உயர் கல்வித்துறை

பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் குழுவின்  விதிகளை  மீறி  ஆசிரியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை தராமல்  மோசடி செய்து வருவதாக கோவை VSB கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார்!

கோவை வி எஸ் பி பொறியியல்  கல்லூரியில் பணியில் சேரும்போது   கட்டாயப்படுத்தி பத்திரம் எழுதி வாங்குவதாக கல்லூரி நிர்வாகம் மீது புகார்!


தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில்
கல்லூரி நிர்வாகங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளை மீறி தனிச்சையாக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில்,
தனியார் கல்லூரிகளில் போதுமான பேராசிரியர்கள் இல்லாத நிலையில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அவ்வப்போது குற்றச்சாட்டுகள் வைக்கப்படும்  இந்நிலையில்
பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்றும், இது  கல்லூரியின் தரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது என்கின்றனர் கல்வியாளர்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வருடத்திற்கு ஒரு முறை சி.ஏ.ஐ. பிரிவு தனியார் கல்லூரிகளுக்கு ஆய்வுக்காக செல்வது வழக்கம்.

கல்லூரிகளில் (Anna University’s Central Academic Inspection (CAI) unit  ஒரு பாட பிரிவு ஆய்வு நடத்தும்போது அந்தக் கல்லூரிகளில் 1:2:6 எனும் விகிதாச்சாரப்படி பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என பணியாற்றுகிறார்களா? அந்த கல்லூரியில் போதுமான லேப் இருக்கின்றதா? அதில் இருக்கும் பேராசிரியர்கள் பி.எச்.டி முடித்தவர்களா? அப்படி என்றால் எந்தக்கல்லூரியில் முடித்தவர்கள்? அவர்களின் யூனிக் ஐடி சரியாக உள்ளதா? என்கிற முழு விவரங்ளையும் சரிபார்த்த பிறகே அந்த வருடத்திற்கான மாணவர்கள் சேர்கைக்கு அனுமதி அளிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகம், சி.ஏ.ஐ. பிரிவின் மூலம், மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சி பணிகளை துரிதப்படுத்துதல், தரவு பகுப்பாய்வு செய்தல் போன்ற பணிகளைச் செய்கிறது.  .
ஆனால் ஒரு சில தனியார் கல்லூரிகள் அரசியல் பின்புலத்தில் நடத்தி வரும் நிலையில்
கல்லூரி  நிர்வாகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில்  சட்ட விதிகளை மீறி பல முறைகேடுகள் நடப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்குச் சான்றாக 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வி எஸ் பி கல்லூரியில் பேராசிரியர்கள் துணை உதவி பேராசிரியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரிகள் ஆகிய பணிகளுக்கு நியமனம் செய்யும்போது (1)குறைந்தது 10 வருடம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும்

(2)கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிய வேண்டும்.

(3)ஒரு வேலை குடும்ப சூழ்நிலை மற்றும் உடல்ரீதியாக பாதிக்கப் பட்டவர்கள்  கல்லூரியில் தொடர்ந்து பணிபுரிய முடியாத நிலையில் பணியை  விட்டு செல்லும்போது 

(4)ஆறு மாதம் சம்பளம் கொடுக்க வேண்டும்  அப்படி கொடுத்தால் மட்டுமே கல்வி சான்றிதழ்கள் மற்றும் முந்தைய நிர்வாகத்தில் பணி செய்த  அனுபவ சான்றிதழ் வழங்கப்படும் என பல நிபந்தனைகளுடன்  கட்டாயப் படுத்தி பத்திரம்  எழுதி வாங்கியதாகவும்

கோப்புப்படம்

அதை காரணமாக வைத்து 8 மாதம் சம்பளத்தில் மாதம் 20 ஆயிரம் வீதம் பிடித்தம் செய்யப்பட்ட மொத்தம் 1.60,000 ஆயிரம் ரூபாய்   பாக்கியை கோவை  VSB கல்லூரி நிர்வாகம் தராமல் மோசடி செய்வதாக கோவை வி எஸ் பி கல்லூரியில் வேலைவாய்ப்பு அதிகாரியாக பணி செய்த கி.முரளிதரன்  தமிழக முதல்வர் , உயர்கல்வித்துறை அமைச்சர்
கோவை மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகியோருக்கு புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டப்படும் வி எஸ் பி கல்லூரியின் நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் இறையன்பு அழைத்து  மாணவர்களிடம் உரையாற்ற வைத்திருப்பது தான் வேதனையாக இருப்பதாக பேராசிரியர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்


