காவல் செய்திகள்
பழனி சுற்றுவட்டார பகுதியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தி வந்த கும்பல்! சுற்றி வளைத்து கைது செய்த பழனி தனிப்படை காவல்துறையினர்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் உட்கோட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் கார்களில் ரேஷன் அரிசி கடத்துவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததன் அடிப்படையில் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரரில் தனிப்படைகாவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இரு சக்கர வாகன மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சுமார் 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் காவல்துறையினர் செய்து நான்கு பேரை கைது செய்தனர்.
மற்றும் இரண்டு பேரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்!