பட்டபகலில் இரு இளைஞர்கள் ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டதால் அச்சத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்! நடவடிக்கை எடுப்பாரா? கோவை மாநகர காவல் ஆணையர்!
கோவை,பொள்ளாச்சி சாலையில் உள்ள சுந்தராபுரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே,பட்டபகலில் பொது மக்கள் மத்தியில் திடீரென இரு இளைஞர்கள் ஆயதங்களுடன் மாறி மாறி தாக்கி கொண்டனர், தொடர்ந்து கற்களை வீசியும் அப்பகுதியை பதட்டம் அடையை செய்தனர்,
இதனை கண்ட பொது மக்கள் பதறிய போயினர், சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் சமித்து நின்றது, இதனை கண்ட சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர் அதற்குள் இருவரும் தப்பி ஓட்டம் பிடித்தனர், போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்,மேலும் ஆயதங்களுடன் மோதி கொண்ட இருவருக்கும் முன்விரோதம் இருக்கிறதா ? ,மது போதையில் சண்டை போட்டார்களா என சம்பவ இடத்தில் விசாரித்து வருகின்றனர்,இளைஞர்கள் மோதலால் அப்பகுதி பதட்டமாக காணபட்டது, இளைஞர்கள் மோதிக்கொண்டதை செல் போனில் படம் பிடித்த சிலர் சமூக வலை தளங்களில் பதிவிட்டனர், தற்போது அந்த காணொளி காட்சி வைரலாகி வருகின்றது.