பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் குமாரபாளையம் திமுக நகர் மன்ற தலைவர் விஜய் கண்ணன் பேசும் ஆடியோ!
மாவட்ட பொறுப்பு கொடுக்காவிட்டால் 10 கவுன்சிலர்களுடன் அதிமுகவில் சேர போவதாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரை மிரட்டி வரும் குமாரபாளையம் திமுக நகர் மன்ற தலைவர்!
பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.இல்லை என்றால் 10 டாஸ்மாக் பார் எப்படி கைப்பற்றுவது குமாரபாளையம் நகர் மன்ற தலைவர் விஜய் கண்ணன் பேசிய வைரல் ஆடியோ.
நாமக்கல் மாவட்ட திமுகவை பொறுத்தவரை கிழக்கு, மேற்கு என இரண்டாக உள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக ராஜேஷ் குமாரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக மதுரா செந்தில்குமார் உள்ளனர்.
நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் மீது உள்ள அதிருப்தியால், முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அ.தி.மு.க-வில் இணையப் போவதாக குமாரபாளையம் நகர் மன்ற தலைவர் விஜய கண்ணன் .
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன.
முன்னாள் அதிமுக அமைச்சர் பி.தங்கமணியின் சொந்த தொகுதியாகும்.திமுகவில் ‘சீட்’ கிடைக்காத அதிருப்தியில் விஜய்கண்ணன் என்பவர் தான் மட்டுமன்றி தனது ஆதரவாளர்கள் 15 பேரை சுயேச்சையாக களம் இறக்கினார். அதில் 9 பேர் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் பதவிக்காகதி.மு.க., அ.தி.மு.க., சுயேச்சை கவுன்சிலர்களுக்கு கொடுப்பதை கொடுத்து சரி செய்து 18 ஓட்டுகள் பெற்று சுயேச்சை உறுப்பினர் விஜய் கண்ணன் நகர்மன்ற தலைவர் ஆனது குறிப்பிடத்தக்கது.
சுயேச்சை நகர் மன்ற தலைவராக இருந்த விஜய் கண்ணன்
மதுரா’ செந்திலிடம் நெருக்கம் காட்டி, உதய நிதியைச் சந்தித்து திமுக கட்சியில் சேர்ந்தார். அதோடு, அதற்கு விசுவாசமாக ‘மதுரா’ செந்திலுக்கு, விஜய்கண்ணன் புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றை க வாங்கி பரிசாக வழங்கினார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், மாவட்டச் செயலாளர் பதவி கிடைப்பதற்கு முன்பு, ‘மதுரா’ செந்தில் வகித்து வந்த மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவியைக் குறிவைத்து, விஜய் கண்ணன் செயல்பட்டார். அந்தப் பதவியை அவருக்கு வாங்கித்தர ஆரம்பத்தில் ‘மதுரா’ செந்திலும் ஆர்வம் காட்டினார்.
ஆனால் கே.எஸ்.மூர்த்தி (தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர்)
கே.எஸ்.மூர்த்தி (தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர்)
நா.ராஜமுருகன்
ஆனால், அதன் பிறகு விஜய் கண்ணனும் தனக்குப் போட்டியாக கட்சியில் வளர்ந்து விடுவாரோ என்று நினைத்த ‘மதுரா’ செந்தில், மேற்கு மாவட்ட இளைஞரணிப்பதவியை தன் உதவியாளரான பாலாஜிக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு விஜய்கண்ணனை சமாதானம் செய்ய அவருக்கு மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவர் பதவியை வாங்கிக் கொடுத்தார். ஆனால், குமாரபாளையம் வடக்கு நகரச் செயலாளர் அல்லது நாமக்கல் தி.மு.க மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவியை எதிர்பார்த்திருந்த விஜய் கண்ணன், அது கிடைக்காத கோபத்தில் தனக்கு ஆதரவான 9 கவுன்சிலர்களோடு அ.தி.மு.க-வுக்கு செல்லப் போவதாக விரட்டி வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், விஜய்கண்ணனைப் பற்றி நன்கு அறிந்த இன்னும் சிலர், “விஜய் கண்ணன் ரியல் எஸ்டேட் தொழிலில் பெரும் புள்ளி. இவர், முதலில் தி.மு.க-வில் இருந்தார். ஆனால், பதவி எதுவும் கிடைக்கவில்லை. அதனால், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பத்து மாதங்களுக்கு முன்பு, பா.ஜ.க-வுக்குத் தாவி, அந்தக் கட்சியின் மாவட்ட வர்த்தக அணித் தலைவராகப் பதவி வகித்தார். ஆனால், அப்போது அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த தங்க மணியோடு, நிலம் அப்ரூவல் வாங்குவது சம்பந்தமாக விஜய் கண்ணனுக்கு முட்டிக் கொண்டது. அதற்கு பா.ஜ.க தரப்பு தனக்கு உதவவில்லை என்ற கோபத்தில் ஆறு மாதங்கள் கழித்து, தி.மு.க-வுக்கு வந்தார். ஆனால், அங்கு யாரும் அவரை அங்கீகரிக்கவில்லை. ஆன்லைன் மூலம் உறுப்பினரானேரே தவிர, முறையாகக் கட்சியில் சேர்ந்து உறுப்பினர் அட்டை வாங்கவில்லை.
அ.தி.மு.க தரப்பிலிருந்து, நல்ல பதவி தருவதாகக் கூறி அழைக்கிறார்கள். நான் தி.மு.க-வில் உண்மையாக உழைத்தேன். சுயேச்சையாக ஜெயித்தாலும், தி.மு.க-வில் இணைந்து, குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியை தி.மு.க வசமாக்கக் கடுமையாகப் பாடுபட்டுவருகிறேன். அதற்காக, குமாரபாளையம் வடக்கு நகரச் செயலாளர் பதவி அல்லது தி.மு.க மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி என ஏதோ ஒரு பதவியை எதிர்பார்த்தேன். ஆனால், மாவட்டச் செயலாளர் என்னை அடிமையாக வைத்திருக்க நினைத்தார். நான் கேட்காத, மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொடுத்தார். அதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த நிலையில், என்னுடைய ஆதரவு கவுன்சிலர்கள் 9 பேர், ‘ மரியாதை தராத, மாவட்டச் செயலாளர் இருக்கும் கட்சியில் நமக்கு என்ன வேலை… கட்சி மாறுவோம்’ என்று சொன்னார்கள். ‘திறமையானவர்கள் பதவிகளை மறுத்தால், அதன் பிறகு முட்டாள்களால் ஆளப்படுவது தான் அவர்களின் தலைவிதி’ என்ற வாசகத்தையும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து, கட்சி மாறப்போவதாக அறிவித்தேன். இதற்கிடையில், அ.தி.மு.க தரப்பிலிருந்து என்னிடம் பேசினார்கள். அதனால், முன்னாள் அமைச்சர் தங்கமணியையே நேராகப் போய் சந்தித்தேன். ‘நல்ல பதவி தருகிறோம். அ.தி.மு.க-வுக்கு வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார். நான் பதவிக்காக அலைய வில்லை.
‘ ஆனால், தான் நினைத்த பதவி கிடைக்கவில்லை என்பதற்காக, அவருக்கு ஏணியாக உதவிய ‘மதுரா’ செந்தில் மீது பொய்ப் புகார்களைச் சொன்னதோடு, தற்போது கட்சி மாறப் போகிறேன் என்று மிரட்டி வருகிறார். பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் விஜய் கண்ணன்.