இந்த புகார் மனுவில் தெரிவித்திருப்பது என்னவென்றால்
கி.முரளிதரன்
வேலை வாய்ப்பு அதிகாரி (NH – 209   Ealur Pirivu, Pollachi Main Rd, Solavampalayam,   covai dstirct ) VSB பொறியியல் கல்லூரி
கிணத்துக்கடவு (தாலுகா)
கோவை (மாவட்டம்) – 642109
பெறுநர்:
1. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம்,
சென்னை.
2. உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், கோவை.
3. உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், கோவை.
4. உயர்திரு பதிவாளர் அவர்கள், அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை.
5. உயர்திரு காவல் ஆய்வாளர் அவர்கள், காவல் நிலையம், கிணத்துக்கடவு.
பொருள்: பல்கலைக்கழக விதிகளை மீறி செயல்படும் VSB கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எனது சம்பள நிலுவைகள், எனது படிப்பு சான்றிதழ் ஆகியவற்றை பெற்று தரக் கோரியும், என்னை சட்டவிரோதமாக கையெழுத்திட கட்டாயப்படுத்தியமைக்கு நீதி வழங்க கோரியும்

ஐயா,

கீழ்கண்ட இணைப்புகளை 16-4-2025 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளின் இயக்குனர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புகார் ஆக தெரிவித்தேன்.

PDF இணைப்பு – 1: நான் சமர்ப்பித்த ராஜினாமா கடிதம்

PDF இணைப்பு -2: சர்ச்சைக்குரிய பணி நியமன ஆணை


PDF இணைப்பு-3: முதல் 8 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் எனது சம்பளத்தில் இருந்து VSB கல்லூரி ரூ.20,000 பிடித்தம் செய்யப்பட்டதற்கான ஆதாரம்.


PDF இணைப்பு-4: சம்பள நிலுவைத் தொகையை கோரி முதலாவது கோரிக்கை கடிதம் 29-2-2024 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

PDF இணைப்பு-5: சம்பள நிலுவைத் தொகையை கோரி இரண்டாவது கோரிக்கை கடிதம் 6-6-2024 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.


PDF இணைப்பு-6: நான் பணியில் சேர்ந்த தேதியில் (27-9-2023) VSB கல்லூரி நிர்வாகம் என்னிடம் இருந்து கட்டாயப்படுத்தி வாங்கிய UNDERTAKING LETTER (Page-1)


PDF இணைப்பு-7: நான் பணியில் சேர்ந்த தேதியில் (27-9-2023) VSB கல்லூரி நிர்வாகம் என்னிடமிருந்து கட்டாயப்படுத்தி வாங்கிய UNDERTAKING LETTER (Page-2)


PDF இணைப்பு-8: மாதிரி ஆவணம் ஒன்றை முன் வைத்து, அதை போல் EPF வேண்டாம் என்று என்னிடமிருந்து கட்டாயப்படுத்தி வாங்கினர்


PDF இணைப்பு-9: மாதிரி ஆவணம் ஒன்றை முன் வைத்து, அதை போல் எனது முந்தைய நிர்வாகம் எனக்கு EPF வசதி எதுவும் ஏற்பாடு செய்யவில்லை என்று என்னிடமிருந்து கட்டாயப்படுத்தி வாங்கினர்


PDF இணைப்பு-10: எனது முந்தைய நிர்வாகம் எனக்கு EPF வசதி ஏற்பாடு செய்து கொடுத்ததற்கான ஆதாரம்.


PDF இணைப்பு-11: 3 மாத சம்பளத்தை செலுத்த கட்டாயப்படுத்தி கடிதம் வாங்கினர்.

