பல நாட்களாக குண்டும் குழியுமாக இருக்கும் சாலையின் அவல நிலை! வாகன ஓட்டிகள் அவதி! சீர் செய்யாமல் கிடப்பில் போட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்! நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சி பஸ் நிலையம் பின்புறம் மீன் மார்க்கெட் மற்றும் தனியார் பள்ளி தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் வழியில் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் சேதம் அடைந்து பல மாதங்களாக இருப்பதாகவும் இதனால் அந்த சாலை வழியே இருசக்கர வாகனங்களில் செல்ல மிகவும் சிரமப்படுவதாகவும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ரிப்போர்ட்டர் விஷன் புலனாய்வு பத்திரிக்கை நிருபர் சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று

சாலை சேதமடைந்துள்ள இடத்தின் புகைப்படத்தை காண்பித்து பொதுமக்கள் நலன் கருதி ஒன்றும் குழியுமாக சேதம் அடைந்துள்ள சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். சின்னாளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்
ஒரு சில நாட்களில் சரி செய்வதாக கூறி சாலையில் சேதம் அடைந்த கழிவுநீர் வாய்க்காலை சிமெண்ட் சிலாப் வைத்து மூடி வைத்தனர் . ஆனால் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சிலாப் மீது வாகனங்கள் சென்றதால் தற்போது மீண்டும் சாலை சேலம் அடைந்து இருப்பதால் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாமலும் அதேபோல் அப்பகுதியில் உள்ள தனியார் அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும் குறிப்பாக அப்பகுதியில் அரசு டாஸ்மாக் இருப்பதால் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வரும் போதை ஆசாமிகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் சென்று வருவதாகவும் ஆகவே பொதுமக்கள் நலன் கருதி சாலையில் சேதமடைந்து குண்டும் புலியும் ஆக இருக்கும் இடத்தை சின்னாளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் உடனே சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை!