.
மதுரை மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டவர் செந்தில் குமாரி. இவர் அப்போதைய வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் மூலம் நியமனம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அதிகார மையத்தின் தயவு இருந்ததால் அதிகாரியாக இருந்த செந்தில் குமாரி வசூல் வேட்டையில் புகுந்து விளையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தவொரு கோப்பாக இருந்தாலும் கமிஷன் வெட்டினால் தான் கையெழுத்து என்று கறாராக இருந்திருக்கிறார்.
இது சக அதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும் மேலிடத்தின் தயவு இருந்ததால் வாய் மூடி மவுனம் காத்து வந்தனர். மேலும் பணியிட மாற்றத்திற்கான காலவரம்பை தாண்டியும் ஒரே இடத்தில் செந்தில் குமாரி நீடித்துள்ளார்.கடந்த2022 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி மாவட்ட வருவாய்த்துறை சார்ந்த அதிகாரிகள் 32 பேரை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் முக்கிய உத்தரவு பிறப்பித்தார். இந்த இடமாற்றத்தில் செந்தில் குமாரியின் பெயர் இடம்பெற்றிருந்தது. இவர் தஞ்சாவூர் குருங்குளம் தேசிய சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.பணியிடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவு வந்த பிறகு, எப்படி ஊழியர்களுக்கு பணியிடமாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். இதுபற்றி விஷயம் தெரிந்தவுடன் டி.ஆர்.ஓவிடம் தனது அதிருப்தியை மாவட்ட ஆட்சியை அனீஸ் சேகர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ”உங்கள் உத்தரவை ஏற்க முடியாது” என்று செந்தில் குமாரிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதனால் வேறு வழியில்லாத செந்தில் குமாரி, தான் பிறப்பித்த உத்தரவை மறுநாளே ரத்து செய்துவிட்டு கிளம்பி சென்றுள்ளார். இப்படி ஒரேநாளில் அதிரடி மாற்றத்திற்கு வித்திட்ட ஆட்சியர் அனீஸ் சேகரை பலரும் பாராட்டியுள்ளனர்.

ஆனால் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் நிலை எடுப்பு கோட்டாட்சியர் இவர்கள் செயல்பாடு பற்றி பொதுமக்களிடம் அதிருப்தி அளிக்கும் வகையில் தான் உள்ளது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து வாரிசு அடிப்படையில் பட்டா கேட்டு மூன்று வருடங்களாக காத்திருந்து சில மாதங்களுக்கு முன்பு விசாரணை என்ற பெயரில் கடமைக்கு விசாரணை செய்துவிட்டு எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்காமல் பட்டாவும் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாகவும் மதுரை மாவட்ட கோட்டாட்சியர் சுகி பிரேமலதா மமீது பல புகார்கள் வந்துள்ளது.