மேற்கூறிய PDF இணைப்புகளை 16-4-2025 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் சம்மந்தப்பட்ட அதிகாரியின் கவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாகவும்
பல மாதங்களாக எனது சம்பள நிலுவையான ரூ.1,60,000/- தர மறுத்த VSB கல்லூரி நிர்வாகம், மறுபக்கம் நான் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவும், என்னை 3 மாத சம்பளத்தையும் செலுத்திவிட்டு போகும் படி அழுத்தம் கொடுத்தனர் என்றும்
ஆகவே VSB கல்லூரி நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நான் 16 ஏப்ரல் 2025 அன்று மின்னஞ்சல் மூலம் அண்ணா பல்கலைகழக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சேர்த்தேன் என்றும்
எனது மின்னஞ்சல் விவரங்களை, அண்ணா பல்கலைகழக அதிகாரிகள் 21 ஏப்ரல் 2025 அன்று VSB கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்கு அனுப்பி விளக்கம்  கேட்டதன் பின்னர் என் சம்பள நிலுவையான ரூ.1,60,000/- தொகையை, VSB கல்லூரி நிர்வாகம், என் ராஜினாமா கடிதத்தை மையமாக வைத்து, நான் அவர்களுக்கு செலுத்த வேண்டிய 3 மாத சம்பளத்தோடு ஈடு செய்வதாக சொல்லி, கீழ்கண்ட 2 கடிதங்களை [PDF இணைப்பு-12 & PDF இணைப்பு-13] 21.4.2024 மற்றும் 23.4.2025 ஆகிய தேதிகளில் என்னிடமிருந்து கட்டாயப்படுத்தி சட்டவிரோதமாக வாங்கியதாகவும்
பொதுவாக ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கும் போது, குறைந்தபட்சம் 3 மாத அறிவிப்பு காலம் (Notice Period) என்பது நடைமுறை.

எனவே 29 மார்ச் 2025 அன்று ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த நான், 29 ஜூன் 2025 வரை பணியாற்ற தயாராக இருந்தேன் .


21 ஏப்ரல் 2025 அன்று எனது உறவினர் ஒருவர் முதுமை காரணமாக இயற்கை எய்தினார் . இதனால் மறுதினம் (22 ஏப்ரல் 2025) விடுப்பு கோரினேன் .

ஆனால் VSB கல்லூரி நிர்வாகம் எனக்கு விடுப்பு தர மறுத்து, என்னை 21 ஏப்ரல் 2025 அன்று பணி நிறைவு செய்து முடித்தது.

மேலும் 2025 ஏப்ரல் மாத 1 முதல் 21 தேதியின் சம்பளத்தையும்  தர மறுத்து, அவர்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் விதமாக கீழ்கண்ட 2 கடிதங்களை என்னை வலுக்கட்டாயப்படுத்தி பெற்றுக் கொண்டனர் .


PDF இணைப்பு-12: சம்பள நிலுவை எதுவும் இல்லை என்று என்னை வலுக்கட்டாயப்படுத்தி 21.4.2025 அன்று கடிதம் வாங்கினர்கள்.


PDF இணைப்பு-13: சம்பள நிலுவை எதுவும் இல்லை என்று என்னை வலுக்கட்டாயப்படுத்தி மீண்டும் 23.4.2025 அன்று கடிதம் வாங்கினர்கள் .


மேலும் நான் இந்த VSB கல்லூரியில் பணி புரிந்த காலத்துக்கான சேவை சான்றிதழ் மற்றும் எனது படிப்பு சான்றிதழ்கள் மற்றும் முந்தைய நிர்வாகங்களில் பணி புரிந்தமைக்கான சேவை சான்றிதழ்கள் ஆகியவற்றையும் தர மறுத்து வீண் அலைச்சலும் மன உளைச்சலையும் கல்லுரி நிர்வாகம் ஏற்படுத்தியது.


விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோ-டேட்டா படிவத்தை சமர்ப்பிக்கும் முன் சேவை – பத்திரம் அல்லது சேவை – ஒப்பந்தம் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்.

சேவை – பத்திரம் அல்லது சேவை – ஒப்பந்தம் என்ற வார்த்தைகள் விண்ணப்பப் படிவத்தில் முக்கிய வார்த்தைகளாக இருக்கும்.


ஆனால் இந்த VSB நிர்வாகம் கையாளும் தந்திரம் என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்டால் எங்கள் சேவை ஆண்டுகள் குறித்து அவர்கள் சாதாரணமாக ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் எந்த எண்ணுக்கு பதிலளித்தாலும், அதை ஒரு சேவை – பத்திரமாக மாற்றுகிறார்கள்.

VSB நிர்வாகத்தால் மட்டும் எப்படி இத்தகைய தந்திரமான மூளை சாத்தியமாகும் என்பதை அலசி ஆராய்ந்து பார்த்தால், அறங்காவலர்கள் அதாவது தந்தை (நிறுவன தலைவர் B.Sc. LLB) மற்றும்  (செயலாளர் BA, BL) சட்டம் பயின்றவர்கள்  என்பதாலையோ தனிப்பட்ட காரணங்களிலோ அல்லது குடும்ப சூழ்நிலைகளிலோ ஊழியர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளின் எண்ணிக்கையை முடிக்க முடியாவிட்டால், VSB நிர்வாகம் பல்வேறு அழுத்தத்தை கொடுத்து அனைத்து வகையான சிரமங்களையும் ஏற்படுத்துகின்றனர்.

இதனால் பறிமுதல் செய்யப்பட்ட கல்விச் சான்றிதழ்கள் மற்றும் முந்தைய நிர்வாக சேவைச் சான்றிதழ்களை
விடுவிப்பதற்காக 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை சம்பளத்தை செலுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களை அச்சுறுத்தி வருவதாக வி எஸ் பி கல்லூரி நிர்வாகத்தின் மீது   குற்றச்சாட்டை வைக்கின்றனர்., பல ஆண்டுகளாக பல அப்பாவி ஊழியர்களிடமிருந்து  VSB கல்லூரி நிர்வாகத்தால் பல லட்சம் முதல் கோடி வரை பணம் வசூல்  செய்திருக்கலாம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆகையால் உயர் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்
VSB கல்லூரியின் நிர்வாகத்தின் மீது ஆய்வுக்கும் விசாரனைக்கும் உட்படுத்தி கல்லூரி நிர்வாகத்தில் ஏதாவது சட்ட விதி மீறல்கள் நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான பேராசிரியர்களின் சான்றிதழ்களை மீட்டு தரக் கோரியும்,
பல்கலைக்கழக விதிமுறைகளையும், தமிழக அரசின் விதிமுறைகளையும், இந்திய அரசின் சட்டத்தையும், நீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காமல் அவமதிப்பு செய்து வரும் VSB பொறியியல் கல்லூரியின் தன்னாட்சி உரிமத்தை ரத்து செய்து திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் சம்பந்தமாக

வி எஸ் பி கல்லூரி நிர்வாக செயலாளர் விஜய் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது 8 மாதம் வரை 40,000 சம்பளம் என்றும் அதன் பின்பு 60,000 ரூபாய் சம்பள உயர்வு கொடுத்ததாகவும்  கூறினார்.ஆனால் முரளிதரன் மாதம் 20 ஆயிரம் விதம் 8 மாதமாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் பிடித்தம்  செய்யப்பட்டதாகவும்  ஆனால் வி எஸ் பி கல்லூரி நிர்வாகத்தில் சம்பள பாக்கி இல்லை என கட்டாயப்படுத்தி பாண்ட் பேப்பரில் எழுதி வாங்கியதாக கூறுவது தவறு என்றும் சம்பளத்தை திருப்பி கல்லூரி நிர்வாகம் வழங்க மறுப்பதாக புகார் தெரிவித்திருப்பது உண்மையல்ல என்றும் இது சம்பந்தமாக கல்லூரி  நிர்வாகத்தில் இருப்பவர்களுடன் ஆலோசனை செய்து என்ன நடந்தது என தெரிவிக்கிறேன் என மூன்று தினங்களுக்கு பின் கூறுகிறேன் என தெரிவித்தார். ஆனால் ஒரு வாரம் ஆகிய முரளிதரன் சம்பளம் பாக்கி புகார் பற்றி வி எஸ் பி கல்லூரி நிர்வாக செயலாளர் விஜய் எந்த தகவலும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்: பல்கலைக்கழக பதிவாளர் எச்சரிக்கை!

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2025-26 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை அங்கீகாரம் பெற ஜனவரி 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் எந்த ஒரு அறிவிப்புமின்றி சஸ்பெண்ட் அல்லது திரும்பப் பெறப்படும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. மேலும், அகில இந்திய தொழில் நுட்பக்குழுவின் விதிகளின் 6 வது அல்லது 7 வது சம்பளக்குழுவின் பரிந்துரையின் படி சம்பளம் கட்டாயம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.அண்ணா பல்கலைக் கழகத்தின் 2024-25 ம் கல்வியாண்டில் 433 தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளது. அந்த கல்லூரிகள் ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும். கல்லூரிகள் அளிக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையில் பல்கலைக் கழகத்தினால் நியமிக்கப்படுமு் குழு ஆய்வு செய்து, பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதியை வழங்கும்.இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது; 2025-26 ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தை பெறுவதற்கும் தொழில்நுட்ப படிப்புகளில் இளங்கலை, முதுகலைப் படிப்பிற்கு அனுமதி பெறுவதற்கான நிபந்தனைகள் குறித்து https:https://www.annauniv.edu/cai/index.php என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். பொறியியல் கல்லூரிகள் அனுமதி பெறுவதற்கு ஜனவரி 31 ந் தேதி வரையில் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.எனினும் அபராதத்துடன் பிப்ரவரி 7ந் தேதி வரையில் ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் https://www.annauniv.edu/cai/index.php என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விபரம் ஏற்கனவே பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு, ஆதார் எண் பயன்படுத்தி ஒருங்கிணைந்த அடையாள எண் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், புதியதாக சேர்க்கும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் மூலம் இணைக்கப்பட்ட ஒருங்கிணைந்த அடையாள எண் பெற வேண்டும். ஒவ்வொரு ஆசிரியர்களின் சுயவிபரங்களையும் அவர்களின் தற்பொழுதைய செல்போன் எண், முகவரியுடன் சுய கையொப்பம் பெற்று அளிக்க வேண்டும். விதிகளின் படி ஆய்வக வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி மற்றும் அனுபவம் பெற்றிருப்பதுடன், பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் விதிகளின் 6 வது அல்லது 7 வது சம்பளக்குழுவின் பரிந்துரையின் படி சம்பளம் கட்டாயம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களின் விபரங்கள் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றை ஆய்வு செய்யப்படும்.தனியார் பொறியியல் கல்லூரிகள் தேசிய தரவரிசை எண் (NIRF ) எண்ணைப் புதுப்பிக்க வேண்டும். பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் மேலாண்மை கல்லூரிகளின் முந்தைய 3 ஆண்டுகளுக்கான வருடாந்திர செலவு விவரங்கள், பிஇ ,பிடெக், பிஆர்க் படிப்புகளில் கடந்த 4 கல்வி ஆண்டுகளில் படித்த மாணவர்களின் விபரம், M.E/M.Tech/M.B.A/M.CA/M.Arch முதுகலைப் படிப்பில் உள்ள மாணவர்களின் விபரத்தையும் இணைக்க வேண்டும்.ஆன்லைன் விவரங்களை ஆய்வு செய்து இணைப்பு அங்கீகாரம் வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். கல்லூரிகள் ஆன்லைன் மூலம் சமர்பித்த விவரங்களை கல்லூரிகளால் சாப்ட் காப்பி மற்றும் பேப்பரிலும் எடுத்து பராமரிக்கப்பட வேண்டும். பல்கலைக் கழகம் கேட்கும் போது கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தில் கல்லூரியின் முதல்வர் மற்றும் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட வேண்டும்.ஆன்லைன் விவரங்களை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்காத தனியார் கல்லூரிகளுக்கு 2025-26 கல்வியாண்டிற்கான இணைப்பு வழங்குவதற்கு எந்த சூழ்நிலையிலும் பரிசீலிக்கப்படாது. முதுகலைப் பாடத்திட்டத்திற்கு Ph.D உடன் ஒரு பேராசிரியர் அல்லது இணைப் பேராசிரியர் அந்தத் துறையின் தகுதி கட்டாயம், தவறினால் அந்த இணைப்பு நீட்டிக்கப்படாது. தேவையான தகவல்களை அளிக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது திரும்பப் பெறப்படும்.பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விவரங்களும் தங்களுக்குத் தெரிந்தபடி உண்மையானவை என்பதையும், அதில் எந்தப் பகுதியும் தவறானது அல்ல என்பதையும் உறுதிசெய்யும் வகையில், அறக்கட்டளையின், நிறுவனத்தின் தலைவர், செயலாளரால் ஒரு பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது


எது எப்படியோ ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி மற்றும் அனுபவம் பெற்றிருப்பதுடன், பல்கலைக் கழக மானியக்குழு மற்றும்அகில இந்திய தொழில் நுட்பக்குழுவின் விதிகளின் 6 வது அல்லது 7 வது சம்பளக்குழுவின் பரிந்துரையின் படி சம்பளம் கட்டாயம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் .

கல்லூரியை நம்பி குடும்பத்துடன் கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஊதியத்தை கல்லூரியின் நிர்வாகம் முழுமையாக  வழங்க வேண்டும். அப்படி வழங்காமல் பிடித்தம் என்ற பெயரில் ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து வைத்து அதை கொடுக்காமல் இருக்கும்  கல்லூரி நிர்வாகத்தின்  மீது உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.






.

Back to top button